இது உன் தாயை கொல்ல: 4 வயது சிறுவனின் கையில் வாளைக் கொடுத்த ஐஎஸ் தீவிரவாதிகள்

Subscribe to Oneindia Tamil

சனா: தன் மகனின் கையில் தீவிரவாதிகள் வாளை கொடுத்து இது உன் தாயை கொல்வதற்கு என தெரிவித்ததாக ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்துள்ள யசிதி இன பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிய யசிதி இன பெண் ஒருவர் அவர்களிடம் இருந்து தப்பி வந்துள்ளார். அவர் மற்றும் அவரின் குழந்தைகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர் என்புது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் தீவிரவாதிகள் பற்றி கூறுகையில்,

வாள்

வாள்

தீவிரவாதிகள் நான்கு வயதான என் மகனை என்னிடம் இருந்து பிரித்துச் சென்றனர். யசிதிகள் என்றால் காபிர்கள் என்றும், அவர்களை எதிர்த்து போராட வேண்டும் என்றும் அவர்கள் என் மகனிடம் தெரிவித்து வாள் ஒன்றை அளித்தனர்.

குர்ஆன்

குர்ஆன்

பயிற்சியின் ஒரு பங்காக தீவிரவாதிகள் என் மகனுக்கு குர்ஆன் ஓத கற்றுக் கொடுத்தனர், ஷரியா சட்டம், அரபியில் பேச, வாளை பயன்படுத்த கற்றுக் கொடுத்தனர். வாளை அவனிடம் கொடுக்கையில் இது உன் தாயை கொலை செய்ய என்று தெரிவித்தனர்.

பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

பயிற்சி முகாமில் என்ன கற்றுக் கொண்டாய் என்று கேட்டதற்கு கையால் கழுத்தை சீவுவது போன்று என் மகன் செய்து காண்பித்தான். என் 14 வயது மூத்த மகளை தீவிரவாதி ஒருவனுக்கு விற்றுவிட்டார்கள். 12 வயது மகனை ஜிஹாதி பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைத்துவிட்டனர்.

உணவு

உணவு

தீவிரவாதிகள் எங்களுக்கு போதைப் பொருள் கலந்த உணவை அளித்தார்கள். நாங்கள் எங்கும் தப்பியோடிவிடாமல் இருக்க அவ்வாறு செய்தார்கள். நாங்கள் குடிக்கும் தண்ணீரில் சிறுநீர் கலந்திருக்கும், உணவில் கண்ணாடி துண்டுகள் இருக்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+