பிரெஞ்சு செயற்கைக்கோள் தகவல்படி புதிய இடத்தில் விமானத்தை தேடும் ஆஸ்திரேலியா
பெர்த்: தற்போது ஆஸ்திரேலிய கடல் பகுதியில் மாயமான மலேசிய விமானத்தைத் தேடி வரும் பகுதியில், சில பொருட்கள் மிதப்பதாக பிரெஞ்சு செயற்கைக் கோள் கொடுத்துள்ள தகவலை உன்னிப்பாக ஆய்ந்து வருவதாக ஆஸ்திரேலியா கூறியுள்ளது.
மார்ச் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய விமானம் ஒன்று காணாமல் போனது. ஆனால் இதுவரை அவ்விமானம் குறித்த எந்த ஒரு சின்னத் தகவல் கூட கிடைக்காமல் மர்மமாகவே இருக்கிறது. இந்த விமானத்தை தேடும் பணியில் சுமார் 26 நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. சில நாட்டு செயற்கைக்கோள்களும் விமானத்தை தேடும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பிரெஞ்சு செயற்கைக்கோள் அளித்த புதிய தகவல் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், தங்களுக்குக் கிடைக்கும் எந்த ஒரு தகவலையும் விடாமல் தொடர்ந்து ஆய்ந்து வருவதாகவும் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

பெர்த் நகருக்கு அருகே....
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாயமான விமானத்தின் பாகங்கள் போன்றவை கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து தெற்கு இந்தியப் பெருங்கடலில்தான் தற்போது தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அதாவது பெர்த் நகருக்கு தென் மேற்கே கிட்டத்தட்ட 2500 கிலோமீட்டர் பரப்பளவில் ஆஸ்திரேலியா தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.

மிதக்கும் பொருட்கள்....
தற்போது கிடைத்துள்ள புதிய தகவல் குறித்து ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் வாரன் டிரஸ் கூறுகையில், ‘விமானத்தின் சில பொருட்கள் மிதப்பதாக கூறப்படும் இடமானது, தற்போது விமானத்தைத் தேடி வரும் கப்பல்கள், விமானங்கள் உள்ள இடத்திலிருந்து 850 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .

புதிய இடத்தில் தேடல்....
எனவே இந்தப் புதிய தகவல் எங்களுக்கு ஆர்வத்தை அதிகரித்துள்ளது. தேடும் இடத்தை மாற்ற வேண்டுமா என்பது குறித்தும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். காரணம், இந்த இடத்தில் இதுவரை நாங்கள் யாருமே தேடவில்லை. இது புதிய இடமாகும். எனவே அதுகுறித்து சீரியஸாக சிந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

புதிய தகவல்....
ரேடார் எக்கோ மூலம் இந்தப் புதிய தகவலை தங்களது நாட்டு செயற்கைக் கோள் கண்டுபிடித்துள்ளதாக பிரான்ஸ் கூறியுள்ளது. இந்த தகவல் ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகளுக்குத் தரப்பட்டுள்ளது.

தேடுதல் வேட்டையில் பாதிப்பு....
இதற்கிடையே, கிரில்லியன் என்ற புயல் காரணமாக ஆஸ்திரேலிய கடல் பகுதியில் வானிலை மோசமடைந்து வருகிறது. தற்போது தேடுதல் நடந்து வரும் பகுதியிலிருந்து 1000 கிலோமீட்டர் வடக்கே இந்த புயலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் தேடுதல் வேட்டையில் பாதிப்பு ஏற்படும் அபாயமும் எழுந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications