இதுதான் உங்க நிலைமை.. கம்பீர் வெளியிட்ட வீடியோ.. குமுறும் பாகிஸ்தான் நெட்டிசன்கள்
வணக்கம் சோமுவை போலீசார் தேடி வருகிறார்கள்
Recommended Video
கராச்சி: பாகிஸ்தானின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து பாஜக லோக்சபா உறுப்பினரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீர் இன்று கிண்டல் செய்து ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா சமீபத்தில் ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, காஷ்மீரில் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டு, அங்குள்ள மக்களை துன்புறுத்தி வருகிறது என்றெல்லாம் குற்றம் சாட்டி வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இதே குற்றச்சாட்டை முன்வைத்து, பழைய ராகத்தை அங்கும் பாடினார்.
இதற்கெல்லாம் பதிலடி அளிக்கும் விதமாக தான், ஒரு வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார் கவுதம் கம்பீர்.

இலங்கை அணி
தற்போது இலங்கை பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் நடுவே ஒருநாள் போட்டி தொடர் பாகிஸ்தான் மண்ணில் வைத்து நடைபெற்று வருகிறது. அந்த நாட்டின் வர்த்தக தலைநகரம் என்று அழைக்கப்படக்கூடிய கராச்சியில் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 67 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை, பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

அபார ஆட்டம்
பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்தது, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்களை குவித்தது. இதில் பாபர் ஆசம், 115 ரன்கள் குவித்தார். இதையடுத்து பேட் செய்த இலங்கை அணி, 46.5 ஓவர்களில் 238 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. உஸ்மான் சின்வாரி, 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

20 வாகனங்கள்
ஆனால் விஷயம் இருபற்றி இல்லை. கௌதம் கம்பீர் பகிர்ந்துள்ள வீடியோவில், இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் அழைத்து செல்லப்படும் வாகனத்தை சுற்றிலும் சுமார் 20 வாகனங்களின் பாதுகாப்பு படை வீரர்கள் சூழ்ந்து செல்கிறார்கள். அந்த சாலையில் வேறு எந்த வாகனங்களும் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.
|
கராச்சியை பாருங்கள்
கடும் பாதுகாப்புக்கு நடுவேதான் கிரிக்கெட் போட்டியை அவர்கள் நடத்துகிறார்கள். இந்த வீடியோவை கௌதம் கம்பீர் ஷேர் செய்து, இந்தியில் ஒரு வார்த்தையை பதிவு செய்துள்ளார். அதன் அர்த்தம் கராச்சியில் மறந்துவிட்டது. காஷ்மீர் அந்த அளவுக்கு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார். காஷ்மீர் பற்றியே யோசிக்கிறீர்களே, கராச்சியை மறந்து விட்டீர்களே என்றும் அதை பொருள் கொள்ளலாம். இந்த ட்வீட்டால் பாகிஸ்தான் நெட்டிசன்கள் கடுப்பாகி, கம்பீர் ட்வீட்டுக்குகீழே புலம்பியபடி உள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications