இஸ்ரேல் செய்த உதவி.. சீனாவை நம்பி பாகிஸ்தான் வாங்கிய அடி.. கதறவிட்ட இந்தியா.. லாகூரில் நடந்த அதிரடி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் நேற்றைய தாக்குதலில் லாகூரை காக்க பாகிஸ்தான் களமிறக்கி இருந்த சீன தயாரிப்பான எச்க்யூ - 9 பி ஏவுகணை தடுப்பு சிஸ்டமை தாக்கி அழித்தது. இதனால் பாகிஸ்தான் தொடர்ந்து நம்மிடம் அடிவாங்கி வரும் நிலையில் அந்த ஏவுகணை தடுப்பு சிஸ்டமை நம் நாடு எப்படி தாக்கி அழித்தது? இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் நாடு எப்படி உதவி செய்தது? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் பலியாகினர். இதற்கு நேற்று நம் நாடு பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானில் 9 இடங்களில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளின் முகாம்களை ஏவுகணை மூலம் தாக்கி அழித்தது.

how-did-india-destroyed-china-made-missile-defence-system-in-lahore-with-a-help-of-israel-drone-det

இந்த தாக்குதலில் மொத்தம் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் இனி தாக்குதல் நடத்தினால் பதிலடி தொடர்ந்து கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

ஆனால் பாகிஸ்தான் திருந்தவில்லை. வாங்கிய அடி போதாது என்று தொடர்ந்து நம்மை சீண்டி வருகிறது. அதன்படி பாகிஸ்தான் நம் நாட்டின் 15 முக்கிய நகரங்களை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டமிட்டது. அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா (Kapurthala), ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பட்டிண்டா (Bhatinda), சண்டிகர், நல், பலோடி, உத்தராலி மற்றும் பூஜ் உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் ராணுவ முகாம்களை பாகிஸ்தான் குறிவைத்தது.

அதன்பிறகு இரவில் ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப்பை குறிவைத்து பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. அதனை நம் நாடு முறியடித்தது. அதன்பிறகு பாகிஸ்தான் மீது ஏவுகணைகளை தாக்கி பதிலடி கொடுத்தது நம் நாடு. குறிப்பாக நேற்றைய தினம் பாகிஸ்தானின் லாகூர் நகரை நோக்கி ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. லாகூரில் சீனா தயாரிப்பான எச்க்யூ 9பி ஏவுகணை தடுப்பு சிஸ்டம் நிறுவப்பட்டு இருந்தது. லாகூரை எதிரி நாடுகளின் தாக்குதலில் இருந்து இந்த ஏவுகணை தடுப்பு சிஸ்டம் தான் பாதுகாத்தது.

இந்நிலையில் தான் சீனாவின் எச்க்யூ 9 பி என்பது என்ன? அதனை அழித்தது ஏன் முக்கியம்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபற்றி இங்கே பார்க்கலாம். பாகிஸ்தானை எடுத்து கொண்டால் சீனாவிடம் இருந்து தான் அதிகமான ராணுவ தளவாடங்களை வாங்கி பயன்படுத்தி வருகிறது. போர் விமானங்கள், ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள் உள்பட பாதுகாப்பு துறையில் பல்வேறு பொருட்களை சீனாவிடம் இருந்து தான் பாகிஸ்தான் இறக்குமதி செய்து வருகிறது. அந்த வகையில் சீனாவில் எச்க்யூ 9 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் (HQ 9 Air Defence System) பயன்பாட்டில் உள்ளது.

இதனை பாகிஸ்தான் பயன்படுத்த விரும்பியது. இதற்காக சீனா பாகிஸ்தானுக்கு என்றே தனியாக ஒன்றை வடிவமைத்து கொடுத்தது. அதன்பெயர் எச்க்யூ 9பி வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் (HQ 9P Air Defence System) என்பதாகும். இதில் பி என்பது பாகிஸ்தானை குறிக்கும். சீனாவில் பயன்படுத்தும் சிஸ்டமில் அந்த பி என்ற எழுத்து இருக்காது. இந்நிலையில் தான் லாகூரை பாதுகாக்கும் வகையில் பாகிஸ்தான் சீனாவின் எச்க்யூ 9 பி வான் பாதுகாப்பு சிஸ்டமை நிறுவி இருந்தது.

இதனை பாகிஸ்தான் கடந்த 2021ம் ஆண்டில் இருந்து பயன்படுத்தி வருகிறது. இது வானில் 125 கிலோமீட்டர் தொலைவு ரேஞ்ச் கொண்டது. இது போர் விமானங்கள், குரூஸ் வகை ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை 100 கிலோமீட்டர் தூரத்திலேயே கண்டுபிடித்து அழிக்கும் வல்லமை கொண்ட நிலையில் அதனை நம் ஏவுகணை தாக்கி அழித்தது.

இதில் இஸ்ரேலின் பங்கும் உள்ளது. அதாவது எச்க்யூ 9பி ஏர் டிபென்ஸ் சிஸ்டமை தாக்கி அழிக்க நம் நாடு பயன்படுத்திய ட்ரோன் இஸ்ரேல் தயாரிப்பாகும். இஸ்ரேல் நாட்டின் HAROP ட்ரோன் தான் இந்த தாக்குதலை நேர்த்தியாக செய்து முடித்தது. இதனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உறுதி செய்துள்ளார். இதனால் பாகிஸ்தான் பெரும் பிரச்சனையை சந்தித்து வருகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி நேற்று இரவிலும் லாகூரில் தொடர்ந்து நம் நாட்டின் சார்பில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தியா பயன்படுத்திய ட்ரோன் HAROP என்பது இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவாக்கிதாகும். இதன் ஸ்பெஷல் என்னவென்றால் ரேடார் மற்றும் வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்களை துல்லியமாக தாக்குவது தான். இந்த ட்ரோனால் 9 மணிநேரம் வரை இடைவிடாது பறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+