ஓட்கா அடித்து மட்டையான பெண்! காலை எழுந்து பார்த்தால்.. "ஐயோ.." கால் இரண்டும் அழுகி போச்சு! என்னாச்சு
டொராண்டோ: மது அருந்துவது ஓகே தான், ஆனால் மட்டையாகும் அளவுக்கு மது குடித்துவிட்டு, எங்கேயோ விழுந்து கிடந்தால் மோசமான பாதிப்பு ஏற்படும். அப்படித்தான் இங்கு ஒரு பகீர் சம்பவம் நடந்துள்ளது.
மாறி வரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நமது உடல்களிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதனால் முன்பு அரிதாக இருந்த ஒரு சிலருக்கு மட்டும் ஏற்பட்ட நோய் பாதிப்புகளும் கூட இப்போது பரவலாக ஏற்பட தொடங்கியுள்ளன. இது மட்டுமின்றி புதிது புதிதாகவும் ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

கனடா
அப்படியொரு மோசமான சம்பவம் தான் கனடாவில் நடந்துள்ளது. இந்த காலகட்டத்தில் மது குடிப்பது என்பது பரவலாக அதிகரித்துவிட்டது. ஆண்கள், பெண்கள் என இரு தரப்புமே மது குடிக்கிறார்கள். அப்படித்தான் கனடாவில் பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் இணைந்து மது குடித்துள்ளார். அதுவே அவருக்குப் பேராபத்தில் சென்று முடிந்துள்ளது. கனடாவைச் சேர்ந்த அந்த 36 வயதான பெண், அந்நாட்டின் தலைநகர் டொராண்டோவில் தனது நண்பர்களுடன் இரவை கழித்துள்ளார். இருப்பினும், அதன் பிறகு ஏற்பட்டது தான் அதிர்ச்சியின் உச்சம்.

வீங்கிய கால்கள்
டொராண்டோவில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில், அந்த பெண் தனது நண்பர்களுடன் இரவு ஓட்கா குடித்துள்ளார். பின்னர் மோசமான ஒரு பொசிஷனில் தூங்கியுள்ளார். ஆனால், மறுநாள் காலை அவர் எழுந்த போது அவருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. அவரது கால்கள் வழக்கத்தை விட இரண்டு மடங்கு பெரிதாக வீங்கி இருந்தது. அவரால் வழக்கம் போல நடக்கக் கூட முடியவில்லை. இதனால் அச்சமடைந்த அவர், ஆம்புலன்சுக்கு கால் செய்துள்ளார். அங்கே வந்த சுகாதார பணியாளர்களுக்கும் இது ஏன் என்று புரியவில்லை. இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம்
அங்கே மருத்துவமனையில், அவருக்கு பல எக்ஸ்ரே மற்றும் சோதனைகளை எடுத்துள்ளனர். அப்போது தான் அவருக்கு கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம் என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இரவு முழுக்க கால்களில் ரத்த ஓட்டம் தடைப்படும் பொசிஷனில் வைத்துத் தூங்கினால் இந்த கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம் ஏற்படுகிறது. இதனால் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன் இல்லாமல் போகவே, தசை மற்றும் நரம்பு செல்கள் சீக்கிரம் உயிரிழக்கத் தொடங்குகிறது. இதைக் கேட்டதும் அந்த பெண் அதிர்ச்சியடைந்தார். ஆனால், அது வெறும் தொடக்கம் தான்.

ஆப்ரேஷன்
சிறிது நேரத்திலேயே அந்த பெண்ணுக்குக் கால் அழுக ஆரம்பித்துள்ளது. அந்த பெண்ணின் உயிரைக் காக்க அறுவை சிகிச்சை கூடச் செய்ய வேண்டியிருந்தது. அவரது இடது காலில் ஆப்ரேஷன் செய்து இறந்த நிலையில் அழுகிக் கொண்டிருந்த தசைகளை வெளியே எடுத்து வீக்கத்தைக் குறைக்க வேண்டி இருந்தது. அதன் பின்னரே, ரத்த ஓட்டம் சற்று சீரானது. மேலும், காலில் ஏற்பட்ட காயத்தைச் சரி செய்ய அவரது தொடையிலிருந்து தோல் மற்றும் சதையின் ஒரு பகுதியை எடுத்து காலில் வைத்துக் கூட ஆப்ரேஷன் செய்ய வேண்டி இருந்தது. அவர் சுமார் 5 வாரங்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெறவும் வேண்டி இருந்தது.

தொடரும் பாதிப்பு
வீட்டிற்கு வந்த பிறகும் மூன்று வாரங்கள் படுத்த படுக்கையாகவே இருந்தார். மேலும், சுமார் ஓராண்டு அவர் வலி நிவாரணி மாத்திரைகளையும் எடுக்க வேண்டி இருந்தது. பாதிப்பில் இருந்து அவர் முக்கால்வாசி குணமடைந்துவிட்ட போதிலும், அவரால் இன்னும் பழையபடி நடக்க முடியவில்லை. இந்தச் சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இன்னுமே தனது கால் முழுமையாகச் செயல்படுவதைப் போலத் தெரிவதில்லை என்று அந்த பெண் வேதனை தெரிவித்துள்ளார். இப்போது அவரது கால்விரல்கள் இப்போது கீழே சுருட்ட ஆரம்பித்துள்ளது.

என்ன ஆபத்து
மது அருந்துவது ஓகே தான், ஆனால் மட்டையாகும் அளவுக்கு மது குடித்துவிட்டு, எங்கேயோ விழுந்து கிடந்தால் என்ன மாதிரியான ஆபத்து ஏற்படும் என்பதை விளக்குவதாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கால் என்று இல்லை கம்பார்ட்மென்ட் சிண்ட்ரோம் ரத்த ஓட்டம் பாதிக்கும் எந்த பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படலாம். இருப்பினும் இது பெரும்பாலும் முன்கைகள் அல்லது, கால்களில் இருக்கும் தசைகளில் தான் அதிகம் ஏற்படும்.

அறிகுறிகள்
தசைகள் வீக்கம், குறிப்பிட்ட பகுதி லேசாக இருப்பது போல உணர்வது, அந்த பாகத்தை நகர்த்துவதில் சிரமம், உணர்வின்மை, பலவீனம் உணர்வது, ஊசிகளால் குத்தப்படுவதைப் போன்ற உணர்வு, அதிக வலி, எரியும் தன்மை இதன் முக்கிய அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் திடீரென்று ஏற்படும். மெல்லக் கொஞ்சம் கொஞ்சமாகவும் ஏற்படும். எனவே, நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான டிப்ஸ் மட்டுமே. இதை மருத்துவ அறிவுரையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலில் எதாவது பிரச்சினை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications