ஹிஸ்புல்லா தலைவர் சொன்ன "அந்த" ஒரு வார்த்தை.. உடனே குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்.. பதறும் உலக நாடுகள்
டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே மோதல் பல மாதங்களாகத் தொடர்ந்த நிலையில், அது இப்போது பிராந்திய போராக வெடித்துள்ளது. லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் அங்கு பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகள் வெடித்த நிலையில், இப்போது நேரடியாகவே ராக்கெட் ரான்சர்கள் மூலம் தாக்குதல் நடந்துள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியில் இப்போது மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஏற்கனவே இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே அங்குப் போர் நிலவும் நிலையில், இப்போது இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

தாக்குதல்: முதலில் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்து பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகள் வெடிப்பு ஏற்பட்டது. இதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் இப்போது திடீர் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை இப்போது தாக்குதல் நடத்தியுள்ளது.
சுமார் 100க்கும் மேற்பட்ட ராக்கெட் லான்சர்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இஸ்ரேல் மீது தாக்குதலுக்குத் தயாராக இருந்த சுமார் 1,000க்கும் மேற்பட்ட ராக்கெட் பேரல்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இது மட்டுமின்றி ஹிஸ்புல்லா அமைப்பிற்குச் சொந்தமான பல கட்டிடங்களும் ஆயுதக் கிடங்குகளும் தாக்கி அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா: இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா சொன்ன மறுநாளே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. அதாவது பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகள் மூலம் ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்துக் கடந்த வாரம் தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் வகையில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என ஹிஸ்புல்லா கூறிய நிலையில், ஒரே நாளில் இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோசவ் கல்லன்ட் கூறுகையில், "போர் இப்போது புதிய கட்டத்திற்குள் நுழைகிறது. போர் முன்பு காசா மீது நடந்தது. இப்போது அது லெபனானின் வடக்கு எல்லை வரை விரிவடைகிறது என்பதையே இது காட்டுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
எப்படி தொடங்கியது: இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக். 7ம் ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் நாட்டின் சுமார் 1200 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் ஆவர். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில் ஹமாஸ் மீது இஸ்ரேல் போரை ஆரம்பித்தது. காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தத் தாக்குதலுக்கு ஈரான் ஆதரவுடன் லெபனான் நாட்டில் செயல்படும் ஹிஸ்புல்லா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியது. இஸ்ரேலை எதிர்க்கும் வகையில் முதலில் எல்லையில் துப்பாக்கிச் சூடு, சின்ன சின்ன தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தச் சூழலில் தான் இப்போது இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையேயும் போர் முழு வீச்சில் வெடித்துள்ளது.
பதறும் உலக நாடுகள்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடங்கிய போர் என்பது இப்போது பிராந்திய போராக மாறியுள்ளதையே இது காட்டுகிறது. இதில் ஈரான் உள்ளிட்ட பிற நாடுகளும் உள்ளே வந்தால் அது மிக மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications