உங்கள் பாதுகாப்பில்தான் குறை.. புல்வாமா தாக்குதலுக்கு திமிராக பதில் சொன்ன பாக்.. என்ன ஒரு ஆணவம்!
புல்வாமா தாக்குதலில் இந்தியா தேவையில்லாமல் பழி போடுகிறது, இந்த தாக்குதலுக்கு இந்தியாவின் பாதுகாப்பு குறைபாடுதான் காரணம் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்து இருக்கிறது.
Recommended Video

இஸ்லாமாபாத்: புல்வாமா தாக்குதலில் இந்தியா தேவையில்லாமல் பழி போடுகிறது, இந்த தாக்குதலுக்கு இந்தியாவின் பாதுகாப்பு குறைபாடுதான் காரணம் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்து இருக்கிறது. இந்தியாதான் இதற்கு முழுக்க முழுக்க காரணம் என்று இந்தியா மீது பாகிஸ்தான் பழியை சுமத்தி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த வியாழக்கிழமை நடந்த தீவிரவாத தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் படை வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் அரசு தரப்பில் இருந்து முக்கிய நபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் அரசு சார்பாக பாகிஸ்தானின் வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் முகமது பைசல் பேட்டி அளித்துள்ளார்.

யார் பொறுப்பு
முகமது பைசல் தனது பேட்டியில், இந்த தாக்குதலுக்கு முழுக்க முழுக்க இந்தியாதான் பொறுப்பு. எப்போதும் போல் இந்தியா பாகிஸ்தான் மீது பழியை போட பார்க்கிறது. அவர்களின் பாதுகாப்பு குறைபாட்டிற்கு, உளவுத்துறை தோல்விக்கும் அண்டை நாடுகளை குற்றஞ்சாட்டுவதே அவர்களின் வாடிக்கையாகிவிட்டது. இதை இந்தியா திட்டமிட்டு செய்து வருகிறது.

இதே கதைதான்
ஏற்கனவே நடந்த தாக்குதல்களின் போதும் பாகிஸ்தான் மீதுதான் இந்தியா குற்றஞ்சாட்டியது. அதையே தற்போது செய்கிறது. தாக்குதல் நடந்த அடுத்த நொடியே இந்தியா நேரடியாக பாகிஸ்தான் மீதுதான் குற்றஞ்சாட்டுகிறது. இதிலேயே அவர்கள் எவ்வளவு பொய் சொல்கிறார்கள் என்று தெரிகிறது.

என்ன வீடியோ
இந்தியாதான் அவர்களின் பாதுகாப்பு குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும். அதைவிட்டுவிட்டு, தீவிரவாதி அதில் அஹமதுவின் வீடியோவை வெளியிட்டு புளங்காகிதம் அடைய கூடாது. இதே இந்தியாதான் இந்திய உளவாளி குல்பூஷண் யாதவின் வீடியோவை ஜோடிக்கப்பட்டது என்று கூறியது நியாபகம் இருக்கட்டும், என்றுள்ளார்.

உலகத்திற்கு தெரியும்
அதேபோல் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்த கருத்தில், பாகிஸ்தான் மீது குற்றஞ்சாட்டுவது எளிதுதான். ஆனால் அதை நிரூபிப்பது மிகவும் கடினம். உலகம் இந்தியாவின் குற்றச்சாட்டுகளை அப்படியே நம்பிவிடாது. எங்களை எங்களுக்கு பாதுகாக்க தெரியும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications