"காட்ஜில்லா முட்டை?" ஜப்பான் பீச்சில் திடீரென தோன்றிய மர்ம பொருள்.. திகைத்த அதிகாரிகள்! ஒரே பரபரப்பு

ஜப்பான் நாட்டில் கரையொதுங்கிய மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: ஜப்பான் நாட்டின் கடற்பகுதியில் திடீரென மிகப் பெரிய ஒரு உலோக உருண்டை தோன்றியுள்ளது. இது அங்குள்ள உள்ளூர் மக்களிடம் மிகப் பெரியளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில காலமாகவே உலகின் பல நாடுகளிலும் பல வினோதமான நிகழ்வுகள் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்கா வான்வழியில் சீனாவுக்குச் சொந்தமான ராட்சத பலூன் பறந்தது.

அந்த சர்ச்சை ஓய்வதற்குள் அடுத்தடுத்து அமெரிக்காவின் வடக்கு பகுதியில் பறந்த மர்மப் பொருட்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

 மர்ம பொருள்

மர்ம பொருள்

இதுவரை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய அந்த மர்ம பொருள் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. அதன் பொருட்களை எடுத்து அமெரிக்கா தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். வானிலை ஆய்வுகளுக்கு அனுப்பப்பட்ட பொருட்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்று சிலர் கூறி வருகின்றனர். அதேநேரம் பலரும் இது யுஎப்ஓ எனப்படும் ஏலியன்கள் பயன்படுத்தும் பறக்கும் தட்டுக்களாக இருக்கலாம் என்று வருகின்றனர். அமெரிக்கா ராணுவம் பறக்கும் தட்டுக்கள் தொடர்பான ஆய்வை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

ஜப்பான்

ஜப்பான்

இந்தச் சூழலில் இப்போது ஜப்பானில் மீண்டும் ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது. ஜப்பானில் உள்ள ஹமாமட்சு கடற்கரையில் திடீரென துருப்பிடித்த பெரிய இரும்பு உருண்டை ஒன்று காணப்படுகிறது, இந்த பெரிய இரும்பு உருண்டை அந்த நாட்டு மக்கள் அனைவரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு பக்கம் பறக்கும் மர்ம பொருட்கள் பேசுபொருள் ஆகியுள்ள நிலையில், இது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது என்னவாக இருக்கும் என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் இல்லை,

 உலோக உருண்டை

உலோக உருண்டை

இந்த உருண்டை சுமார் 1.5 மீட்டர் விட்டம் கொண்டதாக இருக்கிறது.. ஜப்பானில் ஹமாமட்சு நகரில் உள்ள பசிபிக் கடலோரத்தில் அமைந்துள்ள என்ஷு கடற்கரையில் இப்போது அடித்து வரப்பட்டுள்ளது. இந்த பெரிய உலோக உருண்டையை அங்குள்ள அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இது தொடர்பான படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த இரும்பு உருண்டை எதனால் ஆனது. இதனால் எதாவது பாதிப்புகள் ஏற்படுமா என்பது போன்ற தகவல்கள் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. இதை என்ன செய்ய ஜப்பான் முடிவு செய்துள்ளது என்பது குறித்த தகவல்களும் இல்லை.

 வெடிகுண்டு வல்லுநர்கள்

வெடிகுண்டு வல்லுநர்கள்

அந்த உலோக உருண்டை ஆரஞ்சு-பழுப்பு நிறத்தில் துருப்பிடித்த கரும்புள்ளிகளுடன் இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, பீச்சில் உள்ளூர் பெண் ஒருவர் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது கரையிலிருந்து சில மீட்டர் தொலைவில் இந்த உலோக உருண்டை இருப்பதை அந்த பெண் பார்த்துள்ளார். இது பழைய ஒரு கப்பலின் மிதவையாக இருக்கலாம் என்றே பலரும் சந்தேகிகன்றனர். அப்படி இது மிதவையாக இருந்தால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதேநேரம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பீச்சில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும், வெடிகுண்டு வல்லுநர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்

 காட்ஜில்லா முட்டை

காட்ஜில்லா முட்டை

இருந்த போதிலும், இதுவரை அது என்ன பொருள் என்று தெளிவாகத் தெரியவில்லை. அந்த பொருள் மிக விரைவாக அங்கிருந்து அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்கம் போல நெட்டிசன்களும் பல கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இதை "காட்ஜில்லா முட்டை", "விண்வெளி பந்து என்று பலரும் பலவிதமாகக் கருத்துகளைக் கூறி வருகின்றனர். பிரபல ஜப்பானிய சீரிஸான டிராகன் பாலில் வரும் முட்டையை போல இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.

 ஜப்பான்- சீனா

ஜப்பான்- சீனா

இதற்கிடையே அமெரிக்கா போல ஜப்பானும் தனது நாட்டில் 2019 ஆம் ஆண்டிலிருந்து குறைந்தது மூன்று முறை சீனாவின் கண்காணிப்பு பலூன்கள் தனது வானில் பறந்ததாகக் கூறியிருந்தது.. இருப்பினும், இதற்குச் சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.. இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்க.. நேற்று இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த நான்கு ஆண்டுகளில் இரு நாட்டு மூத்த அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது இதுவே முதல்முறையாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+