தாக்காத இடத்தில் எல்லாம் தாக்குவோம்.. மிக கடுமையாக போகிறது.. ஈரானுக்கு இஸ்ரேல் வார்னிங் மெசேஜ்

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்: இஸ்ரேல் இராணுவத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் மீது இதுவரை தாக்குதல் நடத்தாத இடங்களில் எல்லாம் தாக்குதல் நடத்த போகிறோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் .

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலைத் நடத்தினால் ஈரான் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும்". ஈரானை "மிகவும் மிகக் கடுமையாக" தாக்குவோம்.

iran israel palestine

ஈரான் தவறு செய்ய கூடாது. இஸ்ரேல் மீது இன்னும் ஒரு ஏவுகணையை ஏவினால் கூட ஈரானை கடுமையாக தாக்குவோம். ஈரானை எவ்வாறு தாக்குவது என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் இதுவரை தாக்காத இடங்களை கூட கடுமையாக தாக்குவோம்.

எதுவும் முடியவில்லை. எங்களின் பிளான்கள் தாக்குதல்கள் முடியவில்லை. நாங்கள் விடாமல் தாக்குவோம். தாக்குதலின் மையத்தில் இருக்கிறோம். அதை நிறுத்த மாட்டோம் என்று இஸ்ரேல் இராணுவத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்

நெதன்யாகுவின் வீட்டில் ட்ரோன் தாக்குதல் நடத்திய ஈரானுக்கு எதிரான இஸ்ரேல் இராணுவம் பதிலடி தர முடிவு செய்துள்ளதாம். இதற்கு முன் ஈரான் மீது நடந்த தாக்குதலில் இருந்து இந்த புதிய தாக்குதல் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று இஸ்ரேலின் சேனல் 13 தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டிற்கு எதிரான தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானுக்கு எதிரான மற்றொரு பதிலடி தாக்குதலை நடத்த இஸ்ரேலின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டாம் கட்ட தாக்குதலை நடத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேலில் சிசேரியாவில் உள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தனிப்பட்ட இல்லத்தின் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்கியதற்கு பதிலடியாக இந்த இரண்டாம் கட்ட தாக்குதல் நடத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. நேற்று நடந்த கூட்டத்தில் பதிலடி தாக்குதலை நடத்த இஸ்ரேலின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நீடிக்கும் இந்த நிழல் யுத்தம் ஒரு நேருக்கு நேர் இராணுவ மோதலாக வெடிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நேரம் உள்ள நிலையில்.. இஸ்ரேல் - ஈரான் இடையே போர் வெடிக்க போவதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அணு உலைகள்: இப்படிப்பட்ட நிலையில்தான் சர்வதேச அணுசக்தி முகமையிடம் (IAEA) இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் புகார் வைத்துள்ளது. தங்களின் அணு உலைகளை இஸ்ரேல் தாக்க வாய்ப்பு உள்ளதாக ஈரான் புகார் அளித்துள்ளது. அணுசக்தி தளங்களுக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்புச் செயல்களும் சர்வதேச சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டது. இதை அனுமதிக்க கூடாது என்று ஈரான் புகார் வைத்துள்ளது.

இது தொடர்பாக ஈரான் ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்புக்குழுவுக்கு முறையான கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஈரானின் அணு உலை மையங்களை விடக்கூடாது.. அதைதான் முதலில் தாக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.

இரண்டு நாட்டு மோதல்: கடந்த 2 நாட்களுக்கு முன் ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திடீரென பங்கருக்குள் சென்றதாக கூறப்படுகிறது.

அதன்படி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் 2-3 இஸ்ரேலின் டாப் தலைவர்கள் பங்கரில் பதுங்கி இருந்துள்ளனர். பங்கரில் இருந்தபடியே இவர்கள் தாக்குதலை கண்காணித்துள்ளனர்.

பொதுவாக இது போன்ற பெரிய தாக்குதல் சமயங்களில் தலைவர்கள் பங்கருக்குள் செல்வது வழக்கம். அப்படிதான் பெஞ்சமின் நெதன்யாகு பங்கருக்குள் சென்று இருந்தார். அதோடு ஈரான் உடனடியாக பதிலடி தாக்குதல் நடத்தலாம்.. வானத்தில் விமானங்களை அனுப்பி டாக் பைட் நடத்தி இருக்கலாம்.. விமானங்கள் இஸ்ரேல் எல்லைக்குள் வரவும் வாய்ப்புகள் இருக்கலாம் என்றும் எதிர்பார்கப்பட்டது. இதற்கு அடுத்து பாதுகாப்பு கருதி.. பெஞ்சமின் நெதன்யாகு பங்கருக்குள் சென்றதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+