Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிறிஸ்தவர்களையும் விடாத இஸ்ரேல்.. காசாவின் ஒரேயொரு சர்ச்சுக்கு குண்டுவீசி அழிப்பு.. கொதித்த டிரம்ப்

Subscribe to Oneindia Tamil

காசா: காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. இதுவரை ஹமாஸ் அமைப்பின் கட்டடங்களை தாக்கி வந்த நிலையில் காசாவில் இருந்த ஒரேயொரு கத்தோலிக்க சர்ச் மீது குண்டு வீசி தாக்கியது. இதில் 3 பேர் இறந்த நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கோபமடைந்த டொனால்ட் டிரம்ப், பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு போன் போட்டு கடுமையாக திட்டி சம்பவம் நடந்துள்ளது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடும் மோதல் இருந்தது. இந்த மோதல் போராக மாறி உள்ளது. 2023 அக்டோபர் மாதம் முதல் காசா மீது இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இதில் காசா நகரமே உருக்குலைந்துவிட்டது. இஸ்ரேலின் தாக்குதலில் காசா நகரம் அழிவின் விளிம்பில் உள்ளது.

israel gaza church

மொத்தம் 50 ஆயிரத்துக்கும் அதிகமான காசா மக்கள் பலியாகி உள்ளனர். அதுமட்டுமின்றி உயிருக்கு பயந்து ஏராளமான மக்கள் காசாவை விட்டு வெளியேறி பிற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதனால் போர் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் தான் தற்போது இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் இருந்த ஒரெயொரு சர்ச்சும் கடும் சேதமடைந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் காசாவில், இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சில் 33 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலில் தான் காசாவில் இருக்கும் கத்தோலிக்க தேவாலயம் தரைமட்டமாகி உள்ளது. இந்த தாக்குதலில் சர்ச்சில் இருந்த 3 பேர் கொல்லப்பட்டனர். 9 பேர் பலத்த காயம் அடைந்தனர். ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இஸ்ரேல் யூத நாடாக இருக்கும் நிலையில் இந்த சர்ச் மீதான தாக்குதல் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஏனென்றால் இந்த சர்ச் மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது. இந்த சர்ச்சின் பெயர் ஹோலி பேமிலி சர்ச். இதனை இஸ்ரேலின் ஜெருசலேம் கத்தோலிக்க சபை தான் வழிநடத்தி வந்தார். காசாவை எடுத்து கொண்டால் இஸ்லாமியர்கள் தான் அதிகம் உள்ளனர். கிறிஸ்தவர்கள் குறைந்த அளவில் வசிக்கின்றனர். இந்த மக்களுக்காக அமைக்கப்பட்டது தான் இந்த கத்தோலிக்க தேவாலயம்.

இதனால் உலக அளவில் இந்த சர்ச் மிகவும் தனித்துவமாக விளங்கியது. காசாவில் வசிக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இங்கு தான் பிரார்த்தனைக்கு வருவார்கள். போரில் வீடுகளை இழந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இந்த சர்ச்சில் தஞ்சம் அடைந்த நிலையில் இஸ்ரேல் குண்டு வீசி சர்ச்சை தகர்த்துள்ளது.

இந்த தாக்குதலை ஜெருசலேம் கத்தோலிக்க சபை கடுமையாக கண்டித்துள்ளது. இதுதொடர்பாக அந்த சபை சார்பில் ‛சர்ச் மீது இஸ்ரேல் ராணுவம் நேரடியாக குண்டு வீசியது. அதன் பீரங்கி குண்டு விழுந்து சர்ச் மேற்கூரை நொறுங்கியது. இது கண்டிக்கத்தக்கது' என்றது.

இந்த சம்பவத்தை போப் லியோவும் கண்டித்தார். உடனடியாக காசாவில் போரை நிறுத்த வேண்டும் என்று இஸ்ரேலை வலியுறுத்தினார். இன்னொரு பக்கம் இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் கோபத்தின் உச்சிக்கே போனார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட டிரம்ப், சர்ச் மீது எப்படி குண்டு வீசலாம்? என்று காட்டமாக கேள்வி எழுப்பினார். அவரிடம் நெதன்யாகு வருத்தம் தெரிவித்தார்.

மேலும் இந்த சர்ச் மீதான தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், ‛இஸ்ரேல் வேண்டும் என்றே சர்ச் மீது தாக்குதல் நடத்தவில்லை. தவறுதலாக பீரங்கி வெடித்ததில் சர்ச் மீது குண்டு விழுந்து விட்டது. இந்த தவறுக்கு வருந்துகிறோம்'.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+