ஈராக்கில் அமெரிக்காவின் ராணுவ ஆயுத கிடங்கை தாக்கிய ஈரான்! மொத்தமும் சேதம்!
தெஹ்ரான்: வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது ஈரான். சற்று முன்னர் ஈராக்கில், அமெரிக்காவின் ராணுவ ஆயுத கிடங்கை ஈரான் தாக்கி அழித்துள்ளது.
இஸ்ரேலுடன் சேர்ந்துக்கொண்டு, ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது அமெரிக்கா. இந்த தாக்குதலில் தங்கள் நாட்டின் உச்ச தலைவரான கமெனியை ஈரான் இழந்திருக்கிறது. இதனால் டென்ஷன் ஆகியுள்ள அந்த நாடு, கடுமையான பதிலடியை கொடுத்து வருகிறது.

குறிப்பாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் குறிவைக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல், யுஏஇ, சவுதி, கத்தார், குவைத், ஜோர்டன், ஈராக், பஹ்ரைன், ஓமன், சிரியா, சைப்ரஸ் என மொத்தம் 11 நாடுகள் மீது ஈரான் நேரடியாக தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் குறிப்பாக ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ ஆயுத கிடங்கின் மீதான தாக்குதல், அமெரிக்காவின் பேட்ரியாட், C-RAM போன்ற அதிநவீன வான் பாதுகாப்பு அம்சங்களின் செயல்பாடுகளை கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறது.
மத்திய கிழக்கில் அமெரிக்க படைகள் தாக்கப்படும்போது, அமெரிக்கா கொடுக்கும் பாதுகாப்பு உத்தரவாதம் குறித்து ஈராக் உள்ளிட்ட நாடுகள் கேள்வி எழுப்பலாம். ஈரான் தனது தாக்குதல்களை மேலும் தொடருமாயின், அமெரிக்க படைகள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்த நாடுகள் வலியுறுத்தவும் வாய்ப்பு இருக்கிறது.
அமெரிக்கா தரப்பில் ஏற்கெனவே ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பெண்டகன் உயிரிழப்பு எண்ணிக்கை 3 என்று சொன்னாலும், சுமார் 560 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஈரானிய செய்தி ஊடகங்கள் கூறுகின்றன. இப்படி இருக்கையில் தற்போது ஆயுத கிடங்கின் மீதும் தாக்குதல் என்பது, டிரம்ப் தலைமைக்கு எதிரான அதிருப்தியை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications