அத்துமீறும் பாகிஸ்தான்! பஞ்சாப்பில் டிரோன் தாக்குதல்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் காயம்!
பெரோஸ்பூர்: பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் உள்ள குடியிருப்பு மீது பாகிஸ்தான் இன்று டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் குடியிருப்பில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து, வான்பரப்பு மூடல், சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டது.

இந்த சூழலில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயர் வைக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானுக்கு இடியாக இறங்கியது.
இதனிடையே, நேற்று இரவு ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களை குறி வைத்து பாகிஸ்தான் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இன்றும் டிரோன் தாக்குதலை தொடர்ந்து வருகிறது பாகிஸ்தான் ராணுவம். இதன் காரணமாக பஞ்சாபின் ஃபிரோஸ்பூர், ஹரியானாவின் பஞ்ச்குலா, அம்பாலா உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஜம்மு, காஷ்மீரின் சம்பா, ரஜௌரி, அக்னூர், நக்ரோட்டா, பஞ்சாபின் பதான்கோட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை இந்திய வான் பாதுகாப்பு படைகள் அவற்றை முறியடித்து வருகின்றன.
தொடர்ந்து 3வது நாளாக ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் மீது பாகிஸ்தான் திடீர் ஏவுகணை. டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் இந்திய பாதுகாப்புப்படையால் முறியடிக்கப்பட்டு வருகிறது.
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் உள்ள குடியிருப்பு மீது பாகிஸ்தான் இன்று டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் குடியிருப்பில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications