விமானி எரித்துக் கொலை: சிரியா ஜ.எஸ். முகாம்கள் மீது ஜோர்டான் போர் விமானங்கள் தாக்குதல்
அம்மான்: விமானியின் கொலைக்கு பழிவாங்க ஜோர்டான் ராணுவம் சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் குறித்த வீடியோ ஜோர்டான் நாட்டு தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டுள்ளது.
ஜோர்டானைச் சேர்ந்த விமானி முவாத் அல் கசஸ்பா(27)வை ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் கடத்திச் சென்று உயிருடன் எரித்துக் கொலை செய்தனர். அவரை எரித்துக் கொன்ற வீடியோவை வெளியிட்டு தீவிரவாதிகள் பரபரப்பை ஏற்படுத்தினர். விமானியை கொன்றதால் ஜோர்டான் அரசு கோபம் அடைந்து தீவிரவாதிகளை அழிக்க சபதம் எடுத்தது.

இதையடுத்து ஜோர்டான் நாட்டு போர் விமானங்கள் வியாழக்கிழமை சிரியாவில் உள்ள அல் ரக்கா நகரில் இருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் பயிற்சி மையங்கள், ஆயுதக் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல் சம்பவம் பற்றிய வீடியோ ஜோர்டான் நாட்டு தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டது.
இது குறித்து ராணுவ அதிகாரி தொலைக்காட்சியில் கூறுகையில்,
இது வெறும் துவக்கம் தான். ஜோர்டான்காரர்கள் யார் என்பதை நீங்கள் விரைவில் தெரிந்து கொள்வீர்கள் என்றார்.
ஜோர்டான் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் நசீர் ஜுதா கூறுகையில்,
விமானியின் கொலைக்கு பழிவாங்க இது வெறும் துவக்கம் தான். தீவிரவாதத்திற்கு எதிரான போர் இனி தான் துவங்கும். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை அழிக்காமல் விட மாட்டோம். அவர்கள் எங்கிருந்தாலும் தேடிக் கண்டிபிடித்து தாக்குவோம். இது துவக்கமும் இல்லை. அதே சமயம் முடிவும் இல்லை என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications