ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு அயர்லாந்து தமிழ்ச் சங்கம் கண்டனம்
டப்லின்: சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் அகால மரணத்திற்கு அயர்லாந்து தமிழ்ச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சாத்தான்குளத்தில் தந்தை மகன் இறப்பு விவகாரம் குறித்து நாடுமுழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த சம்பவம் வெளிநாடு வாழ் தமிழர்களையும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு அயர்லாந்து தமிழ்ச் சங்கம் தனது கண்டனத்தை பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது. அந்த பதிவில் கொரோனா பேரிடர் காலத்தின் சவாலை நாம் எதிர்கொண்டிருக்கும் இந்த வேளையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தையும் மகனுமாகிய ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் இருவரின் அகால மரணத்திற்கு அயர்லாந்து தமிழ்ச்சங்கம் மிகுந்த வருத்தத்தையும் கண்டனத்தையும் பதிவு செய்கிறது.
தமிழக அரசு இதற்கு உரிய நியாயம் கிடைக்கவும் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடவாத வண்ணம் வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கவும் அயர்லாந்து தமிழ்ச்சங்கம் வலியுறுத்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications