இந்து கோயிலில் "ஆடைகளை களைந்து" நிர்வாணமான பெண் சுற்றுலா பயணி.. சன்னதிக்குள் நுழைய முயன்றதால் பரபர
பாலி: இந்து கோயில் அருகே திடீரென இளம்பெண் ஒருவர் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக ஆடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது நாட்டின் பண்டைய கால மன்னர்கள் இந்தியாவைத் தாண்டியும் பல இடங்களில் தங்கள் வெற்றிக் கொடியை நாட்டியது அனைவருக்கும் தெரியும். அப்படிக் கைப்பற்றிய இடங்களில் கோயில்களையும் கட்டியிருப்பார்கள்.
அதன்படி இந்தோனேசியாவிலும் கூட கணிசமாக இந்து கோயில்கள் உள்ளன. அங்கே சுற்றுலாப் பயணிகள் பலரும் விசிட் செய்யும் பகுதியான பாலியில் இந்து கோயில்களும் அமைந்துள்ளன. இதைக் காணவும் சுற்றுலாப் பயணிகள் அங்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

ஜெர்மனி சுற்றுலாப் பயணி:
இதற்கிடையே பாலியில் உள்ள ஒரு கோயிலில் திடீரென ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஒரு பெண் சுற்றுலாப் பயணி ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக ஆட தொடங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்த இந்தோனேசிய போலீசார் அவரை மனநல சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்,
அந்த பெண் 28 வயதான தர்ஜா துஷின்ஸ்கி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. விடுமுறையைக் கழிக்கப் பாலி சென்ற அவர் ஹோட்டல் கட்டணத்தையும் செலுத்தத் தவறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
தெற்காசியாவில் அமைந்துள்ள குட்டி தீவு நாடான இந்தோனேசியாவில் சமீப காலமாக இதுபோல சுற்றுலா பணிகள் மோசமாக நடந்து கொள்வது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. பொது இடங்களில் மோசமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் ஏற்கனவே அங்கே பல வெளிநாட்டுப் பயணிகள் நாடு கடத்தப்படும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
என்ன நடந்தது:
இந்தச் சூழலில் தான் இந்த சம்பவமும் நடந்துள்ளது. பாலியில் தங்கப் பணம் இல்லாததால் அந்த பெண் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அப்போது தான் அவர் திடீரென இந்து கோயிலில் நடந்த நிகழ்ச்சியின் போது ஆடைகளைக் களைந்தது மேடைக்கு ஏறியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பல்வேறு படங்களும் இணையத்தில் பரவி வருகிறது. இதில் உபுடில் உள்ள சரஸ்வதி கோயிலில் நடனக் கலைஞர்கள் நடனமாடும் போதும் திடீரென நிர்வாணமாக அந்த பெண் மேடை ஏறியுள்ளார்.
மேலும், சன்னதிக்கு உள்ளேயும் நிர்வாணமாக நுழைய முயன்றார். இருப்பினும், அதற்கு போலீசார் அவரை கைது செய்துவிட்டனர். அந்த பெண் கோயிலில் நடந்த இந்த நாட்டிய நிகழ்ச்சியைப் பார்க்க வந்துள்ளார். அப்போது திடீரென அங்கிருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அந்த பெண் ஆடைகளைக் களைந்து இப்படிச் செய்தது தெரிய வந்துள்ளது. இருப்பினும், அவர் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

அந்த பெண்ணை ஜெர்மனிக்குத் திரும்பும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதற்கு அவர் மறுத்த நிலையில், அவர் அங்குள்ள மனநல மையத்திற்குச் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். இந்த சுற்றுலாப் பயணி தனது விடுதியிலும் கூட ரூமிற்கு வெளியேயும் நிர்வாணமாகச் சுற்றிக் கொண்டிருந்துள்ளார். இருப்பினும், அப்போது அங்கிருந்த ஹோட்டல் ஊழியர்கள் இது குறித்துப் புகாரளிக்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
சட்டம்:
முன்னதாக கடந்த டிசம்பரில், இந்தோனேசியா நாடாளுமன்றம் திருமணம் செய்து கொள்ளாதவர்கள் மத்தியில் உடலுறவுக்குத் தடை விதித்தது. இதை மீறுவோருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்தால் ஆறு மாத சிறைத்தண்டனையையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது..
சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நாடக இந்தோனேசியா இருக்கும் நிலையில், இந்த சட்டம் கடும் எதிர்ப்பை கிளப்பியது. அதன் பின்னரே, இந்தோனேசியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்தச் சட்டம் பொருந்தாது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications