ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.0 ஆக பதிவாகி இருக்கிறது. இந்த நிலநடுக்கம் 34 கிமீ வரை உணரப்பட்டது என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதனால் சில கட்டிடங்கள் இடிந்துள்ளது. ஏற்கனவே அங்கு மோசமாக மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. உயிரிழப்பும் இதனால் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் மீட்பு பணியினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கைவிடுத்து இருக்கிறது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்று இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications