ரஷ்ய மனநல மருத்துவமனையில் பயங்கர தீ: 23 நோயாளிகள் உடல்கருகி பலி
மாஸ்கோ: ரஷ்யாவில் உள்ள மனநல மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 நோயாளிகள் உடல் கருகி பலியாகினர்.
ரஷ்யாவின் தவோரோநெல் பகுதியில் உள்ள அல்பெரோவ்கா கிராமத்தில் மனநல மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வந்தது. அந்த மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டபோது மருத்துவமனையில் 70 நோயாளிகள் மற்றும் நான்கு செவிலியர்கள் இருந்தனர்.

இந்த விபத்தில் படுத்தபடுக்கையாக இருந்த 23 நோயாளிகள் உடல் கருகி பலியாகினர். அவர்கள் அனைவரும் முதியவர்கள். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த உடன் 80 வாகனங்களில் வந்த 440 தீயணைப்பு வீரர்கள் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் வீடுகளில் ஏற்படும் தீ விபத்திலும் பலர் ஆண்டுதோறும் பலியாகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரஷ்யாவின் வடமேற்கு பகுதியில் உள்ள மனநல மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 37 பேர் பலியாகினர். முன்னதாக அதே ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தீ விபத்தில் 38 பேர் பலியாகினர்.
2009ம் ஆண்டு பெர்ம் நகரில் உள்ள நைட்கிளப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 156 பேர் உடல் கருகி பலியாகினர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications