ச்சீ! ஆண்கள், சிறுவர்களையும் கூட விடவில்லை.. ரஷ்ய ராணுவத்தின் அட்டூழியம்! மிரளும் உக்ரைன் மக்கள்
கீவ்: உக்ரைன் போர் மீண்டும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய ராணுவத்தின் மீது புதிய பாலியல் ரீதியான புகார்கள் எழுந்துள்ளன.
உக்ரைன் மீது கடந்த பிப். மாதம் இறுதியில் ரஷ்யா முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. ரஷ்ய அதிபர் புதின் உத்தரவின்படி இந்த போர் இரண்டு மாதங்களை கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இடையில் அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட போது, சில காலம் அமைதியான சூழல் அங்கு நிலவியது. இருப்பினும், அந்த சூழல் சில நாட்கள் மட்டுமே நீட்டித்த நிலையில், மீண்டும் சண்டை தொடங்கி உள்ளது.

பாலியல் பலாத்காரம்
இதனிடையே உக்ரைன் நாட்டில் அப்பாவி மக்களைக் குறி வைத்து ரஷ்ய வீரர்கள் தாக்குவதாகத் தொடர்ச்சியாகத் தகவல் வெளியாகி வருகிறது. குறிப்பாக, ரஷ்யா ராணுவம் பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. உக்ரைன் நாட்டில் இருக்கும் பெண்களை ரஷ்யா ராணுவம் பாலியல் பலாத்காரம் செய்வதாகவும் அவர்களை அடித்துக் கொடுமைப்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்து இருந்தன. இதனிடையே ரஷ்ய ராணுவத்தின் பாலியல் அத்துமீறல் குறித்து மற்றொரு பகீர் தகவல் வெளியாகி உள்ளது.

ஆண்கள் சிறுவர்கள்
அதாவது உக்ரைன் நாட்டில் இருக்கும் பெண்களை மட்டுமின்றி ஆண்கள் மற்றும் சிறுவர்களையும் குறி வைத்து ரஷ்ய ராணுவம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தங்களிடம் ஏற்கனவே பல புகார்கள் வந்துள்ளதாகவும் அதை விசாரித்து வருவதாகவும் ஐ.நா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஐ.நா சிறப்புப் பிரதிநிதி பிரமிளா பட்டனும் இது போன்ற புகார்கள் எழுந்துள்ளது உண்மை தான் எனக் குறிப்பிட்டார்.

மிகவும் கடினம்
மேலும் அவர் கூறுகையில், "தாங்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து ஆண்கள் புகாரளிப்பது இன்னும் கடினமாக இருக்கும். சமூகத்தில் தங்கள் பெயர் கெட்டுப்போகும் உள்ளிட்ட பல காரணங்களால் பெண்கள், சிறுமிகள் இது குறித்த தானா முன்வந்து புகார் அளிப்பது இல்லை. பாலியல் வன்முறையில் பாதிக்கப்படும் ஆண்களும் சிறுவர்களும் இந்த விஷயத்தில் புகாரளிப்பது அதைவிட மிகவும் கடினமானதாக அவர்களுக்கு இருக்கும். இது குறித்து எங்களிடம் வரும் புகார்களை விசாரிக்கத் தொடங்கி உள்ளோம்.

அனைத்து வயதினர்
இவை அனைத்தும் பெரிய பனிப்பாறையின் சிறிய பகுதி தான். ரஷ்ய ராணுவத்தால் பாலியல் பாதிப்பிற்கு ஆளானவர்கள் தாங்களாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும். அப்போது தான் தவறு செய்தவர்களைப் பிடித்து அவர்களைத் தண்டிக்க முடியும்" என்றார். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ரஷ்யப் படைகளால் பாலியல் பலத்தகாரத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக உக்ரைனின் வழக்கறிஞர் ஜெனரல் இரினா வெனிடிக்டோவா தெரிவித்துள்ளார்.

போர் உத்தி
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய இரினா வெனிடிக்டோவா, "மக்களை அச்சுறுத்த பாலியல் பலாத்காரத்தை ஒரு திட்டமிட்ட உத்தியாகவே ரஷ்யா தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இந்த பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிப்பிழைத்த பலர் அஞ்சி நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். மேலும், பலர் இது குறித்து புகார் அளிக்கத் தயங்குகின்றனர். இதையும் தாண்டி கும்பல் பலாத்காரங்கள், துப்பாக்கி முனையில் பலாத்காரம் மற்றும் குழந்தைகள் மீதான பலாத்காரம் ஆகியவை குறித்த தகவல்களைத் திரட்டி வருகிறோம்" என்றார்.
Recommended Video

ரஷ்ய ராணுவத்தின் அத்துமீறல்
உக்ரைன் நாட்டில் புச்சா என்ற நகரில் வீட்டின் பேஸ்பெண்ட் ஒன்றில் சுமார் 25 பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களை ரஷ்ய ராணுவம் அடைத்து வைத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல புதைகுழிகளில் இருக்கும் பெண்கள் கொலை செய்யும் முன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனரா என்பதைக் கண்டறியப் பிரேதப் பரிசோதனையும் செய்யப்படுகிறது.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications