சவுதி பெண்கள் கனவிலும் நடக்காது என நினைத்தது இன்று நடந்துவிட்டது!
ரியாத்: தேர்தலில் போட்டியிடவே முடியாது என்று நினைத்த சவுதி பெண்கள் தற்போது பெருமை அடைந்துள்ளனர். முதன்முதலாக பெண்கள் வாக்களித்து போட்டியிட்ட சவுதி உள்ளாட்சி தேர்தலில் 17 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டக் கூடாது, ஆண்கள் துணையில்லாமல் வெளியே செல்லக் கூடாது, வெளியே செல்கையில் முகம் தெரியாத அளவுக்கு பர்தா அணிய வேண்டும் என்று பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளது.
அத்தகைய சவுதியில் உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் வாக்களிக்க மற்றும் போட்டியிட முதல்முறையாக அனுமதி அளிக்கப்பட்டது.

தேர்தல்
உள்ளாட்சி தேர்தலில் 5 ஆயிரத்து 938 ஆண்களும், 978 பெண்களும் போட்டியிட்டனர். பிரச்சாரத்தின்போது பெண் வேட்பாளர்கள் ஆண் வாக்காளர்களை நேருக்கு நேர் பார்த்து ஓட்டு கேட்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்த சூழலில் நடந்த தேர்தலில் 17 பெண்கள் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆகியுள்ளனர்.

பெண்கள்
சவுதி தேர்தலில் வெற்றி பெற்ற முதல் பெண் வேட்பாளராக சல்மா பின்ட் ஹிசாப் அல் ஓட்டீபி அறிவிக்கப்பட்டார். அவர் மெக்கா மாகாணத்தில் உள்ள மத்ரகாவில் வெற்றி பெற்றுள்ளார்.

கவுன்சிலர்கள்
மொத்தமுள்ள 2 ஆயிரத்து 100 கவுன்சிலர் பதவிகளில் 17 பதவிகள் பெண்களுக்கு கிடைத்துள்ளது. ரியாத் தொகுதியில் அதிகபட்சமாக 4 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

சவுதி
சவுதியில் நடந்துள்ள 3வது தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. 1965ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை 40 ஆண்டுகளாக சவுதியில் தேர்தல் நடக்கவில்லை.

மன்னர் அப்துல்லா
பெண்களை தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்கும் முடிவை அறிவித்தது மறைந்த மன்னர் அப்துல்லா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் கடந்த ஜனவரி மாதம் மரணம் அடையும் முன்பு நாட்டின் முதன்மை ஆலோசனை குழுவான ஷுரா கவுன்சிலில் 30 பெண்களை நியமித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications