இஸ்ரேல் வேலை.. மொசாத்தான் செய்து இருக்கும்? ஈரான் அதிபர் விபத்தில் பலி.. திடீரென எழுந்த சந்தேகம்!
டெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் பலியான நிலையில் இஸ்ரேல் நாட்டு உளவு அமைப்பான மொசாத் டிரெண்டாகி வருகிறது.
இஸ்ரேல் - ஈரான் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலியப் படைகள் கடந்த சில மாதம் முன் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் சிரியா வடக்கு நகரமான அலெப்போவில் உள்ள விமான நிலையங்கள் மீது நேரத்தில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. சிரியா மீது நடத்தப்பட்ட இந்த அட்டாக்தான் ஈரான் - இஸ்ரேல் மோதலுக்கு முக்கிய காரணம்.

அங்கு உள்ள ஓடுபாதைகளை சேதப்படுத்தியதாகவும், இரண்டு குடியிருப்புகள் அருகே ராக்கெட் தாக்குதல் நடத்தியதாகவும் கூறியது. அதோடு நிற்காமல் கடந்த ஏப்ரல் 1ம் தேதி சிரியாவில் இருக்கும் ஈரான் தூதரகம் மீது, இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இங்குதான் மோதல் உச்சம் பெற்றது.
சிரியாவில் ஹெஸ்புல்லா படையினர் உள்ளனர். இவர்கள் ஈரான் ஆதரவு போராளிகள். இவர்கள்தான் பாலஸ்தீனத்தில் ஹமாஸ் படைக்கு உதவி செய்வதாக கூறப்பட்டது. இவர்களின் ஆதரவின் பெயரிலேயே ஹமாஸ் படைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில்தான் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.
மோதல் உச்சம்: அங்கே இஸ்ரேல் தாக்குதல் நடந்த போது ஈரான் ராணுவ அதிகாரிகளின் கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. ஈரானிய இராணுவத் தளபதிகள் டமாஸ்கஸில் உள்ள ஈரானின் தூதரக வளாகத்திற்குள் உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டுவது பாதுகாப்பானது என்று நினைத்து அங்கே கூட்டம் நடத்திக் கொண்டு இருந்தனர். சர்வதேச விதிமுறைகளின் படி தூதரகங்களை தாக்க கூடாது. இதனால் அங்கே ஈரான் ராணுவ அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. ஆனால் அதை மீறி இங்கே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
ஆனால் சர்வதேச யுஎன் விதிகளை மீறி தூதரக வளாகத்தின் மீது வான்வழித் தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபட்டது. இதில் ஏழு ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஈரானின் உயர்மட்ட ராணுவ அதிகாரிகளில் ஒருவரான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி கொல்லப்பட்டார். இவர் புரட்சிகர காவல்படையின் (IRGC) மூத்த தளபதி ஆவார்.
ஈரான் பதிலடி: இந்த தாக்குதலுக்குத்தான் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஈரான் பதிலடி கொடுத்தது. இஸ்ரேல் உள்ளே ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில்தான் இதற்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த தற்போது இஸ்ரேல் ஈரான் இடையே பயங்கரமான போர் மூண்டுள்ளது. இத்தனை நாள் இரண்டு நாடுகளுக்கு இடையில் புகைச்சல் இருந்து வந்த நிலையில் தற்போது இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.
போருக்கு இடையே மரணம்: இந்த போருக்கு இடையில்தான் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் பலியாகி உள்ளார். இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டு உளவு அமைப்பான மொசாத் டிரெண்டாகி வருகிறது. இது இஸ்ரேல் வேலையாக இருக்குமோ என்ற விவாதம் எழுந்துள்ளது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.. நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் யாரும் பிழைக்கவில்லை என்று ஈரான் அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் போருக்கு இடையே திடீரென ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்கு உள்ளானது. விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தை டிரோன் ஒன்று உறுதி செய்த நிலையில் அந்த பகுதியில் செய்யப்பட்ட சோதனையில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தது உறுதி ஆனது.
ஹெலிகாப்டரில் ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மற்றும் பிற அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்கள் இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் எல்லோரும் விபத்தில் பலியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications