கோமாவில் மொஜ்தபா கமேனி? ஈரான் புதிய உச்ச தலைவரின் கதையை முடித்த அமெரிக்கா – இஸ்ரேல்.. ஷாக் தகவல்
டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி காலை இழந்து கோமா நிலைக்கு சென்றுள்ளதாக பிரிட்டிஷ் பத்திரிகை செய்தி திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஈரானின் உச்ச தலைவராக இருந்தவர் அயதுல்லா அலி கமேனி. கடந்த மாதம் 28 ம் தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரானுக்கு எதிராக போரை தொடங்கியது . இதில் அயதுல்லா அலி கமேனி பலியானார். இதையடுத்து இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இடைக்கால அரசின் தலைவர்களை அமெரிக்கா, இஸ்ரேல் கொன்றது.

அதன்பிறகு ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டார். இவர் மறைந்த உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகன் ஆவார்.
பிரிட்டிஷ் நாளிதழ்
இந்நிலையில் தான் மொஜ்தபா கமேனி அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் படுகாயமடைந்து காலை இழந்து கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பிரிட்டிஷ் நாளிதழ் 'தி சன்' செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ''படுகொலை செய்யப்பட்ட அயதுல்லா அலி கமேனியை தொடர்ந்து அவரது மகன் மொஜ்தபா கமேனி உயர்மட்ட தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது அவர் இக்கட்டான நிலையில் சிக்கி உள்ளார்.
வயிறு - கல்லீரலில் கடும் பாதிப்பு
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் மொஜ்தபா கமேனிக்கு வயிறு அல்லது கல்லீரலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெஹ்ரானில் உள்ள சினா பல்கலைக்கழக மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மூத்த அறுவை சிகிச்சை நிபுணரும் ஈரான் சுகாதார அமைச்சருமான முகமது ரெஸா ஜாஃபர்கண்டி மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது
கோமா நிலையில் இருப்பதாக..
பிப்ரவரி 28 அன்று அவரது தந்தை கொல்லப்பட்ட அதே தாக்குதலில் மொஜ்தபா கமேனியும் காயமடைந்தாரா என்பது பற்றி தெளிவு இல்லை. இருப்பினும் தற்போது அவர் ஈரானின் போர் வியூகத்தை வழிநடத்தவில்லை. இதுதான் உலகளாவிய எரிபொருள் விஷயத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி தலைநகர் டெஹ்ரானை சேர்ந்த ஒருவர், 'மொஜ்தபா கமேனிக்கு ஒன்று அல்லது 2 கால்கள் அகற்றப்பட்டுள்ளது. கல்லீரல், வயிறு சிதைந்துள்ளது. அவர் கோமா நிலையிலும் இருக்கிறார்'' என கூறியுள்ளார்.
வெளியான அறிக்கை
இருப்பினும் மொஜ்தபா கமேனி பற்றி ஈரான் தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தற்கிடையே தான் மொஜ்தபா கமேனி முதல் முறையாக நடக்கும் போர் விவகாரம் பற்றி நாட்டு மக்களுக்கு செய்தி வழங்கினார். தொலைக்காட்சியில் அவர் நேரில் தோன்றி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மொஜ்தபா கமேனி பெயரில் வெளியான அறிக்கையை மட்டுமே ஈரான் தொலைக்காட்சிகள் செய்தி வாசிப்பாளர் மூலமாக ஒளிபரப்பியது. இதனால் உண்மையில் மொஜ்தபா கமேனி கோமா நிலையில் உள்ளாரா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications