இறங்கியடித்த நம் உளவுத்துறை.. வங்கதேச ராணுவ தளபதியை முடிக்க நினைத்த பாகிஸ்தானுக்கு விழுந்த அடி- மாஸ்
டாக்கா: வங்கதேசம் நம்மை சீண்டி வரும் நிலையில் அந்த நாட்டின் ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் நம் நாட்டுடன் நல்லுறவை விரும்பி வருகிறார். இதனால் அவரது கதையை முடித்து ராணுவ தலைமை பதவியில் இருந்து இறக்க வங்கதேச இடைக்கால அரசு பாகிஸ்தானின் உளவுப்பிரிவுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியது. இதனை நம் நாட்டின் உளவுப்பிரிவு கண்டுபிடித்து அலர்ட் செய்ததோடு, அமெரிக்கா, நேட்டோ நாடுகளுடன் சேர்ந்து சம்பவம் செய்து வாக்கர் உஸ் ஜமானை காப்பாற்றி உள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
திரைப்படங்களில் எப்படி கிளைமேக்ஸில் ட்விஸ்ட் அண்ட் டேர்ன் இருக்குமோ அதுபோன்று இந்திய உளவுத்துறை கச்சிதமாக செயல்பட்டு வங்கதேச ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமானை காப்பாற்றியது பற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:

அண்டை நாடாக வங்கதேசம் உள்ளது. கடந்த ஆண்டு நடந்த மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்தார். இப்போது அங்கு இடைக்கால அரசு நடந்து வருகிறது. அதன் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார்.
இவர் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறார். அதேவேளையில் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறார். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் சேர்ந்து முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார். இதனால் வங்கதேசத்துக்கும், நம் நாட்டுக்கும் இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
ராணுவ தளபதியை மாற்ற சதி
இப்படியான சூழலில் தான் வங்கதேசத்தின் ராணுவ தளபதியாக உள்ள வாக்கர் உஸ் ஜமானை வங்கதேச இடைக்கால அரசு மற்றும் பாகிஸ்தான் நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இணைந்து காலி செய்ய முடிவு செய்தது. அதாவது வாக்கர் உஸ் ஜமானை ராணுவ தளபதி பொறுப்பில் இருந்து நீக்கி அந்த இடத்தில் இன்னொரு அதிகாரியை நியமிக்க சதித்திட்டம் தீட்டியது. அதன்படி லெப்டினன்ட் ஜெனரல் முகமது பைசூர் ரஹ்மானை வங்கதேசத்தின் புதிய ராணுவ தளபதியாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
யார் இந்த பைசூர் ஜமான்?
இந்த பைசூர் ரஹ்மான் தற்போது வங்கதேச ராணுவத்தின் Quartermaste General அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இவரது பணி என்னவென்றால் ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள், சீருடைகள், உணவு உள்ளிட்டவற்றை வாங்கி வழங்குவது தான். இந்த பொறுப்புக்கு அவர் வரும் முன்பு வங்கதேசத்தின் உளவுப்பிரிவின் தலைமை பொறுப்பில் பணியாற்றி வந்தார்.
உளவுப்பிரிவில் இருந்து அவரை Quartermaste General பிரிவுக்கு மாற்றியது வாக்கர் உஸ் ஜமான் தான். உளவுப்பிரிவின் தலைமை பொறுப்பு என்பது மிகவும் முக்கியமானது. ஆனால் அவரை வாக்கர் உஸ் ஜமான் Quartermaste General பிரிவுக்கு மாற்றி டம்மியாக்கினார். இதற்கு முக்கிய காரணம் இந்த பைசூர் ரஹ்மான் பாகிஸ்தான் உளவுப்பிரிவான ஐஎஸ்ஐ மற்றும் ஜமாத் இ இஸ்லாமி உள்பட பாகிஸ்தான் ஆதரவு அமைப்பின் தலைவர்களுடன் நெருக்கம் காட்டியது தான். இதனால் தான் அவருக்கு ‛பனிஷ்மெண்ட்' கொடுக்கும் வகையில் வாக்கர் உஸ் ஜமான் இந்த பொறுப்பை வழங்கினார்.
சதியில் இறங்கிய பாகிஸ்தான்
ஆனாலும் பைசூர் ரஹ்மான் திருந்தவில்லை. பைசூர் ரஹ்மான் கடும் அதிருப்தியில் இருந்தார். இதற்கிடையே தான் பைசூர் ரஹ்மான், தற்போதைய இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் நம்பிக்கை பெற்றவர்களிடம் மிகவும் நெருக்கமாக இருக்கிறார். இப்படியான சூழலில் தான் தங்களுக்கு விசுவாசமான பைசூர் ரஹ்மானை ராணுவ தளபதியாக்க பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு திட்டமிட்டு காய் நகர்த்தியது.
அதோடு தற்போதைய ராணுவ தளபதியாக உள்ள வாக்கர் உஸ் ஜமான், ஷேக் ஹசீனாவின் உறவினர் ஆவார். இவர் கடந்த ஆண்டு ஜுன் மாதம் தான் ஷேக் ஹசீனாவால் வங்கதேச ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார். இவர் 2026ம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் இந்த பொறுப்பில் இருப்பார். இதனால் அதற்கு முன்பாகவே வாக்கர் உஸ் ஜமானை பதவியில் இருந்து நீக்க பாகிஸ்தான் சதி வேலைகளை செய்தது.
அதன்படி பாகிஸ்தான் உளவுப்பிரிவை தலைமை அதிகாரியான ஜெனரல் அசீம் மாலிக் உள்பட பிற அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி வங்கதேசம் சென்றனர். வங்கதேசம் 1971ல் சுதந்திரம் அடைந்த பிறகு பாகிஸ்தான் அதிகாரிகள் வங்கதேசம் செல்வது இதுதான் முதல் முறை. அப்போது தான் இந்த பணியை அவர்கள் தொடங்கினர். பாகிஸ்தான் உளவுப்பிரிவு அதிகாரிகள் வங்கதேசத்துக்கு வருவதை வாக்கர் உஸ் ஜமான் விரும்பவில்லை. இதனால் அவர் ஐஎஸ்ஐ அதிகாரிகளை சந்திக்கவில்லை. ஆனால் முகமது யூனுஸால் அவர்கள் வங்கதேசம் சென்றனர்.
இந்த வேளையில் வாக்கர் உஸ் ஜமான், பாகிஸ்தான் உளவு அதிகாரிகளை சந்திப்பதை தவிர்த்தார். மாறாக பைசூர் ரஹ்மான் தான் அவர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு இடங்களுக்கும் அழைத்து சென்றார். குறிப்பாக நம் நாட்டின் எல்லை பகுதியான கோழிக்கழுத்து பகுதி வரை அழைத்து சென்றார். இதையடுத்து பைசூர் ரஹ்மானுக்கு, வாக்கர் உஸ் ஜமான் விளக்கம் கேட்டார்.
இதையடுத்து வாக்கர் உஸ் ஜமானை நீக்குவதில் உறுதியாக மாறியது பாகிஸ்தான் உளவுப்பிரிவு. இதையடுத்து பைசூர் ரஹ்மான் ராணுவத்தில் தனக்கான ஆதரவை பெற திட்டமிட்டார்.
ஆதரவில் வந்த சிக்கல்
இதற்கான ராணுவ அதிகாரிகளுடன் பைசூர் ரஹ்மான் ரகசிய மீட்டிங் நடத்தினார். அப்போது படைப்பிரிவுகளை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள 6 மேஜர் ஜெனரல்கள் நேரடியாக பைசூர் ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்தனர். இன்னும் 2 மேஜர் ஜெனரல்கள் கண்டிஷன்களுடன் ஆதரவு வழங்கினர். இருப்பினும் லெப்டினன்ட் ஜெனரல் அதிகாரிகளிடம் இருந்து பைசூர் ரஹ்மானுக்கு ஆதரவு என்பது கிடைக்கவில்லை.
வங்கதேச ராணுவ தலைமையகத்தில் பொறுப்பில் உள்ள லெப்டினன்ட் ஜெனரல் மிசானூர் ரஹ்மான் ஷாகிம், அதேபோல் லெப்டினன்ட் ஜெனரல்கள் முகமது ஷாகினுல் ஹக், முகமது மைனூர் ரஹ்மான் ஆகியோர் ஆதரவு கொடுக்க மறுத்துவிட்டனர். அதேபோல் கடற்படை, விமானப்படை தளபதிகளும் அவருக்கு பிடி கொடுக்கவில்லை இது பைசூர் ரஹ்மானுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இதனால் அவரது முயற்சி தாமதமாக தொடங்கியது.
இன்னொரு அதிகாரியும் சதி
இதற்கிடையே தான் இன்னொரு லெப்டினன்ட் ஜெனரல் எஸ்எம் கம்ரூல் ஹாசன் என்பவரும், வாக்கர் உஸ் ஜமானை அந்த பொறுப்பில் இருந்து நீக்க திட்டமிட்டார். கம்ரூல் இஸ்லாம் வங்கதேசத்தின் படைப்பிரிவின் Principal Staff Officer ஆக உள்ளார். இவரும் 6 பேர் கொண்ட குழுவுடன் ஜனவரி 13 முதல் ஜனவரி 18 ம் தேதி வரை பாகிஸ்தான் சென்று உளவுத்துறை அதிகாரிகளை சந்தித்து பேசினர்.
அதன்பிறகு ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமானுக்கு அதுபற்றிய விஷயத்தை பகிராமல் நேரடியாக முகமது யூனுஸிடம் அறிக்கை அளித்தார். இதன்மூலம் 2 அதிகாரிகள் வாக்கர் உஸ் ஜமானை பதவியில் இருந்து நீக்க திட்டமிட்டு காய்நகர்த்தி வந்தனர்.
களமிறங்கிய நம் நாட்டு உளவுத்துறை
இதுபற்றிய அனைத்து விஷயங்களையும் நம் நாட்டின் உளவுத்துறை சேகரித்தது. கடந்த ஜனவரி மாதமே வங்கதேச தலைமை ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமானுக்கு தகவல் அனுப்பியது. ஆனாலும் அதுபற்றி விரிவான தகவல்களை கொடுக்க முடியவில்லை. வாக்கர் உஸ் ஜமானின் சாதனங்கள் ஒட்டுகேட்கப்படும் அபாயம் இருந்தது.
இதனால் நம் நாடு மாற்று ஏற்பாட்டை கையில் எடுத்தது. ஏற்கனவே வாக்கர் உஸ் ஜமானுக்கு தகவலை பாஸ் செய்த நிலையில் அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகளுக்கு இந்த தகவலை நம் நாடு வழங்கியது. வங்கதேச ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமானின் பதவியை பறிக்க பாகிஸ்தான் உளவுத்துறை திட்டமிட்டு இருப்பது பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்கா - பிரிட்டன் கொடுத்த வார்னிங்
வங்கதேசத்தில் நடக்கும் இந்த செயல் என்பது தெற்காசியா பிராந்தியத்தின் மீது பாதுகாப்பு பிரச்சனையை ஏற்படுத்தும். இஸ்லாமிய அமைப்புகளை ஊக்குவித்து பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும். பாகிஸ்தான் போல் வங்கதேசமும் மாறி விடும். இதனால் இந்தியா மட்டுமின்றி மொத்த உலகுக்கு சிக்கல் ஏற்படலாம் என்று இந்தியா சார்பில் எடுத்து கூறப்பட்டது. இதனை அமெரிக்கா சீரியஸாக எடுத்து கொண்டது.
அதுமட்டுமின்றி அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், வங்கதேசத்தின் இடைக்கால அரசின் முகமது யூனுஸ்க்கும் ஏற்கனவே பழைய பகை உள்ளது. அதேபோல் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான நேட்டோ நாடுகள் சிலவற்றிடம் இருந்தும் வங்கதேச இடைக்கால அரசுக்கு வார்னிங் போனது.
இப்படியான சூழலில் தான் அமெரிக்காவில் இருந்து முகமது யூனுஸ்க்கு ஒரு செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமானின் பதவி நீக்க நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று கூறப்பட்டது. பிரிட்டன் சார்பில் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த முயற்சி என்பது நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்தியாவின் அடுத்த திட்டம்
மேலும் வாக்கர் உஸ் ஜமானுக்கு எதிராக நடக்கும் சதி வேலைகளை நம் உளவுத்துறை நேரடியாக அவரிடம் கூற வேண்டும் என்று விரும்பியது. இதற்காக நம் நாடு ஒரு ஐடியாவை போட்டுக்கொடுத்தது. அந்த ஐடியாவின்படி வங்கதேச ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் சென்ட்ரல் ஆப்ரிக்கன் ரீபப்ளிக் நாட்டுக்கு மார்ச் 3ம் தேதி சென்றார். அங்கு ஐநா அமைதி படையின் வங்கதேச குழுவினரை சந்திக்க உள்ளதாக கூறி சென்றார்.
இந்த வேளையில் ஐநா பொதுச்செயலாளர் வாலண்டைன் ருக்வாபிசா மற்றும் ஐநாவின் சிறப்பு பிரதிநிதியை சந்தித்தார். அமைதி காக்கும் படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹம்ப்ரி நியோன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு ஆயுதப்படைகளின் தலைவர் ஜெனரல் மமடூ ஜெஃபிரின் உள்ளிட்டவர்களை அவர் சந்தித்தார். அங்கு வைத்து இந்திய உளவுத்துறை அதிகாரிகள் அனைத்து விஷயங்களையும் வாக்கர் உஸ் ஜமானிடம் தெரிவித்தனர்.
மோப்பம் பிடித்த பாகிஸ்தான் உளவுத்துறை
இதற்கிடையே தான் பாகிஸ்தான் உளவுத்துறை இந்த விஷயங்களை மோப்பம் பிடித்தது. இதையடுத்து உடனடியாக வங்கதேசத்தில் உள்ள தங்களின் ஆதரவு லெப்டினன்ட் ஜெனரலை அலர்ட் செய்தது.
ஆப்ரிக்கன் குடியரசு நாட்டில் இருந்து நாடு திரும்பும் வாக்கர் உஸ் ஜமானை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் உளவுத்துறை உத்தரவு பிறப்பித்தது. பைசூர் ரஹ்மான், வாக்கர் உஸ் ஜமானை கைது செய்ய வங்கதேச தலைநகர் டாக்காவில் தயாராக இருந்தார்.
பாகிஸ்தானுக்கு இந்தியா வைத்த ட்விஸ்ட்
இதனை கண்டுபிடித்த நம் நாட்டின் உளவுத்துறை உடனடியாக வாக்கர் உஸ் ஜமான் இறங்கும் இடத்தை மாற்றியது. அதன்படி டாக்காவிற்கு பதில் வாக்கர் உஸ் ஜமான் விமானம் டாக்கா அருகே உள்ள தேஜ்கான் விமான தளத்தில் இறங்கியது. அங்கிருந்து வாக்கர் உஸ் ஜமானை அவரது ஆதரவு அதிகாரிகள் அழைத்து சென்றனர். அதன்பிறகு வாக்கர் உஸ் ஜமான் தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளை அழைத்து பகிரங்கமாக வார்னிங் செய்தார்.
தனக்கு எதிராக சதி வேலையில் ஈடுபட்டால் தண்டனை கடினமானதாக இருக்கும் என்று எச்சரித்தார். அதுமட்டுமின்றி வாக்கர் உஸ் ஜமானுக்கு எதிராக பாகிஸ்தான் உளவுத்துறையுடன் சேர்ந்து செயல்பட்ட பைசூர் ரஹ்மான் களையெடுக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் மீது ராணுவ சட்டத்தின்படி நடவடிக்கை என்பது எடுக்கப்பட உள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications