பிரான்சில் முழு நீள ஸ்கர்ட் அணிந்ததால் முஸ்லீம் மாணவி வகுப்பறைக்குள் நுழைய தடை
பாரீஸ்: பிரான்சில் கருப்பு நிறத்தில் முழு நீள ஸ்கர்ட் அணிந்து வந்த முஸ்லீம் மாணவி வகுப்பறைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் பர்தா, பெரிய சிலுவை டாலர் உள்ளிட்டவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாரா என்ற 15 வயது முஸ்லீம் மாணவி பள்ளிக்கு கருப்பு நிறத்தில் முழு நீள ஸ்கர்ட் அணிந்து சென்றுள்ளார். இதை பார்த்த தலைமை ஆசிரியர் அவரை வகுப்பறைக்குள் நுழையக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
முஸ்லீம் பெண்கள் தான் முழு நீள ஸ்கர்ட் அணிகின்றனர். அதனால் இது மதத்தை குறிக்கும் வகையில் உள்ளது என்று கூறி மாணவியை இரண்டு முறை வகுப்புக்குள் நுழைய விடாமல் தடுத்துள்ளனர்.
இது குறித்து சாரா கூறுகையில்,
அந்த ஸ்கர்ட்டில் எதுவும் ஸ்பெஷல் எல்லாம் இல்லை. சாதாரணது தான். அது மதத்தை குறிக்கும் வகையில் ஒன்றும் இல்லை என்றார்.
இந்த சம்பவம் பற்றி உள்ளூர் கல்வித் துறை அதிகாரி பேட்ரிஸ் டுடோட் கூறுகையில்,
மாணவியை ஸ்கர்ட்டை மாற்றிவிட்டு மதத்தை குறிக்காத சாதாரண உடையில் வருமாறு தெரிவித்துள்ளனர். ஆனால் அவரின் தந்தைக்கு தனது மகளை அந்த பள்ளிக்கு மீண்டும் அனுப்ப விருப்பம் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications