விமானத்தில் அட்டகாசம்.. ஜன்னல் மீதும், இருக்கையிலும் "பிஸ்" அடித்து நாறடித்த கேரளத்து "மப்பர்"!

Subscribe to Oneindia Tamil

பிர்மிங்காம்: குடிபோதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், பேன்ட் ஜிப்பைக் கழற்றி, விமான ஜன்னல் மீது உச்சா போய் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் கேரளாவைச் சேர்ந்த ஜினு ஆப்ரகாம் என்ற பயணி.

இதையடுத்து அவரை விமான ஊழியர்கள் ஒரு தனி இடத்தில் உட்கார வைத்து விமானம் இங்கிலாந்து வந்து சேரும் வரை அங்குமிங்கும் அவர் நகர்ந்து விடாமல் பார்த்துக் கொண்டனராம்.

இந்தியாவிலிருந்து பிர்மிங்காம் நகருக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில்தான் இந்தக் கூத்து. ஜினு ஆப்ரகாமின் செயலால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்..

Drunk man drops his trousers, urinates in Air India flight

39 வயதாகும் ஜினு ஆப்ரகாம், நார்த்பீல்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். விமானம் தரையிறங்கியதும் அவரைக் கைது செய்து போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கு தான் குடிபோதையில் இந்த செயலில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார் ஜினு ஆப்ரகாம். இதையடுத்து அவருக்கு 300 பவுண்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதுதவிர மேலும் வழக்குச் செலவு உள்ளிட்ட வகையினங்களுக்காக 725 பவுண்டு அபராதமும் விதிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி பிர்மிங்காம் செல்லும் இந்த விமானத்தில் தனது 10 வயது மகனுடன் ஏறியுள்ளார் ஜினு ஆப்ரகாம். விமான பயணத்தின்போது குடித்துள்ளார். போதை அதிகமாகவே சேட்டையில் இறங்கினார்.

தனது சீட்டை விட்டு அங்குமிங்கும் நடந்தபடி இருந்துள்ளார். சக பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சீட்டுக்குப் போகுமாறு கூறியும் போகவில்லை. உச்சகட்டமாக ஜன்னல் மீது உச்சா போய் விட்டார்.

பேன்ட்டை நன்றாகக் கழற்றி ஆபாச கோலத்தில் நின்றபடி அவர் சிறுநீர் கழித்துள்ளார். இருக்கை மற்றும் விமான தளத்திலும் அவர் சிறுநீர் கழித்துள்ளார். இவரது செயல் அனைத்துப் பயணிகளையும் அதிர வைத்து விட்டது.

ஜினு ஆப்ரகாமின் மனைவி நர்ஸ் ஆக பணியாற்றி வருகிறார். அவரும் இந்தியா போயிருந்தார். ஜினுவுக்கு முன்பாகவே தனது இன்னொரு மகனுடன் இங்கிலாந்து வந்திருந்தார் அவர்.

குடி அடிமையாக கூறப்படும் ஜினு ஆப்ரகாம் இதற்காக சிகிச்சையும் எடுத்து வருகிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+