தரையிலிருந்து விண்ணில் செலுத்தப்படும் ஏவுகணையால் வீழ்த்தப்பட்டது மலேசிய விமானம்- அமெரிக்கா
ஷிபோல்: ரஷ்யா - உக்ரைன் எல்லைப் பகுதியில் வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்க பயன்படுத்தப்படும் ஏவுகணையால் தாக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில், அந்த விமானத்தில் மொத்தம் 298 பேர் இருந்துள்ளனர். இவர்களில் 154 பேர் நெதர்லாந்து நாட்டவர்கள் ஆவர்.
உக்ரைனின் கிழக்குப் பகுதியில், ரஷ்ய எல்லைக்கு அருகே இந்த விபத்து நடந்துள்ளது. நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாமின் ஷிபோல் விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் கிளம்பிய விமானம் இது.

விபத்தில் உயிரிழந்தவர்களில் 27 ஆஸ்திரேலியர்களும் அடங்குவர் என்று மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது போக 23 பேர் மலேசியர்கள், 11 பேர் இந்தோனேசியர்கள், 6 பேர் இங்கிலாந்து நாட்டவர், நால்வர் ஜெர்மனியர்கள், 4 பேர் பெல்ஜியம் நாடடவர், 3 பேர் பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவர்கள். ஒருவர் கனடியர்.
இதற்கிடையே, விமானம் தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கப் பயன்படுத்தப்படும் ஏவுகணையால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து விரிவான விசாரணை தொடங்கியுள்ளது.,
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன், ரஷ்ய அதிபர் புடின் அவசர ஆலோசனையும் நடத்தியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications