சர்வதேச நீதிமன்றத்தின் கைது வாரண்ட்.. புதினுக்கு இப்படி எல்லாம் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருக்கா?
சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பல்வேறு நாடுகளுக்கு சுதந்திரமாக பயணம் செய்வதில் சில சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
மாஸ்கோ: உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக வந்த புகாரின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது. இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவு புதினை சிறையில் அவ்வளவு எளிதில் தள்ளிவிடாது என்றாலும் பல்வேறு நாடுகளுக்கு சுதந்திரமாக பயணம் செய்வதில் புதினுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
Recommended Video
நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி உக்ரன் மீது ரஷ்யா யாரும் எதிர்பாராத வகையில் போர் தொடுத்தது. போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளிப்பதால் ரஷ்யாவால் தனது திட்டத்தை எளிதில் நிறைவேற்ற முடியாமல் போயிவிட்டது.

உக்ரைன் ரஷ்யா போர்
ஓராண்டைக் கடந்தும் போர் இன்னமும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து வருகிறது. இந்த போரால் உக்ரைனில் இருந்து பல லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் போர் நடவடிக்கையாக உக்ரைன் மீது ரஷ்யா வான்வெளி மற்றும் தரை வழி தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைனில் வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் பல ஆயிரம் பலியாகி உள்ளன.

ரஷ்யா மீது குற்றச்சாட்டு
சர்வதேச அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி, ரஷியா தொடர்ந்து போரை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய படையினர் மீதும் உக்ரைன் தரப்பில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. பள்ளிக்கூடம், மருத்துவமனைகள் மீது குண்டுவீசுகிறது என்றும் படை வீரர்கள் உக்ரைன் பெண்களை மிரட்டில் வன்புணர்வு செய்கின்றனர் ரஷ்யா மீது உக்ரைன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது.

ரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட்
அதோடு போர் விதிகளை மீறி ரஷ்யா பல்வேறு கொடூர செயல்களை அரங்கேற்றி வருகிறது என உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் நெதர்லாந்தின் ஹாக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மனுக்கள் செய்ய்ப்பட்டுள்ளன. இதற்கு மத்தியில் உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக புதிய புகார்கள் எழுந்தன. இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அந்நாட்டின் குழந்தைகள் உரிமை ஆணையர் மரியா அலெக்ஸீவ்னா லவோவா ஆகியோருக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

சட்ட ரீதியிலும் பயன் இல்லை
ரஷ்ய அதிபருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இந்த கைது வாரண்ட் சர்வதேச அளவில் பரபரப்பு செய்தியாக மாறியது. ஒரு நாட்டின் அதிபராக இருக்கும் புதினை கைது செய்ய முடியுமா? அப்படி கைது செய்தால் எந்த மாதிரியான தாக்கம் ஏற்படும் என்ற விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் கூட எழுந்ததன. சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்த உடனேயே இது குறித்து கருத்து தெரிவித்த ரஷ்யா, இதில் எந்த அர்த்தமும் கிடையாது, சட்ட ரீதியிலும் பயன் இல்லை என்ற ரீதியில் கருத்து தெரிவித்து இருந்தது.

பயணம் செய்வதில் சிக்கல்?
சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு புதினை சிறையில் அவ்வளவு எளிதில் தள்ளிவிடாது என்றாலும் பல்வேறு நாடுகளுக்கு சுதந்திரமாக பயணம் செய்வதில் புதினுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் உலக தலைவர்களை சந்திப்பதிலும் சில பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு நாட்டின் தலைவராக இருக்கும் போதே இதுபோன்ற நடவடடிக்கை எடுக்கப்பட்ட மூன்றாவது தலைவர் புதின் ஆவார்.












Click it and Unblock the Notifications