எல்லாமே இதுக்குத்தான்.... ஜாக்சன் வழியில் குரங்குக்கு சொத்துக்களை எழுதி வைத்த ரேபரேலி தம்பதி!
ரேபரேலி: உத்திரப்பிரதேச மாநிலத்தில் குழந்தை இல்லாத தம்பதியொன்று, தனது சொத்துக்களை அவர்களது செல்லப்பிராணியான குரங்கு பெயரில் உயிலாக எழுதி வைத்துள்ளனர்.
மனுஷனாப் பொறந்ததுக்கு பணக்கார வீட்ல நாயாப் பொறந்துருக்கலாம் எனப் பலர் பேச்சுவாக்கில் சொல்வதைக் கேட்டிருக்கலாம். ஏனெனில் அந்த அளவுக்கு சில வீடுகளில் செல்லப்பிராணியான நாய்களுக்கு மனிதர்களை விட அதிகம் முக்கியத்துவம் தரப்படுவதுண்டு. சில வீடுகளில் நாய்க்குப் பதிலாக பறவைகள், பூனைகள், மீன்கள் ஆகியவற்றை வளர்ப்பர்.

சிலர் மட்டும் இவர்களில் இருந்து வேறுபட்டு வீடுகளில் செல்லப் பிராணியாக குரங்குகளை பேணி வளர்ப்பர். கிங் ஆஃப் பாப் என அழைக்கப் படும் மைக்கேல் ஜாக்சன் கூட அவ்வாறு, பபிள்ஸ் எனப்படும் குரங்கு ஒன்றை வளர்த்தாராம்.
தனது பிரியத்திற்குரிய 'பபிள்ஸ்' என்ற அந்த சிம்பன்சிக்கு மைக்கேல் ஜாக்சன் 20 லட்சம் அமெரிக்க டாலருக்கான சொத்துக்களை எழுதி வைத்திருக்கிறார். மைக்கேல் ஜாக்சனின் பெட்ரூமிற்குள் நுழைய உரிமை பெற்ற ஒரே ஜீவன் இந்த பபிள்ஸ் தான். உலகிலேயே பணக்காரக் குரங்கு என்ற பெருமை பபிள்ஸ்க்கு உண்டு.
இந்நிலையில், உத்திரப்பிரதேசத்திலும் ஒரு தம்பதி தனது சொத்துக்களை, தங்களது செல்லப்பிராணியான குரங்கு ஒன்றின் பெயரில் எழுதி வைத்துள்ளனர். உத்திரப்பிரதேசம், ரேபரேலியைச் சேர்ந்த இந்தத் தம்பதிக்கு மில்லியன் கணக்கில் சொத்துக்கள் உள்ளது. ஆனால், அவற்றிற்கு உரிமைக் கோர குழந்தைகள் எதுவும் இல்லை.
இதனால், குரங்கு ஒன்றை அவர்கள் செல்லப் பிராணியாக வளர்த்து வருகின்றனர். தங்களின் மறைவுக்குப் பின்னால் அந்தக் குரங்கு ஆதரவு இல்லாமல் அவதிப்படக் கூடாது என நினைத்த அத்தம்பதி, தங்களது சொத்துக்கள் முழுவதையும் அக்குரங்கின் பெயருக்கே எழுதி வைத்துள்ளனராம்.












Click it and Unblock the Notifications