நொடிகளில் எல்லாம் ஓவர்.. ஹமாஸ் ராணுவத்தின் முக்கிய தளபதி முகமது தைஃப் படுகொலை! இஸ்ரேல் அறிவிப்பு
காசா: கடந்தாண்டு இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தைஃப் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த மாதம் நடந்த வான்வழித் தாக்குதலில் முகமது தைஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதனால் அங்கே பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த பல மாதங்களாகவே மோதல் போக்கே நிலவி வருகிறது. கடந்தாண்டு ஆக. மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய மோசமான தாக்குதலே இந்த மோதலை தொடங்கி வைத்தது.

அப்போது முதலே ஹமாஸ் மீது இஸ்ரேல் போரைத் தொடங்கி நடத்தி வருகிறது. ஹமாஸ் இருக்கும் காசா பகுதியில் மிகத் தீவிரமான தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்து வருகிறது.
இஸ்ரேல்: இதற்கு உலகெங்கும் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலரும் உயிரிழப்பதாகவும் இதனால் இஸ்ரேல் இந்தத் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உலக நாடுகள் வலியுறுத்தின. இருப்பினும், இஸ்ரேலே இதைக் கேட்கவில்லை. கடைசி ஹமாஸ் வீரர் கொல்லப்படும் வரை இந்த போர் தொடரும் என இஸ்ரேல் அறிவித்து இருந்தது.
நேற்றைய தினம் தான் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவித்தது. இதற்கிடையே இன்று இஸ்ரேல் தரப்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஹமாஸ் ராணுவத்தின் முக்கிய தளபதியாகக் கருதப்படும் முகமது தைஃப் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இவர் தான் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர்,
வான்வழித் தாக்குதல்: கடந்த மாதம் காசாவில் நடத்திய வான்வழித் தாக்குதலில் முகமது தைஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முகமது தைஃப் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஜூலை 13ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்ரேல் போர் விமானங்கள் தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியில் முகமது தைஃப் மற்றும் ஹமாஸின் கான் யூனிஸ் படைப்பிரிவின் தளபதி ரஃபா சலாமே ஆகியோர் இருந்த இடத்தை தாக்கியுள்ளன.
முகமது தைஃப்: இருப்பினும், அப்போது தைஃப் கொல்லப்பட்டாரா இல்லையா என்பதை யாரும் உறுதி செய்யவில்லை. ஏனென்றால் இதற்கு முன்பு இஸ்ரேல் நடத்திய ஏழு தாக்குதல் முயற்சிகளில் இருந்து முகமது தைஃப் தப்பி இருந்தார். இதனால் இந்த முறை அவருக்கு என்ன ஆனது என்பது இஸ்ரேலுக்கு உடனடியாக தெரியவில்லை. இந்தச் சூழலில் தான் சுமார் 3 வாரங்களுக்குப் பிறகு அவர் கொல்லப்பட்டதை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது.
கடும் தாக்கு: அதேநேரம் இந்தத் தாக்குதல் நடந்த போது ஹமாஸ் அதை மிகக் கடுமையாகச் சாடியிருந்தது. பொதுமக்கள் தங்கும் இடத்தில் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியதாகவும் இதில் 90 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும் அப்போது ஹமாஸ் கூறியிருந்தது.
அதேநேரம் ராணுவ தளபதி முகமது தைஃப் குறித்து அப்போது ஹமாஸ் எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தான் சுமார் ஒரு மாதம் கழித்து இஸ்ரேல் அரசே முகமது தைஃப் கொல்லப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications