நல்லவேளை ஏர் ஏசியா விமானத்தை மிஸ் செய்தோம்: இந்தோனேசிய குடும்பம் மகிழ்ச்சி
ஜகர்தா: மாயமான ஏர் ஏசியா விமானத்தில் செல்லவிருந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குடும்பம் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளது.
இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் கிறிஸ்டியானாவதி(36). அவர் தனது கணவர், குழந்தைகள், தாய், தம்பி, தம்பி குடும்பத்தார் என 10 பேருடன் புத்தாண்டை கொண்ட சிங்கப்பூர் செல்ல முடிவு செய்தார். இதையடுத்து அவர் ஏர் ஏசியா விமான நிறுவனத்தில் டிக்கெட் எடுத்தார். அவர் டிக்கெட் முன்பதிவு செய்த விமானம் காலை 7.30 மணிக்கு கிளம்ப வேண்டியது.

இந்நிலையில் ஏர் ஏசியா நிறுவனம் கிறிஸ்டியானாவதி மற்றும் அவரது குடும்பத்தாரின் டிக்கெட்டுகளை காலை 5.30 மணிக்கு புறப்பட்ட க்யூஇசட் 8501 விமானத்திற்கு மாற்றியது. இது குறித்து அவருக்கு தகவல் தெரிவிக்க அழைத்தபோது அவர் செல்போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் 7.30 மணி விமானத்தில் ஏற விமான நிலையத்திற்கு வந்தார்கள் கிறிஸ்டியானாவதியின் குடும்பத்தார். அப்போது அவர்களின் டிக்கெட் முந்தைய விமானத்திற்கு மாற்றப்பட்டதும், அது காலை 5.30 மணிக்கே கிளம்பிவிட்டதும் தெரிய வந்தது.
இதனால் அவர்கள் கோபம் அடைந்தனர். இந்நிலையில் தான் காலையில் கிளம்பிய விமானம் மாயமான செய்தி அறிந்து கிறிஸ்டியானாவதி மற்றும் அவரது குடும்பத்தார் அதிரிச்சி அடைந்தனர். மேலும் தங்களை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி தெரிவித்து கண்ணீர்விட்டனர்.
கிறிஸ்டியானாவதி ஆண்டில் இரண்டு முறை குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு அதுவும் ஏர் ஏசியாவில் செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இந்நிலையில் அந்நிறுவன விமானம் மாயமானதை அடுத்து அவர் கருடா இந்தோனேசியா ஏர்லைன்ஸுக்கு மாறிவிட்டார்.












Click it and Unblock the Notifications