"பரிதாபத்தில் ஈரான்".. இஸ்ரேலை தொடக்கூட முடியல! குறுக்கே டிரம்ப் இறக்கிய கொடூர ராட்சசன் – பின்னணி
டெல்அவிவ்: இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து ஈரானை கடுமையாக தாக்கி வருகின்றன. பதிலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. அரபு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் படைதளங்களை ஈரான் தாக்கினாலும் கூட தன்னை குறிவைத்து அடிக்கும் இஸ்ரேலை, ஈரானால் ‛அட்டாக்' செய்ய முடியவில்லையாம். இதற்கு, இஸ்ரேலை பாதுகாக்க டிரம்ப் கொடுத்த உலகிலேயே மிகப்பெரிய ராட்சத விமானம் தாங்கி போர்க்கப்பலின் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று தொடங்கிய இந்த போர் 2வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து நேற்று ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொன்றுவிட்டது. மேலும் ஏராளமானவர்கள் பலியாகி உள்ளனர். பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏராளமான மாணவர்கள் இறந்துள்ளனர்.
{image-ussgerald1-1772365770.jpg tamil.oneindia.com
இதற்கு பழி தீர்க்க ஈரானும், அதன் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்பான ஹவுதியும் சேர்ந்து இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தின. அமெரிக்காவை பழிவாங்கும் வகையில் கத்தார், குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.
இந்த நாடுகளில் அமெரிக்காவின் விமானப்படை தளம், ராணுவ முகாம், கடற்படை தளங்கள் உள்ளன. அதனை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த நாடுகள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைவை வைத்து ஈரான் தாக்கி உள்ளது.
இதில் ஒருவர் பலியான நிலையில் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர். மறுபுறம். இஸ்ரேல் மீது நேரடியாக ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் மீது டிரோன், ஏவுகணைகளை வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.
இந்த தாக்குதலுக்கு சுமார் 50க்கும் அதிகமான பாலிஸ்டிக் ஏவுகணையை ஈரான் பயன்படுத்தி உள்ளது. இதில் பெரும்பாலானவற்றை இஸ்ரேல் ஏவுகணை தடுப்பு கவசங்கள் வானிலேயே இடைமறித்து அழித்து விட்டன. இஸ்ரேல் பயன்படுத்தி வரும் அயர்ன்டோம் வான்வெளி பாதுகாப்பு சாதனம் திறம்பட செயல்பட்டு ஈரானின் ஏவுகணைகளை வானிலேயே அழித்துவிட்டன. இருப்பினும் கடந்த ஆண்டு ஈரான், இஸ்ரேல் இடையே மோதல் நடந்தது. அப்போது ஈரானி்ன ஏவுகணைகள், இஸ்ரேலை தாக்கிய நிலையில் இப்போது அப்படியான தாக்குதலை ஈரானால் முன்னெடுக்க முடியவில்லை.
இது பலருக்கும் சந்தேகங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஈரானை அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தாக்கினால் அதிக பாதிப்பு இஸ்ரேலுக்கு தான் ஏற்படும். ஏனென்றால் இஸ்ரேலும், அமெரிக்காவும் நெருங்கிய நட்பு நாடுகள். இந்த 2 நாடுகளும் சேர்ந்து தான் கடந்த ஆண்டு ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.
இதனால் ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலும் தங்கள் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதை அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிந்து வைத்திருந்தார்.அதேபோல் அமெரி்க்க அதிபர் டொனால் டிரம்பும் உணர்ந்திருந்தார். இதனால் இஸ்ரேலை பாதுகாக்க டிரம்ப் முடிவு செய்தார்.
இஸ்ரேலை பொறுத்தவரை எதிரி நாடு வீசும் ஏவுகணைகளை தடுத்து வானிலேயே அழிக்கும் அயன்டோம், டேவிட்ஸ் ஸ்லிங், ஆரோ-2, ஆரோ-3 என்னும் மூன்று முக்கிய ஏவுகணை தடுப்பு கவசங்களும் உள்ளன. இது இல்லாமல், அயன் பீம் என்னும் புதிய ஏவுகணை தடுப்பு அமைப்பையும் இஸ்ரேல் உருவாக்கி உள்ளது.
இவற்றை எல்லாம் தாண்டி இஸ்ரேலை தாக்குவது ஈரானுக்கு கடினமான காரியம் தான். ஆனாலும் இந்த முறை ஈரான் தலைவர் காமேனியை கொல்வது தான் இலக்கு. இதனால் போர் உக்கிரமாக இருக்கும். இதனால் இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகிலேயே சக்தி வாய்ந்த விமானம் தாங்கி போர் கப்பலை இஸ்ரேலுக்கு அனுப்பி பாதுகாப்பு அரணாக நிறுத்தி உள்ளார்.
அந்த விமானம் தாங்கி போர்க்கப்பலின் பெயர் USS Gerald R Ford என்பதாகும். இது பிரமாண்டமான போர்க்கப்பலாகும். உலகிலேயே மிகப்பெரிய விமானம் தாங்கி போர் கப்பல் என்றால் அது ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் தான். இதன் நீளம் 1106 அடி. அகலம் 256 அடி. ஒரு லட்சம் டன் எடை கொண்டது. 90 போர் விமானங்கள் மட்டும் இன்றி, 4,600 போர் வீரர்களையும் சுமந்து செல்ல முடியும். மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. RIM-162 ESSM, RIM-116 Rolling Airframe, Phalanx CIWS போன்ற ஏவுகணைகளை ஏவி எதிரி நாட்டை தாக்க முடியும்.
இந்த போர்க்கப்பலால் ஒரே நேரத்தில் 90 அதிநவீன போர் விமானங்களை சுமந்து செல்ல முடியும். இதில் இருக்கும் போர் விமானங்களை வைத்து எதிரி நாடுகள் மீது குண்டு வீசவும் முடியும், எதிரி நாடுகள் வீசும் குண்டுகளை வானிலேயே இடை மறித்து அழிக்கவும் முடியும். எதிரிகளின் ஏவுகணைகளின் பாதையை கண்டறியும் வகையில் சக்தி வாய்ந்த ராடார் சிஸ்டம் உண்டு.
இந்த போர் கப்பலின் மதிப்பு 13.3 பில்லியன் அமெரிக்க டாலராம். அதாவது இந்திய மதிப்பில் 1 லட்சத்து 21 ஆயிரம் கோடி ரூபாயாகும். இவ்வளவு விலை உயர்ந்த விமானம் தாங்கி போர் கப்பலை தான் தனது கூட்டாளியான இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா நிலை நிறுத்தி உள்ளது.
இத்தகைய வசதி கொண்ட இந்த போர்க்கப்பல் தற்போது இஸ்ரேலின் துறைமுக நகரான ஹைஃபா அருகே கடலில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் ஈரானால், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த முடியவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி ஈரானை தாக்க டிரம்ப் தனி திட்டத்தை வகுத்துள்ளார்.
தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் 2 மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல் உள்ளது. ஒன்று யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன். இது ஈரான் அருகே நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பலில் உள்ள போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி அமெரிக்கா, ஈரானை தாக்கி வ/ருகிறது. மறுபுறம் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் கப்பல் இஸ்ரேலுக்கு பாதுகாப்பு கவசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
பாகிஸ்தான் இருக்க வேண்டிய இடம் இதுதான்.. முகத்தில் அறைந்த அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை -
ஈரான் போர் காரணமாக எந்தெந்த நாட்டில் என்ன இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது தெரியுமா? லிஸ்ட் இதோ -
ஈரானிடம் உள்ள 400 கிலோ யுரேனியம்.. கண்வைத்த டிரம்ப்.. தரைவழி தாக்கி மீட்க அமெரிக்கா மாஸ்டர் பிளான் -
"அடுத்து கியூபா தான்.." ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் அமெரிக்கா.. வெளிப்படையாக டிரம்ப் எச்சரிக்கை -
நீங்க ஒன்னும் மன்னர் கிடையாது.. அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக்












Click it and Unblock the Notifications