தலிபான்கள் கைப்பற்றிய ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்.. 4.5 ரிக்டர் பதிவு.. மக்கள் அச்சம்
காபூல்: ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சிக்கிய நிலையில் அங்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக இருந்தது.
அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே தோஹாவில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து அங்கிருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருகின்றன. இதையடுத்து ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களை கைப்பற்றிய தலிபான்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

மேலும் அங்கிருந்து அதிபர் அஷ்ரப் கானியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறுமாறு மிரட்டினர். இதையடுத்து அவர் நாட்டில் தலிபான்களால் வன்முறை ஏற்படக் கூடாது என்பதால் வெளியேறிவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.
இதையடுத்து அதிபர் மாளிகையையும் அவர்கள் கைப்பற்றிவிட்டனர். தலிபான்கள் கைவசம் ஆப்கானிஸ்தான் சென்றதால் காபூல் விமான நிலையத்தில் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 6.08 மணிக்கு ஆப்கானிஸ்தானில் ஃபேசாபாத்திலிருந்து தென்கிழக்கு 83 கி.மீ. தூரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். முதல் கட்டமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிகிறது.
Recommended Video
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications