18 வயதுக்குள் மகளை 2,000 பேருடன் உறவுகொள்ள வைத்த வக்கிர தாய்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: சாத்தான் பாலியல் வழிபாட்டு குழுவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகள் 18 வயதை அடையும் முன்பே அவரை கட்டாயப்படுத்தி சுமார் 2 ஆயிரம் ஆண்களுடன் உறவுகொள்ள வைத்துள்ளார்.

வடக்கு இங்கிலாந்தில் வசித்து வருபவர் ஆனாபெல்(48). அவர் தி டெவில் ஆன் தி டோர்ஸ்டெப்: மை எஸ்கேப் ஃப்ரம் எ சேட்டனிக் செக்ஸ் கல்ட் என்ற தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

தாய்

தாய்

ஆனாபெல்லுக்கு 7 வயது இருக்கையில் பாலியல் வழிபாட்டு குழுவின் தலைவர் கொலின் பேட்லியுடன் அவரது தாய் ஜாக்குலின் மார்லிங் உறவு கொள்வதை அவரை பார்க்க வைத்துள்ளனர். ஆனாவுக்கு 11 வயது இருக்கையில் பேட்லி அவரை 2 முறை பலாத்காரம் செய்துள்ளார்.

குழுவாக

குழுவாக

ஆனாவுக்கு 13 வயது இருக்கையில் அவரை அவரது இல்லத்தில் நடந்த கூட்டாக உறவு கொள்ளும் நிகழ்ச்சியில் வலுக்கட்டாயமாக பங்கேற்க வைத்துள்ளனர். பேட்லி ஆனாவை முதல் முறை பலாத்காரம் செய்யும்போது இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் நீ நரகத்திற்கு செல்வாய் என்று கூறி மிரட்டியுள்ளார்.

தேவாலயம்

தேவாலயம்

அந்த வழிபாட்டு குழுவின் தேவாலயத்திற்கு பணம் சம்பாதித்து கொடுக்க ஆனா போன்ற சிறுமிகள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பள்ளி மாணவி

பள்ளி மாணவி

பகலில் பள்ளி மாணவியாகவும், இரவில் செக்ஸ் அடிமையாகவும் இருந்தேன். ஒரு கட்டத்தில் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தற்கொலைக்கும் முயன்றேன் என்று ஆனாபெல் தெரிவித்துள்ளார்.

கர்ப்பம்

கர்ப்பம்

மாற்றாந்தந்தையால் 17 வயதில் கர்ப்பமான ஆனா குழந்தையை பெற்ற பிறகு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு ஓடிவிட்டார். அவர் 18 வயதை அடையும் முன்பு சுமார் 2 ஆயிரம் ஆண்களுடன் உறவு கொண்டுள்ளார். அவரை வலுக்கட்டாயமாக உறவுகொள்ள வைத்தது அவரது தாய்.

2011

2011

இந்த பலாத்கார விவகாரம் வெளியே வந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் பேட்லிக்கு 11 ஆண்டுகளும், ஜாக்குலினுக்கு 12 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களுக்கு கடந்த 2011ம் ஆண்டு தண்டனை கிடைத்த வரை அவர்களை ஆனா சந்திக்கவே இல்லை.

குடும்பத்துடன்

குடும்பத்துடன்

பெற்ற தாயால் சீரழிக்கப்பட்ட ஆனா தற்போது தனது குடும்பத்தாருடன் இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+