வேற லெவல்.. கல்யாண சர்டிபிகேட்டையே "பச்சைக்குத்திய" மாப்ளை.. திக்குமுக்காடிய மணப்பெண்.. வாவ் டாட்டூ
இந்த டாட்டூவை வரைந்த கலைஞர் கூறுகையில், “இதற்கு முன்னர் நான் இதுபோன்று டாட்டூவை வரைந்தது கிடையாது. எனவே சற்று பயத்துடன்தான் இதனை வரைந்து கொடுத்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாங்காக்: தாய்லாந்தில் இளைஞர் ஒருவர் தனது மனைவி மீதுள்ள அதீத காதலால் அவர்களுடைய திருமண சான்றிதழை கையில் பச்சை குத்தி அசத்தியுள்ளார். முழு சான்றிதழையும் பச்சை குத்தி முடிக்க சுமார் 8 மணி நேரம் ஆகியுள்ளது.
காதலிக்கும்போது தங்களது காதலியை ஈர்க்க இளைஞர்கள் பல வித்தியாசமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுண்டு. சாதாரண மோதிரத்தில் தொடங்கி விலையுயர்ந்த கார்கள் வரை காதலிக்கா பரிசளிப்பார்கள். சிலர் கொஞ்சம் வித்தியாசமாக காதலியின் பெயர்களை வீடுகளுக்கோ அல்லது செல்லப் பிராணிகளுக்கோ வைத்து மகிழ்வார்கள். அந்த வரிசையில் தற்போது இளைஞர் ஒருவர் தங்களது திருமண சான்றிதழை கையில் பச்சை குத்தியுள்ளார்.
எல்லோரும் காதலிக்கும்போதுதான் இதுபோல பச்சைகுத்திக்கொள்வார்கள் ஆனால் 'வால்' எனும் இளைஞர் திருமணம் ஆன பின்னர் பச்சைகுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "நான் சரபுரி மாகாணத்தில் உள்ள ஒரு டாட்டூ கடையில் எனது விருப்பத்தை தெரிவித்தேன். முதலில் நான் என்ன சொல்கிறேன் என்று கடைக்காரருக்கு புரியவில்லை. திருமண பத்திரிகையை டாட்டூ போட வேண்டுமா? என்று கேட்டார். இல்லை நண்பா என்னுடை திருமண சான்றிதழை டாட்டூ போட வேண்டும் என்று புரிய வைத்தேன்.

டாட்டூ
சுமார் 8 மணி நேரமாக என்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. இடது கை வைத்த இடத்தில் வைத்த மாதிரியே இருந்தது. பின்னர் ஒருவழியாக டாட்டூவை போட்டுவிட்டார்கள். எதிர்பார்த்தபடி இது பச்சை, நீலம், சிவப்பு நிறங்களில் மிகச்சரியாக வந்திருந்தது. உண்மையான திருமண சான்றிதழுக்கும், இதற்கும் இடையே பெரிய அளவுக்கு வித்தியாசம் இருக்கவில்லை. ஆனால் 8 மணி நேரமாக கையை ஒரே இடத்தில் வைத்திருந்ததால் என்னால் எந்த வேலையையும் சரியாக செய்ய முடியவில்லை. இதே வலியோடு வீட்டிற்கு கார் ஓட்டிக்கொண்டு வந்து சேர்ந்தேன்.

காதலர் தினம்
சரியாக பிப்ரவரி 13 அன்று நள்ளிரவு 11.58 மணிக்கு எனது மனைவியிடம் இந்த டாட்டூவை காட்டினேன். முதலில் அவள் பயந்துவிட்டாள். கைக்கு ஏதோ அடிப்பட்டுவிட்டது. ஒரே சிவப்பாக இருக்கிறது மருத்துவமனைக்கு போகலாம் வா என்று அழைத்தாள். பின்னர் அவளுக்கு சொல்லி புரிய வைத்தேன். என்னையும் டாட்டூவையும் மாறி மாறி பார்த்துவிட்டு திடீரென திட்ட தொடங்கிவிட்டாள். என்னுடைய மண்டை குழம்பிவிட்டது என்றும், மனநல ஆலோசகரை சென்று பார்க்க வேண்டும் எனவும் திட்டிக்கொண்டிருந்தாள். நான் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

சமாதானம்
கொஞ்ச நேரம் கழித்து என்னிடம் வந்து ஏன் இதையெல்லாம் செய்கிறார்? என்று கேட்டு கட்டிப்பிடித்துக்கொண்டாள். அவள் திட்டியது எல்லாம் மறந்துவிட்டது" என்று கூறியுள்ளார். இந்த டாட்டூவை வரைந்த கலைஞர் கூறுகையில், "இதற்கு முன்னர் நான் இதுபோன்று டாட்டூவை வரைந்தது கிடையாது. எனவே சற்று பயத்துடன்தான் இதனை வரைந்து கொடுத்தேன். எனக்கு இது புதிய அனுபவமாகதான் இருந்தது. இதில் மிகவும் சிரமமான பகுதி எதுவெனில், சுற்றியிருந்த டிசைன்தான்.

கொஞ்சம் கஷ்டம்தான்
அதேபோல சர்டிஃபிகேட்டில் இருந்த அனைத்தையும் இந்த சிறிய கைக்குள் கொண்டு வருவது கொஞ்சம் கஷ்டம்தான். இதற்கு முன்னர் இவருடைய மனைவியின் புகைப்படத்தை டாட்டூவாக வரைந்திருக்கிறேன். அந்த வகையில் இவர் எனக்கு கொடுத்த இரண்டாவது பெரிய அசைமென்ட் இது" என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications