6 சிறிய செயற்கைக்கோள்களை விரைவில் விண்ணில் செலுத்த நாசா திட்டம்…
நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விரைவில் 6 சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வாஷிங்டன்; வானிலை, சூறாவளி, பூமியில் கிடைக்கும் எரிபொருள் ஆகியவற்றை அளவிடக் கூடிய ஆறு சிறிய செயற்கைகோள்களை இம்மாதம் தொடக்கம் முதல் விண்ணில் செலுத்த நாசா திட்டமிட்டுள்ளது.
இந்த செயற்கைகோள்கள் சலவை எந்திரம் அளவில் தொடங்கி 181.4 கிகி வரையிலான எடையைக் கொண்டது என திங்கள்கிழமை நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய அளவானது வளர்ச்சிக்கும், விண்ணில் செலுத்தும் செலவை குறைக்கும் என்பதையும் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. மேலும், அவை எளிதில் விண்ணில் பாய ஏதுவாக இருக்கும். இதன் மூலம் பிற திட்ட ராக்கெட்களில் எரிபொருள் நிரப்பவும் இயலும். புதிய தொழில் நுட்பங்களை அதிக செலவின்றி ஆய்வு செய்யவும், அறிவியல் ஆய்வுகளை நடத்தவும் முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்வெளித் திட்டங்களில் அறிவியல் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க சிறிய செயற்கைகோள்களை பயன்படுத்துவது அதிகரித்து வருவதாக நாசாவின் அறிவியல் திட்ட இயக்குனரக இணை நிர்வாகி தாமஸ் துர்புசன் தெரிவித்துள்ளார்.
விண்ணில் இருந்து பூமியில் ஆய்வு நடத்துவதில் புதிய தொழில் நுட்பங்களைக் கொண்டு வர சிறிய செயற்கைக்கோள்கள் வழி வகுக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணில் புதிய தொழில்நுட்பங்களை ஆராயவும் கண்டுபிடிக்கவும் உதவுவதுடன் மாணவர்களுக்கும்,ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றவர்களுக்கும் விண்வெளித் திட்டங்கள் குறித்த பயிற்சி அனுபவம் கிடைக்க சிறிய செயற்கைக்கோள்கள் வாய்ப்பளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமியில் இருக்கும் எரிபொருள்களை கண்டறியும் ராவன் என்ற சிறிய செயற்கைக்கோளை இம்மாதம் விண்ணில் செலுத்த இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications