For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏபிஜெ அப்துல்கலாம் பிறந்தநாள் - பஹ்ரைனில் அன்னை தமிழ் மன்றம் சார்பில் இரத்த தான முகாம்

மக்கள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு பஹ்ரைனில் ரத்த தான முகாம் நடைபெற்றது. ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழும், நினைவுப்பரிசும் அன்னை தமிழ் மன்றத்தின் சார்பாக

Google Oneindia Tamil News

மனாமா: மக்கள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு பஹ்ரைனில் அன்னை தமிழ் மன்றம் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழும், நினைவுப்பரிசும் அன்னை தமிழ் மன்றத்தின் சார்பாக வழங்கப்பட்டது.

மருத்துவம்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு- ஆளுநர் ஒப்புதல் தர வைரமுத்து வலியுறுத்தல்மருத்துவம்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு- ஆளுநர் ஒப்புதல் தர வைரமுத்து வலியுறுத்தல்

Dr. APJ Abdul Kalam birth anniversary Blood Donation Camp in Bahrain

பஹ்ரைனில் இயங்கி வரும் அன்னை தமிழ் மன்றம் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, ஒரு இரத்த தான முகாமை, கிங் ஹமாத் யுனிவர்சிட்டி மருத்துவமனையோடு இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் சரியாக 51 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினார்கள்.

https://tamil.filmibeat.com/news/biggboss-contestants-salary-list-goes-viral-on-social-media-076163.html

அன்னை தமிழ் மன்றத்தின் சமூகநலத்துறையும், மன்ற நிர்வாகிகளும், மருத்துவமனை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மிக நேர்த்தியாக இந்த முகாமை நடத்தினார்கள். ரத்த தானம் செய்தவர்களுக்க சான்றிதழும், நினைவுப்பரிசும் அன்னை தமிழ் மன்றத்தின் சார்பாக வழங்கப்பட்டது. இறுதியாக, மன்ற நிர்வாகிகள் அனைவரும் இணைந்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு, மன்றத்தின் சார்பாக நினைவுப்பரிசும் வழங்கி கொளரவித்தனர். இரத்த தான முகாம் சரியான நேரத்திற்குத் தொடங்கி, குறித்த நேரத்தில் இனிதே நிறைவடைந்தது.

Dr. APJ Abdul Kalam birth anniversary Blood Donation Camp in Bahrain
English summary
A blood donation camp was held on behalf of the Mother Tamil Forum in Bahrain on the occasion of the birthday of the President of the People's Republic, Dr. ABJ Abdul Kalam. Certificates and souvenirs were given to the blood donors on behalf of the Mother Tamil Forum.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X