ஹிஸ்புல்லா தான் டார்கெட்..இரக்கம் காட்டாத இஸ்ரேல்! தரைமட்டமான கட்டிடங்கள்.. கலங்க வைக்கும் உயிர் பலி
பெய்ரூட் : காசாவுக்கு ஆதரவாக களமிறங்கிய ஹிஸ்புல்லாவை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் மூர்க்கமான தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நடத்திய விமானப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 4000ஐ கடந்துள்ள நிலையில் 100 குழந்தைகள் பலியாகி இருப்பதாகவும், 3,000 மேற்பட்ட கட்டிடங்கள் தரைமட்டமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வரும், நிலையில் கடந்த ஆண்டு முதல் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அங்கு நிலைமை தீவிரமான நிலையில், பிற நாடுகளுக்கும் போர் பரவியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி முதல் இஸ்ரேலின் நடவடிக்கை பதில் கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் இஸ்ரேலுக்குள்ளேயே நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டு மக்களையும் வெளிநாட்டு மக்களையும் கொன்று வருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா பகுதியில் போர் விமானங்கள் மூலமாகவும் ஏவுகணைகள் மூலமாகவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் தொடங்கி பல மாதங்கள் ஆகியிருக்கும் நிலையில் அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் கொல்லப்படுவதாக ஹமாஸ் குற்றம் சாட்டி வருகிறது. மேலும் லட்சக்கணக்கானோர் அகதிகளாக பிற பகுதிகளுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போர் காரணமாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் மீது இஸ்ரேல் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக புகார் எழுந்திருக்கிறது.
மேலும் ஐநா ஊழியர்கள் உள்ளிட்ட 18 பேர் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், ஹமாஸ் அமைப்பினர் அங்கு இருந்ததால் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் விளக்கம் அளித்தது. இந்த நிலையில் இஸ்ரேலுக்கு எதிராக லெபனான் நாட்டில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதை அடுத்து அந்த அமைப்பினரை குறி வைத்து நடத்தப்பட்ட பேஜர் தாக்குதலில் பலர் உயிரிழந்த நிலையில் 2500 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இதை அடுத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் ராணுவத்தினர் இடையே போர் தீவிரமடைந்து இருக்கிறது. இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். தொடர்ந்து ஈரானும் ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் களத்தில் இறங்கி இருக்கிறது. இந்த நிலையில் லெபனானின் பெய்ரூட் மற்றும் புறநகர் பகுதிகளை குறி வைத்து இஸ்ரேல் விமானப்படை ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஹெஸ்புல்லா குழுவினரின் முகாம்கள் அளிக்கப்பட்டு இருக்கின்றன. 400-க்கும் மேற்பட்ட அந்த அமைப்பின் போராளிகள் கொல்லப்பட்டு இருக்கும், நிலையில் இதுவரை லெபனான் நாட்டில் நான்காயிரம் பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் பலியானவர்களின் நூற்றுக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் எனவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெண்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தரைமட்டமான நிலையில் பலர், அண்டை நாடான சிரியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதே நேரத்தில் லெபனான் தலைநகர் பெய்ரூட் - டாமாஸ்கஸ் இடையிலான பல இடங்கள், பாலங்கள் இஸ்ரேல் ராணுவத்தால் குறிவைத்து அழிக்கப்பட்டுள்ளன. இதனால் அண்டை நாடுகளுக்குள் தஞ்சம் புக கூட முடியாமல் லெபனான் மக்கள் தவித்து வருகின்றனர். தற்போது லெபனான் எல்லைக்குள் புகுந்துள்ள இஸ்ரேல் வீரர்கள் பதுங்கு குழிகள், சுரங்கங்களை கண்டுபிடித்து அழித்து வருகின்றனர். மேலும் தீவிரவாதிகளின் வெடிகுண்டுகள் ,ஏவுகணைகள் பதித்து வைக்கப்பட்டிருக்கும் சுரங்கப்பாதைகள் கண்டறியப்பட்டதாகவும், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
-
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
Dubai Real Estate: துபாயில் வீடு வாங்க போறீங்களா? கவனிக்க வேண்டியவை என்னென்ன? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக்












Click it and Unblock the Notifications