தாலிபான் - அல்குவைதா ரகசிய டீல்! பாகிஸ்தானுக்கு எதிராக முழுவீச்சில் போரை தொடங்கும் ஆப்கன்? பின்னணி
காபூல்: பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்கள், பாகிஸ்தானுடன் மோதும் டிடிபி அமைப்பினர், அல்குவைதா பயங்கரவாத அமைப்பு இடையே ரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் என்பது பாகிஸ்தான் தலையில் இடியை இறக்கி உள்ளதோடு, விரைவில் ஆப்கானிஸ்தான் முழுவீச்சில் பாகிஸ்தானுடன் போரை தொடங்குகிறதா? என்ற பெரிய கேள்வியை எழுப்பி உள்ளது.
பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் டிடிபி எனும் தெஹ்ரீக் இ தாலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்புக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இதில் ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்களின் ஆதரவு டிடிபி அமைப்புக்கு உள்ளது.

இந்த மோதலுக்கு மிக முக்கிய காரணம் பாகிஸ்தான் தான். பாகிஸ்தான் - டிடிபி அமைப்பினர் இடையே நீண்டகாலமாக எல்லையில் மோதல் போக்கு இருந்தது. இதையடுத்து கடந்த மாதம் பாகிஸ்தான் போர் விமானங்கள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து டிடிபி அமைப்பினரின் முகாம்களில் தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி மக்கள் உள்பட 47 பேர் கொல்லப்பட்டனர்.
இதில் சினம் கொண்ட டிடிபி அமைப்பினர் பாகிஸ்தான் மீது தாக்குதலை தொடங்கின. ஆப்கானிஸ்தான் வான்எல்லைக்குள் நுழைந்து அத்துமீறி தாக்கியதால் அந்த நாட்டை ஆளும் தாலிபான்களும், டிடிபிக்கு ஆதரவாக உள்ளன. எல்லையில் கடந்த 3 மாதங்களாக ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே பயங்கர மோதல் என்பது ஏற்பட்டுள்ளது. இதில் தாலிபான்கள், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் என்று 100க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மோதல் என்பது இருநாடுகள் இடையே போராக மாறுமோ? என்ற பதற்றம் இப்போது ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானில் நடக்கும் ஆட்சியை கவிழ்த்து டிடிபி அமைப்பினரின் தாலிபான்கள் ஆட்சியை நிறுவுவதில் உறுதியாக உள்ளனர். இதனால் நாளுக்கு நாள் இருநாடுகள் இடையே பதற்றம் என்பது அதிகரித்துள்ளது. இருநாடுகள் இடையேயான நிலைமை இப்படி இருக்க தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட டிடிபி அமைப்பினர் ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்கள் மற்றும் அல்குவைதா பயங்கரவாத அமைப்புடன் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக லண்டனை மையமாக கொண்டு செயல்படும் ஆப்கானிஸ்தான் இன்டர்நேஷனல் எனும் இணையதள செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி நிறுவனம் என்பது ஆப்கானிஸ்தான் நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து செய்தி வெளியிட்டு வருகிறது. அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு உள்நாட்டு போர் நடந்தது. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பிறகு இந்த உள்நாட்டு போர் தொடங்கியது. இந்த போரில் ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் ஹனியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து தான் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அரியணை ஏறினர்.
இந்த வேளையில் ஆப்கானிஸ்தானை இப்போது ஆளும் தாலிபான்கள், தெஹ்ரீக் இ தாலிபான்கள் மற்றும் அல்குவைதா அமைப்பு உள்பட பிற வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளபட்டது. இந்த ஒப்பந்தத்தின் பெயர் மிர் அலி ஒப்பந்தம் (Mir Ali Agreement).இந்த ஒப்பந்தம் என்பது உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவரும், தற்போதைய ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சராக இருப்பவருமான சிராஜுதீன் ஹக்கானி மற்றும் டிடிபி அமைப்பினர், அல்குவைதா பயங்கரவாதி அமைப்பின் கமாண்டர்கள் இடையே மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானபோது தற்போதைய ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானி தாலிபான்களின் உச்சபட்ச தலைவர் (Supreme Leader) முல்லா ஹிபாதுல்லா அகுந்த்சாதாவின் (Mullah Hibatullah Akhundzada) வலது கரமாக இருந்தவர் என்பதும், பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐஎஸ்ஐ பயங்கரவாதிகளுடன் நெருக்கமாக இருப்பவர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது. இதனால் ஐஎஸ்ஐ அமைப்பும் பாகிஸ்தானுக்கு எதிராக கிளம்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் ஐஎஸ்ஐ அமைப்பு தொடர்ந்து தாலிபான்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறது என்பதை மறந்து விடக்கூடாது.
அதோடு இந்த ஒப்பந்தத்தின்படி ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்துவிட்டால் பாகிஸ்தானையும் கைப்பற்ற வேண்டும். அங்கும் இஸ்லாமியர்களின் ஷரியா சட்டத்தின்படியான ஆட்சியை நிறுவ வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதுதான் இப்போது அதிக கவனம் பெற்றுள்ளது. மேலும் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் தற்போது ஆப்கானிஸ்தான் செயல்பட்டு வருகிறது. அதாவது கடந்த மாதம் டிடிபி அமைப்பினரின் முகாம்களை குறிவைத்து பாகிஸ்தானின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு பாகிஸ்தான் முதல் முறையாக டிடிபி அமைப்பினரை குறிவைத்து தாக்கியது இதுதான்.
இதனால் கொதித்த ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சரும், முல்லா ஓமரின் (தாலிபான் அமைப்பை நிறுவியவர் என்பதோடு 1996 முதல்2001ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானின் சூப்ரீம் லீடராக இருந்தவர்) மகனுமான முல்லா யாகூப் உடனடியாக டிடிபி மற்றும் டிடிபி அமைப்பின் ஒருபகுதியாக செயல்படும் எச்ஜிபி எனும் ஹபீஸ் குல் பகதூர் குழு தலைவர்களை வரழைத்து பேசினார். அப்போது ‛மிர் அலி ஒப்பந்தம்' பற்றி பேசப்பட்டது. அதன்பிறகே பாகிஸ்தான் போர் விமான தாக்குதலை தாலிபான் அரசு கண்டித்ததோடு, ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரை அழைத்து சம்மன் வழங்கியது.
ஏற்கனவே டிடிபி அமைப்பினர் தலைவர் நூர் வாலி மசூத், ‛‛பாகிஸ்தான் அரசை வீழ்த்துவோம். அங்கு இப்போது நடப்பது இஸ்லாமியர்களுக்கான ஆட்சியல்ல. அங்கு Non Islamic ஆட்சி நடக்கிறது. இதனால் பாகிஸ்தானை வீழ்த்தி இஸ்லாமிய Islamic அரசை நிறுவுவோம். ஷரியா சட்டங்கள் பாகிஸ்தானில் அமல்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தான் ‛மிர் அலி ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தானுடன் முழுவீச்சில் போரில் ஈடுபட ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்கள், டிடிபி எனும் தெஹ்ரீக் இ தாலிபான்கள் மற்றும் அல்குவைதா பயங்கரவாத அமைப்பினர் தயாராகி வருகின்றனரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
மேலும் பலருக்கும் ஒரு சந்தேகம் வரலாம். அதாவது அல்குவைதா பயங்கரவாத அமைப்பினர் பாகிஸ்தானில் செயல்பட்டு வருகின்றனரே? அப்படி என்றால் அவர்கள் எப்படி தாலிபான்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானை சீண்டுவார்கள் என்று கேள்வி எழலாம். இதில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது பாகிஸ்தானின் பெஷாவரில் 1988 ம் ஆண்டில் ஒசாமா பின்லேடன் உள்பட சிலர் நடத்திய மீட்டிங்கை தொடர்ந்து தான் உருவானது.
அதன்பிறகு சூடானை தலைமையிடமாக கொண்டு தான் 1992ம் ஆண்டு முதல் அல்குவைதா அமைப்பு செயல்பட தொடங்கியது. அதன்பிறகு 1996ல் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்தவுடன் அல்குவைதா தனது தலைமையிடத்தை ஆப்கானிஸ்தானக்கு மாற்றியது. அதேபோல் பல சந்தர்ப்பங்களில் அல்குவைதா மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒருபோதும் அல்குவைதா - தாலிபான்கள் இடையே சண்டை என்பது வந்தது இல்லை.
மாறாக ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக செயல்பட்ட அமெரிக்க படைகளை எதிர்த்து சண்டையிட்ட அமைப்புகளில் அல்குவைதா முக்கியமானது. அதன்பிறகு ஆப்கானிஸ்தானை அமெரிக்க படைகள் ஆக்கிரமித்த பிறகு தான் அல்குவைதா அமைப்பினர் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் சென்றார். இதனால் பாகிஸ்தானை விட அல்குவைதா அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்களுடன் நெருக்கம் அதிகம் என்பது நினைவில் வைக்கக்கூடியது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications