13 வயதிலேயே “கட்டாயத் கல்யாணம்” – நேபாளில் கொடிகட்டிப் பறக்கும் குழந்தைத் திருமணங்கள்
காத்மாண்டு: நேபாளத்தில் கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்படும் சிறுமிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
13 வயதிலேயே பலருக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.
இப்படிப்பட்ட கட்டாயத் திருமணங்களில் சிக்கி பல சிறுமிகள் சிதைக்கப்பட்டு வருகிறார்கள். சீரழிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஓட்டம் பிடித்த சின்னஞ் சிறுமி:
3 வருடங்களுக்கு முன்பு 13 வயதான சுஸ்மிதா கமி என்ற சிறுமி, தனது கணவர் வீட்டை விட்டு இருளில் வெளியேறி வந்தார்.
சிதையும் வாழ்க்கை:
அங்கிருந்து ஓட்டம் பிடித்த அவர் தனது பெற்றோர் வீட்டுக்குப் போய்த்தான் நின்றார். சுஸ்மிதா மட்டுமல்ல அல்ல இதுபோல பல சிறுமிகள் நேபாளத்தில் கட்டாயத் திருமணங்களால் சிதைந்து போய் நிற்கிறார்கள்.
விமோச்சனம் இல்லையா:
தலித் சமுதாயத்தில்தான் இந்த கொடுமை காலம் காலமாக நடந்து வருகிறது. இதற்கு முடிவே இல்லாமல், விமோச்சனமே இல்லாமல் நீண்டு கொண்டிருக்கிறது.
ஆதரித்த பெற்றோர்:
தப்பி வந்த சுஸ்மிதாவை அவரது பெற்றோர் ஆதரவுக் கரம் கொடுத்து ஏந்திக் கொண்டனர். அவரைத் திருப்பி அனுப்புமாறு மாப்பிள்ளை வீட்டார் கோரியும் கூட திரும்ப அனுப்பவில்லை.
படிக்கவே விரும்புகின்றேன்:
தற்போது 16 வயதாகும் சுஸ்மிதா இதுகுறித்துக் கூறுகையில், "எனக்குத் திருமணமே வேண்டாம் என்று நான் கூறி வந்தேன். நான் திரும்பிப் போகவும் மாட்டேன். நான் தொடர்ந்து படிக்க வேண்டும். இதற்காகவே நான் வீட்டை விட்டு ஓடி வந்தேன் என்கிறார் சுஸ்மிதா.
தொடரும் குழந்தை திருமணங்கள்:
1963 ஆம் ஆண்டு சிறார் திருமணத்திற்குத் தடை விதித்தது நேபாள அரசு. ஆனாலும் அங்கு சிறார் திருமணங்கள் தொடர் கதையாகவே உள்ளன. 18 வயது முடிவதற்குள்ளாகவே பத்தில் நான்கு சிறுமிகளுக்குத் திருமணம் நடப்பதாக யுனிசெப் கூறுகிறது.
அதிகமான எண்ணிக்கை:
தலித் மக்களிடையேதான் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதை காலம் காலமாக செய்து வருவதாகவும் அவர்கள் சொல்கிறார்கள். ஆள் அரவமே இல்லாத வனப்பகுதியில் குடியிருக்கும் தலித்களிடையே இதுபோன்ற சிறார் திருமணங்கள் மிகவும் சகஜசமாக நடக்கின்றன.
கடத்திப் போய் கல்யாணம்:
2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்வேயின்படி 4 தலித் திருமணங்களில் 3 சிறார் திருமணங்களாக உள்ளதாக இருந்தது அதிர்ச்சி அளித்தது. பல சம்பவங்களில் சிறுமிகளை மணமகன் வீட்டார் கடத்திக் கொண்டு போய் திருமணம் செய்கின்றனர். இப்படிப்பட்ட திருமணம்தான் சுஸ்மிதாவின் திருமணமும்.
கொடுமையான விஷயம்:
விறகு பொறுக்கப் போனபோது சுஸ்மிதாவை கடத்தி்ச் சென்றனர். அதன் பின்னர் நான்கு நாட்கள் கழித்து கட்டாயமாக திருமணம் செய்து வைத்தனர். இதே கொடுமையை சுஸ்மிதாவின் தாயார் ஜடேன் கமியும், அவரது டீன் ஏஜ் வயதில் சந்தித்தவர் என்பதுதான் கொடுமையானது.
மானங்கெட்ட கலாச்சாரம்:
இதுகுறித்து ஜடேன் கமி கூறுகையில் இது எங்களது கலாச்சாரமாக உள்ளது. பிற சமுதாயத்தினரை எங்களது பெண்கள் மணந்து விடுவார்களோ என்ற அச்சத்தில்தான் வயதுக்கு வந்ததுமே இப்படி திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள் என்றார் ஜடேன் கமி.
பிஞ்சுகளை நஞ்சில் தள்ளும் மனிதர்கள்:
திபெத்துக்கு அருகில் உள்ள ஹும்லா மாவட்டத்தில் உள்ள சிமிகோட் ஒரு மிகவும் பழையான கிராமம். இங்கு தலித்கள் தனியாக வசிக்கின்றனர். உயர்ஜாதி என்று கூறப்படும் இந்துக்களும், பெளத்த மதத்தினரும் தனியாக வசிக்கின்றனர். இங்கு தலித் சமுதாயத்தினரிடையே பிஞ்சு வயதிலேயே திருமணம் செய்து வைப்பது சாதாரணமாக உள்ளது.
கீழ் சாதி முத்திரை:
இதுகுறித்து ஹும்லா மாவட்ட துணைத் தலைவர் பாம் பகதூர் கூறுகையில், கீழ் சாதி என்ற முத்திரை காரணமாக தலித்கள் சமுதாயத்தில் உயர முடியாத நிலை உள்ளது. அவர்கள் மற்ற சமூகத்தினருடன் கலந்து பழக அனுமதி கிடையாது.
பழமையான வழக்கங்கள்:
இதனால்தான் அவர்கள் தனித்து உள்ளனர். தங்களது பழமையான பழக்க வழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடிக்கின்றனர். இவர்களிடேய மாற்றம் என்பது மிக மிக மெதுவாக்ததான் நடக்கிறது என்றார்.
வறுமைதான் காரணம்:
வறுமை, பணப் பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களால் சிறு வயதிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டு திருமணம் செய்து வைப்பது, வேலைக்கு அனுப்புவது என்று சிறுமிகள் ஈடுபடுத்தப்படுகிறார்களாம்.
மற்றொரு பெண்:
இந்த ஊரைச் சேர்ந்த டனா சுனார் என்பவர் (தற்போது 18 வயதாகிறது), 14 வயதாக இருந்தபோது 18 வயது விவசாயிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்குப் பின்னர் கதறி அழுதபடியே இருந்தாராம் டனா. படிக்கப் போகக் கூடாது என்று அவரது கணவர் வீட்டார் உத்தரவிட்டுள்ளனர்.
புகுந்த வீட்டின் கொடுமை:
வீட்டு வேலைகளையும், விவசாய வேலைகளையும் பார்க்க கட்டாயப்படுத்தியுள்ளனர். இதனால் படிப்பை மறக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். அவருக்கு இரட்டைக் குழந்தையும் பிறந்தது.
ஒரே ஒரு வேளை சாப்பாடு:
இத்தனைக்கும் வீட்டில் வறுமை தலைவிரித்தாடுகிறது. ஒரு நாளைக்கு ஒரு நேர சாப்பாடுதான். எப்படி நான் எனது இரு குழந்தைகளையும் கரை சேர்க்கப் போகிறேன் என்று தெரியவில்லை என்று கூறுகிறார் டனா.
சட்டம் சரியாக இல்லை:
சிறார் திருமணங்களைத் தடுக்க நேபாளத்தில் சட்டம் சரியாக இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதுதொடர்பான அரசின் பிரசாரங்களும் பலன் தரவில்லை. இப்படிப்பட்ட சிறார் திருமணங்களால் இளம் வயதில் பிரசவத்தின்போது பல சிறுமிகள் இறக்கவும் செய்கிறார்களாம்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications