7 வயது மகளை பைப்பால் அடித்துக் கொன்ற தந்தை - சவுதியில் பயங்கரம்!
ரியாத்: சவுதியில் பெற்ற மகள் என்றும் பாராமல் பைப் ஒன்றால் தலையில் அடித்துக் கொன்ற தந்தையால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் ஈத் அல் ஆதா நகரை சேர்ந்த 7 வயதான சிறுமி யாரா. தந்தைக்கும், தாய்க்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட அறிவுரையின் பேரில் யாரா தனது தந்தையுடன் கடந்த 3 மாதங்களாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் தந்தை, யாராவைப் பார்த்து உனக்கு என்னைப்பிடித்துள்ளதா, என் மேல் அன்பு உள்ளதா என்று கேட்டுள்ளார். அதற்கு யாரவோ எனக்கு உங்களை பிடிக்கவில்லை என்று பதில் கூறியுள்ளார், இதனால் கோபம் கொண்ட தந்தை, ஏர் கண்டிஷன் பைப்பை எடுத்து யாராவின் தலையில் அடித்துள்ளார். அதுமட்டுமல்லாது பின்னர் கம்பியை எடுத்து தலையில் தாக்கி உள்ளார். இதனால் அவளது உடல்நிலை மோசமடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் வழியிலேயே சிறுமி மரணம் அடைந்தார்.
இதனையடுத்து தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் தனது வாக்குமூலத்தில், எனது மகளுக்கு தக்க பாடம் புகட்ட விரும்பியதால் இப்படியொரு காரியத்தை செய்துள்ளேன் என்று கூறியுள்ளார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications