"காதலிக்கு 900 கோடி!" சிறையில் கூட இருந்தவருக்கு 270 கோடி! ஆனா மனைவிக்கு நோ சொன்ன இத்தாலி Ex பிரதமர்
ரோம்: இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி என்பவர் தனது 33 வயது பாட்னருக்கு சுமார் இந்திய மதிப்பில் 900 கோடி ரூபாயை விட்டுச் சென்றுள்ளார்.
இத்தாலியில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெயரைப் பெற்றவர் சில்வியோ பெர்லுஸ்கோனி. அமெரிக்காவில் டிரம்புடன் இவரை ஒப்பிடலாம், இத்தாலியில் மிகப் பெரிய ஊடக சாம்ராஜ்ஜியத்தை நடத்திய இவர், தன்னை தானே முன்னிறுத்தி கொண்டார்.
அதை வைத்துத் தேர்தலில் போட்டியிட்டு வெல்லவும் செய்தார். பிரதமரான பிறகும் டிரம்பை போலவே தொடர்ச்சியாகப் பல சர்ச்சைகளில் சிக்கியவர். தனது நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் நடந்து கொண்டார்.

இத்தாலி: குறிப்பாக இவர் ஒரு காலத்தில் தன்னை இயேசுவோடு கூட ஒப்பிட்டுக் கொண்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இவருக்கு நுரையீரல் தொற்றால் ஏற்படும் மைலோமோனோசைடிக் லுகேமியா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னரே பொது நிகழ்ச்சிகளில் இருந்து சற்று தள்ளி இருக்க ஆரம்பித்தார். தனது இமேஜ் மீது அதீத அக்கறை கொண்டிருந்த அவர் லுகேமியா பாதிப்பு தீவிரமான பிறகு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்தார்.
மேலும், சில மாதங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், மருத்துவமனையிலும் அனுமதியானார். அதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய இவர், ஜூன் மாதம் உயிரிழந்தார். உயிரிழக்கும் போது அவருக்கு 86 வயது ஆகும். 2020இல் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அதன் பின்னரே அவரது உடல்நிலை மோசமடைய தொடங்கியது.
காதலிக்கு 900 கோடி: இதற்கிடையே கடந்த மாதம் உயிரிழந்த சில்வியோ பெர்லுஸ்கோனிவின் உயில் அவரது வாரிசுகளுக்கு முன்பு சில நாட்களுக்கு முன்பு படித்துக் காட்டப்பட்டது. இதற்கிடையே அது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதன்படி, அவரது பாட்னரான 33 வயது காதலி மார்டா பாசினாவுக்கு 100 மில்லியன் யூரோ, அதாவது இந்திய மதிப்பில் 906 கோடி ரூபாயை விட்டுச் செல்வதாகத் தனது உயிலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவருக்கு பல்வேறு நிறுவனங்கள் இருக்கும் நிலையில், அனைத்து கன்டிரோலையும் இரண்டு மூத்த பிள்ளைகளுக்கு விட்டுச் சென்றுள்ளார். பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். கடைசியாக உயிரிழக்க சில காலத்திற்கு முன்பு காதலி மார்டா பாசினாவை டேட் செய்து வந்தார்.
இவருக்கு முதல் மனைவி மூலம் இரண்டு குழந்தைகளும் இரண்டாவது மனைவி மூலம் மூன்று குழந்தைகளும் உள்ளன. அவர் தனது உயிலில் கடைசியாக டேட் செய்த பாட்னருக்கு மட்டுமே 100 மில்லியன் யூரோவை எழுதி வைத்துள்ளார்.

சிறையில் இருந்தவருக்கு 271 கோடி: ஒட்டுமொத்தமாக அவருக்கு 6 பில்லியன் யூரோக்களுக்கு மேல் சொத்து இருக்கும் நிலையில், அவரது சகோதரர் பாவ்லோவுக்கும் 100 மில்லியன் யூரோ (ரூ. 906 கோடி) எழுதி வைத்துச் சென்றுள்ளார். அது மாஃபியாவுடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டில் தன்னுடன் கைதாகி சிறையில் இருந்த மார்செல்லோ டெல்'உட்ரி என்பவருக்கு 30 மில்லியன் யூரோ, அதாவது 271 கோடி ரூபாயைத் தூக்கிக் கொடுத்துள்ளார். மார்செல்லோ டெல்'உட்ரி எம்பியாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது முதல் மனைவி கார்லா எல்விரா டால் ஓக்லியோவுடன் பிறந்த குழந்தைகளான மெரினா மற்றும் பியர் சில்வியோ ஆகியோருக்கு நிறுவனத்தின் 53% பங்குகள் செல்கிறது. பெரும்பாலான பங்குகள் அவர்களிடம் செல்லும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த கன்டிரோலும் அவர்கள் வசம் செல்கிறது. மேலும், பிஸ்னஸ் இல்லாத அவரது செல்வத்தில் 60% இவர்கள் வசமே செல்கிறது. இரண்டாவது மனைவி மூலம் பிறந்த மூன்று குழந்தைகள் மீதமுள்ள 40% செல்வத்தைப் பிரித்துக் கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications