விமானத்தில் தூங்கிய சிறுமியிடம் கையை வைத்து விளையாடிய இந்திய டாக்டர் கைது
சியாட்டில்: அமெரிக்காவில் ஓடும் விமானத்தில் தூங்கிக் கொண்டிருந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டதாக இந்திய டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஜூலை 23ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த சிறுமி தனியாக விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது அருகில் பயணித்த இந்த 28 வயது இந்திய டாக்டர், சிறுமியின் தொடையில் கை வைத்துள்ளார். இதனால் அச்சிறுமி திடுக்கிட்டு எழுந்துள்ளார். சியாட்டிலிலிருந்து நியூஜெர்சி சென்று கொண்டிருந்த யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானம் அது.

அந்த நபரின் பெயர் விஜயக்குமார் கிருஷ்ணப்பா எனத் தெரிய வந்துள்ளது. அவரது செயல் குறித்து விமான ஊழியர்களிடம் சிறுமி புகார் கொடுத்தார். இதையடுத்து அவர் வேறு சீட்டில் அமர வைக்கப்பட்டார். விமானம் நெவார்க் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது டாக்டர் வேகமாக இறங்கிப் போய் விட்டார். இதையடுத்து சிறுமி தனது பெற்றோருக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் விமான நிறுவனம் மீதும், டாக்டர் மீதும் புகார் கொடுத்தனர்.
இந்த விவகாரம் பின்னர் எப்பிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி கிருஷ்ணப்பாவைக் கம்டுபிடித்துக் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரைக் கண்காணிப்பின் கீழ் போலீஸார் வைத்துள்ளனர்.
கிருஷ்ணப்பா மருத்துவம் படித்து வருகிறார். அவருக்காக வாதாட கோர்ட்டே வக்கீலையும் நியமித்துள்ளது.
-
30ஐ தொட்டதும் சட்டென உடல் எடை ஏறுதா? காரணம் இதுதான்! பலருக்கும் தெரியாத உண்மை -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications