தங்க குணத்துக்குத்தான் தங்க துப்பாக்கி வாங்கி தரட்டுமா! சல்மானுக்கு பாக். கொடுத்த பரிசை பாருங்க!
சவுதி முடிஇளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தானுக்கு சென்றபோது அவருக்கு அங்கு தங்க துப்பாக்கி ஒன்று பரிசளிக்கப்பட்டு உள்ளது.
Recommended Video

இஸ்லாமாபாத்: சவுதி முடிஇளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தானுக்கு சென்றபோது அவருக்கு அங்கு தங்க துப்பாக்கி ஒன்று பரிசளிக்கப்பட்டு உள்ளது.
சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் தற்போது தெற்காசிய நாடுகளுக்கு பயணம் செய்து கொண்டு இருக்கிறார். மூன்று நாட்களுக்கு முன்புதான் அவர் பாகிஸ்தான் சென்றார்.
பாகிஸ்தானில் அவர் மொத்தம் பாகிஸ்தானின் வளர்ச்சிக்காக 1.40 லட்சம் கோடி ரூபாய்க்கான ஒப்பந்தங்களை கையெழுத்திட்டார். இரண்டு நாள் இந்த சந்திப்பு நடந்தது. அதன்பின் அவர் இந்தியா வந்தார்.

துப்பாக்கி பரிசு
இந்த நிலையில்தான் சவுதி முடிஇளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தானுக்கு சென்ற போது அவருக்கு துப்பாக்கி ஒன்று பரிசளிக்கப்பட்டு உள்ளது. உலகிலேயே துப்பாக்கி ஒன்றை பரிசாக பெற்ற ஒரு நாட்டின் தலைவர் என்ற பெருமையை சல்மான் இதன் மூலம் பெற்று இருக்கிறார். அதேபோல் பாகிஸ்தானும் முதல்முறை இப்படி துப்பாக்கியை பரிசாக அளித்துள்ளது.

தங்கம் முழுக்க முழுக்க
இந்த துப்பாக்கி முழுக்க முழுக்க தங்கத்தால் செய்யப்பட்டது என்பதுதான் இதில் சிறப்பம்சமே. Heckler & Koch MP5 ரக துப்பாக்கியான இது ஜெர்மன் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. அதன்பின் இதில் தங்கம் சேர்க்கப்பட்டு, முழுக்க முழுக்க தங்கமாக மாற்றப்பட்டது. சில பகுதிகள் மட்டுமே தங்கம் இல்லாமல் இருக்கிறது.

என்ன மதிப்பு
ஆனால் இதன் மதிப்பு என்னவென்று தெரியவில்லை. அதேபோல் சல்மானுக்கு பாகிஸ்தான் அமைச்சர்கள் சிலர் வைர மோதிரங்களையும் வழங்கியுள்ளனர். மேலும் அவரது உருவ வரைபட ஃபிரேம், ஒயின் பாட்டில் என்று நிறைய நிறைய பரிசு பொருட்களை அளித்து இருக்கிறார்கள்.

உயரிய விருது
அதேபோல் இதில் பாகிஸ்தானின் மிக உயரிய விருதான ''நிஷான் - இ - பாகிஸ்தான்'' விருதும் சல்மானுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விருதை பெறுவதன் மூலம் பெரிய அளவில் மகிழ்ச்சி அடைவதாக சல்மான் தெரிவித்தார். சல்மானுக்கு பாகிஸ்தான் துப்பாக்கி வழங்கியது பெரிய வைரலாகி உள்ளது.












Click it and Unblock the Notifications