காசாவுக்கு ஆதரவாக நின்ற கிரேட்டா தன்பர்க்.. எரிச்சலடைந்த இஸ்ரேல்! பாட புத்தகத்தில் அதிரடி மாற்றம்

Subscribe to Oneindia Tamil

அவிவ்: காசா மீது இஸ்ரேல் 17வது நாளாக இன்று தாக்குதலை தொடுத்து வருகிறது. இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு பிரபல சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த எதிர்ப்பையடுத்து தங்கள் நாட்டின் பாடபுத்தகங்களிலிருந்து கிரேட்டா தன்பர்க் தொடர்புடைய பாடப்பகுதி நீக்கப்படும் என இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் கிளர்ச்சி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்துவதும் பாலஸ்தீனத்தில் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்களாகும். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

Israel announces that Greta Thunbergs pro-Gaza passage will be removed from their countrys textbooks

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்தான் பலமான நாடு என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில், இந்த ஏவுகணை தாக்குதல் அந்நாட்டின் ஆத்திரத்தை அதிகமாக தூண்டியது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அதேபோல பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர் பெண்களையும், குழந்தைகளையும், ராணுவ வீரர்களையும் பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். இந்த கைதிகளை வைத்துதான் தற்போது இஸ்ரேலுக்கு, ஹமாஸ் போக்கு காட்டி வருகிறது. ஹமாஸின் இந்த பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா, பிரிட்டன் தொடங்கி பெரும்பாலான மேற்கு நாடுகள் கண்டித்திருக்கின்றன.

மறுபுறம் இஸ்ரேல், காசா மீது அதிரடி தாக்குதலை தொடுத்திருக்கிறது. கடந்த 16 நாட்களாக வான்வழி தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல் தற்போது தரை வழியாக ஊடுருவ முயன்று வருகிறது. அதற்கு முன்னதாக 17வது நாளான இன்றும் காசா மீது இஸ்ரேல் கடுமையான ஏவுகணை தாக்குதலை தொடுத்திருக்கிறது. இன்று அதிகாலை காசாவின் அல்-ஷிஃபா, அல்-குத்ஸ் மருத்துவமனைகளைச் சுற்றியுள்ள பகுதியில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை தொடுத்திருக்கிறது. ஏற்கெனவே காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 500க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இது சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது.

தற்போது வரை இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் 1,873 குழந்தைகள் 1,023 பெண்கள் உட்பட 4,651 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 14,245 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் நடத்திய தாக்குதில் 365 இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் உட்பட 1,405 பேர் பலியாகியுள்ளனர். இரு தரப்பிலும் போரை நிறுத்த வேண்டும் என்று, குறிப்பாக இஸ்ரேல், காசாவின் பொது மக்கள் மீதான கண்மூடித்தனமாக தாக்குதலை நிறுத்தக்கோரி 20க்கும் அதிகமான நாடுகளில் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இப்படி இருக்கையில் பிரபல சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரான ஸ்வீடனை சேர்ந்த கிரேட்டா தன்பர்க், காசாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது x சோஷியல் மீடியாவில் புகைப்படம் ஒன்றையும் தன்பர்க் பகிர்ந்திருக்கிறார். அதில் காசா மக்களுடன் இருக்கிறோம் என்றும், போர் நிறுத்தத்திற்கு உலக நாடுகள் குரல் கொடுக்க வேண்டும் என்றும் எழுதப்பட்ட பதாகைகளை தன்பர்க் மற்றும் அவருடைய சக நண்பர்கள் கைகளில் ஏந்தியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பினால் நடத்தப்பட்ட வன்முறைகள் குறித்து பேசும்படி வலியுறுத்தியுள்ளது. மேலும்,

"ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பாகும், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட 1,400 அப்பாவி இஸ்ரேலியர்களைக் கொன்றது, மேலும் அது 200க்கும் மேற்பட்டவர்களைக் கடத்தியுள்ளது. இப்படி இருக்கையில் காசா குறித்த தன்பர்க்கின் நிலைப்பாடு, காலநிலை செயற்பாட்டாளர் எனும் பொறுப்பிலிருந்து அவரை நீக்கியிருக்கிறது. தன்பர்க் இனி இஸ்ரேலிய மாணவர்களுக்கு ஒரு உத்வேகமாகவும் கல்வியாளராகவும் பணியாற்ற தகுதியற்றவர்" என்று இஸ்ரேல் கல்வித்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், இஸ்ரேல் பாட புத்தகங்களில் தன்பர்க் தொடர்பான பாடங்களை நீக்கவும் முடிவெடுத்துள்ளது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் விமர்சனங்களை தூண்டியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+