Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அள்ளும் வியூவ்ஸ்.. கலக்கல் ஜோடி! கறுப்பின இளைஞரை மணந்த தமிழ்ப் பெண்! யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

போலந்து: கறுப்பின இளைஞரை காதல் திருமணம் செய்துகொண்ட தமிழ் பெண் ஒருவருக்கு சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய அளவில் ஆதரவு கிடைத்து வருகின்றது.

தமிழ்நாட்டில் பிறந்த பெண் ஒருவர் போலந்து நாட்டிற்குச் சென்று அங்குள்ள கறுப்பின இளைஞரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்தக் காதல் ஜோடி யூடியூப்பில் தங்களின் காதல் கதை குறித்து தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. ஆகவே, இவர்களுக்கு சமூக வலைத்தளத்தில் அதிக ஆதரவு கிடைத்து வருகிறது.

poland erode

இந்தப் பெண் எப்படி போலந்து போனார்? அவர் எப்படி கறுப்பின இளைஞரைக் காதலித்தார்? இவர் தமிழ்நாட்டில் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது பற்றிய சொந்த கதையை ஒரு வீடியோ மூலம் விளக்கி உள்ளனர். இது பற்றி இவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "சின்ன வயதிலேயே அப்பாவும் அம்மாவும் பிரிந்துவிட்டனர். அதனால் நாங்கள் என் அப்பாவுடன் தான் வாழ்ந்தோம். ஆகவே, சின்ன வயதிலிருந்தே அம்மாவின் அரவணைப்பு என்பது கிடைக்கவில்லை. என் உடன் பிறந்த ஒரு தங்கை இருக்கிறார். அவள் பெயர் அஸ்வினி.

அம்மா பிரிந்தது முதல் வீட்டில் இருக்க எனக்குப் பிடிக்கவில்லை. ஆகவே விடுதியில் தங்கித்தான் 8 ஆம் வகுப்பு முதல் படிக்க தொடங்கினேன். என் அப்பாவுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் ஒரு துணை தேவையானது. அவர் மறுமணம் செய்துகொண்டார். அதன்பின்னர் தனிமையால் தவித்து இருக்கிறேன். வாழவே விருப்பம் இல்லாமல் சில விபரீத முடிவுகளை எடுத்திருக்கிறேன். அதை எல்லாம் தாண்டிதான் எனக்கு ஒரு அருமையான கணவர் கிடைத்தார். அவர் உண்மையில் கடவுளின் பரிசுதான்.

கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் என்னை அன்பாகப் பார்த்துக் கொள்கிறார். கடந்த ஆண்டுதான் எங்கள் திருமணம் நடந்தது. ஒருமுறைகூட கோபம் வந்ததே கிடையாது. அவ்வளவு அமைதியானவர் ஆலிவர். எந்தக் கஷ்டம் வந்தாலும் கல்வியை மட்டும் கைவிட்டுவிடக் கூடாது. அதுதான் நம் வாழ்க்கையை உயர்த்தும். படிப்பதற்காகத்தான் போலந்துக்கு வந்தேன். நான் பிறந்துவளர்ந்தது முழுக்க ஈரோடுதான். என் பெயர் பிரியங்கா. சின்ன வயதிலிருந்து வீட்டில் செல்லப் பெயர் பிங்கி. அதனால் என் யூடியூப் சேனலுக்கு பிங்கி அண்டு ஆலிவர் என வைத்தேன்.

என் கணவர் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். அவர் வீட்டில் மொத்தம் 7 பேர். அவர் வீட்டில் என் கணவரும் அவரது தங்கையும் மட்டும்தான் ஆங்கிலம் பேசுவார்கள். மற்றவர்களுக்குத் தெரியாது. அதனால் அவரது உறவினர்களிடம் நேரடியாகப் பேச முடியவில்லை. வீட்டில் ஆலிவரை படிக்க வைக்கும் அளவுக்கு வசதி இல்லை. பலரிடம் நன்கொடை பெற்றுத்தான் ஆலிவர் படித்தார்.

poland erode

அவருக்கு ஃபுட்பால் விளையாடப் பிடிக்கும். கல்லூரியில் அவர் அணியில்கூட இருந்தார். நான் போலந்தில் உள்ள ஒரு நகரத்தில் படித்தேன். அவர் வேறு ஒரு நகரத்தில் படித்தார். இருவருக்கும் ஒரே கம்பெனியில் வேலை கிடைத்தது. அங்குதான் அறிமுகம் நடந்தது. நான் சின்ன வயதிலிருந்தே தனிமையில் வாழ்ந்ததால், யாரிடமும் அதிகம் பேசமாட்டேன். ஆலிவரை அலுவலகத்தில் சந்தித்த போதும் அதிகம் பேசவில்லை. அவர் என்னை நிறையச் சிரிக்க வைப்பார். அவர் என் வாழ்க்கைக்குள் வந்த பிறகு நான் மகிழ்ச்சியாக இருப்பதை உணர்ந்தேன்" என்கிறார்.

பிரியங்கா அவரது கணவர் ஆலிவரை அம்மா என்றுதான் அழைக்கிறார். அவருக்கு இளமையிலிருந்து அம்மா பாசம் கிடைக்காததால் அப்படி அழைக்க ஆரம்பித்துள்ளார். ஆலிவருக்கு தமிழ் தெரியாது. அவர் ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்தவர். அவர் அதற்கு அர்த்தம் கேட்டுள்ளார். அம்மா என்பது பெண்பால் என்பதால் அவர் அப்பா என அழைக்கச் சொல்லி இருக்கிறார். கடைசியில் தனது ஏக்கத்தைப் புரியவைத்தவுடன் அவரும் சம்மதித்துவிட்டார்.

தனது மனைவியைப் பற்றி ஆலிவர், 'மிக அன்பானவர். அழகானவர். என் மனைவி மிகவும் வெகுளி. அவர் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்' என்று சொல்கிறார். அவரிடம் தமிழ் வார்த்தைகளைக் கேட்டு அதை அப்படியே பேசி பழகிவருகிறார். இருவரும் சேர்ந்து நண்டு குழம்பு தயாரிக்கிறார்கள். அவர் நண்டைச் சுத்தம் செய்கிறார். மனைவி பிரியங்கா சமையல் பணியை மேற்கொள்கிறார். இந்த ஜோடியை யூடியூப்பில் பலர் வாழ்த்தி வருகிறார்கள். ஒரு தமிழ் பெண் இந்தளவுக்கு முன்னேறிச் சென்றுள்ளதைப் பாராட்டி வருகிறார்கள். பிரியங்கா தன் வாழ்வில் அதிக சோகங்களைச் சந்தித்து விட்டார். இப்போதுதான் அவர் வாழ்வில் ஆலிவர் மூலம் சந்தோஷம் துளிர்க்க தொடங்கி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+