90 ஆயிரம் வீரர்களை வரச்சொன்ன அமெரிக்கா! நடுங்க வைக்கும் நேட்டோ படைகள்.. தொடங்குகிறது 3ம் உலகப்போர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உக்ரைன் - ரஷ்ய போர் ஒரு பக்கம் தீவிரமாக நிற்காமல் நடந்து கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் தொடங்கிவிட்டது. இதற்கு இடையில் ஈரான் - பாகிஸ்தான் மோதல், வடகொரியா தென்கொரியா மோதல், ஹவுதி - மேற்கு உலக நாடுகள் மோதல் தீவிரம் அடைந்து உள்ளன.

இந்த மோதல்கள் கண்டிப்பாக நீண்ட கால போராக இருக்கும்.. நீண்ட கால போராக இது மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக தற்போது நேட்டோ படைகளை ஒருங்கிணைத்து சுமார் 90000 வீரர்களை வைத்து அமெரிக்கா பயிற்சி எடுக்கிறது. பனிப்போருக்கு பின்பாக முதல்முறை இத்தனை வீரர்களை வைத்து அமெரிக்கா பயிற்சி மேற்கொள்கிறது.

NATO is set to mobilize 90,000 soldiers for the largest military exercise: Is WW3 coming

ரஷ்யா போர்; அமெரிக்கா - ரஷ்யா இடையே 1960களில் நடைபெற்ற பனிப்போருக்கு பின்பாக மிக மிக மோசமான மோதல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்கா, ரஷ்யா இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் உக்ரைன். உக்ரைன் நேட்டோ படையில் இணைய விரும்பியது. இதற்காக முயற்சிகளை செய்தது.

சோவியத் யூனியன் ஒன்றாக இருந்த போது ரஷ்யாவும் - உக்ரைனும் ஒன்றாக இருந்த நாடுகள் ஆகும். அதன்பின் 1991 டிசம்பரில் சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் தனியாக பிரிந்தது. இப்படிப்பட்ட நிலையில் உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு ஆபத்து. ஏற்கனவே ரஷ்யாவை சுற்றி இருந்த பெரும்பாலான பழைய சோவியத் நாடுகள் அமெரிக்காவின் நேட்டோ படையில் இணைந்துவிட்டது. இதில் உக்ரைனும் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு பெரிய சிக்கலாகும். பாதுகாப்பு ரீதியாக ரஷ்யாவிற்கு நேட்டோ வைக்கும் செக்காக இது அமைந்துவிடும். இதன் காரணமாக தற்போது உக்ரைன் ரஷ்யா இடையே போர் நடந்து வருகிறது.

பாலஸ்தீன போர்: இது போக இப்போது பாலஸ்தீனம் - இஸ்ரேல் மோதல் ஏற்பட்டு உள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீன போர் என்பது பாரம்பரியமாக போருக்கு இருக்கும் முக்கியமான காரணம். அது நிலத்தகராறு. அதாவது பாலஸ்தீனம் இருந்த இடத்தில்தான் தற்போதைய இஸ்ரேல் கட்டமைக்கப்பட்டு உள்ளது. 1947ல் இருந்து பாலஸ்தீனத்தை கொஞ்சம் கொஞ்சமாக இஸ்ரேல் ஆக்கிரமித்து வந்தது. தற்போது மீதம் இருக்கும் காஸா பகுதியையும், ஜெருசலேமின் வெஸ்ட் பேங்ங் பகுதிகளையும் கைப்பற்றும் முடிவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

காசாவில் இருந்து பாலஸ்தீன விடுதலை போராட்ட அமைப்பான ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக இந்த தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேலில், இஸ்ரேல் அதிகாரத்தை எதிர்க்கும் தனி பகுதிதான் காசா. இதில் இருந்து இஸ்ரேல் முன்பே வெளியேறிவிட்டது. காரணம் இங்கே உள்ள ஹமாஸ் அமைப்பு. இந்த ஹமாஸ் அமைப்பும் - இஸ்ரேலும்தான் தற்போது பாலஸ்தீனத்திற்காக சண்டை போட்டுகொண்டு இருக்கின்றன.

இந்த இரண்டு நாடுகளை சேர்த்து தற்போது மொத்தம் 8 நாடுகள் போரில் நேரடியாக தலையிட்டுள்ளன. இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், ஈராக், எகிப்து, சிரியா, அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் போரில் நேரடியாக தலையிட்டு உள்ளன. லெபனான், ஈராக், எகிப்து, சிரியா பாலஸ்தீனம் பக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரான் - பாகிஸ்தான்: இன்னொரு பக்கம் பாகிஸ்தானில் உள்ள பலூச்சி போராளிக் குழுவான ஜெய்ஷ் அல் அட்லின் இரண்டு தளங்கள் ஈரான் நாட்டு ஏவுகணைகளால் தாக்கப்பட்டு உள்ளன. ஈரானின் உயரடுக்கு ராணுவ குழு மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

ஏற்கனவே ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அந்த அமைப்பின் இலக்குகளை ஏவுகணைகளால் தாக்கிய ஈரான் தற்போது பாகிஸ்தானில் உள்ள அந்த அமைப்பின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் அல் அட்ல் தீவிரவாத அமைப்பின் முகாம்களில் ஈரான் சரமாரியாக ஏவுகணை வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

பாகிஸ்தானில் இரண்டு இடங்களில் ஈரான் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் ஈரான் பாதுகாப்புப் படையினர் மீது அந்த தீவிரவாத அமைப்பு முன்பு தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக இப்போது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. "இரண்டு தளங்கள் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன" என்று ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கொரியா; வட கொரியாவில் இருந்து தென்கொரியாவிற்கு சொந்தமான தீவில் திடீரென பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. 200 க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளை வீசி வடகொரியா தாக்குதல் நடத்தி உள்ளது என்று சியோலின் பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது. இந்த நடவடிக்கைகள் அமைதிக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாக இருப்பதாகவும் அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் தென்கொரியா கூறி உள்ளது. .

தென் கொரியாவிற்கு சொந்தமான Baengnyeong தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் Yeonpyeong தீவு ஆகிய இரண்டு தீவுகளில் இந்த தாக்குதல் வடகொரியா மூலம் நடத்தப்பட்டு உள்ளது.

2010 ஆம் ஆண்டில் இருந்தே இந்த தீவுகளில் பதற்றம் நிலவி வருகிறது. 2010ல் இந்த தீவுகளின் மீது வடகொரியா சரமாரியாக குண்டுகள் வீசியதில் இருந்து இரு கொரியாக்களுக்கும் இடையே அங்கே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதை சுற்றி உள்ள கடல் பகுதிகளில் மிகத் தீவிரமான இராணுவ பாதுகாப்பு போடப்பட்டு கடந்த 13 ஆண்டுகளாக போர் எதுவும் நடக்காமல் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது.

இந்த நிலையில்தான் அங்கே திடீரென வடகொரியா பீரங்கி தாக்குதல் நடத்தி உள்ளது. தென் கொரியா மற்றும் அதன் அமெரிக்க நட்பு நாடுகளுக்கு எதிரான போருக்கு தயாராக இருப்பதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கடந்த சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்து இருந்தார். இந்த எச்சரிக்கையை தொடர்ந்தே தற்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

தென்கொரியாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த சில வருடம் முன்புதான் இரண்டு நாட்டு அதிபர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள், இரண்டு நாட்டு அதிபர்களும் ஒன்றாக எல்லைகளை கடந்து நட்பை வெளிப்படுத்தினார்கள்.

ஆனால் தற்போது கடந்த ஒரு மாதமாக வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே மிக தீவிரமாக சண்டை நடந்து வருகிறது. இப்போது இந்த பிரச்சனை போராக மாற வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

ஹவுதி மோதல்: ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்பை சர்வதேச தீவிரவாத குழுவாக அறிவித்தது அமெரிக்கா. ஹவுதி - அமெரிக்கா இடையே செங்கடலில் கடுமையான மோதல் நிலவி வருகிறது.

3 ஆண்டுக்குமுன் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து அந்த அமைப்பு நீக்கப்பட்டது. மீண்டும் தற்போது அமெரிக்க அதிபர் பிடன் முன்னெடுப்பில் ஹவுதி தீவிரவாத லிஸ்டில் சேர்க்கப்பட்டு உள்ளது.

ஏமனில் போராடி வரும் ஹவுதி போராளிகள் மீது அமெரிக்கா, யுகே ஆகியவை கூட்டு தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளன. கடுமையான தாக்குதல்களை இரண்டு தரப்பும் சேர்ந்து மேற்கொண்டு வருகின்றன. இதனால் சர்வதேச அளவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

மேலும் ஏமனில் போராடி வரும் ஹவுதி போராளிகளை சர்வதேச தீவிரவாதிகளாக அறிவிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஏமன் விடுதலை தொடங்கி இஸ்ரேல் போருக்கு எதிராக அந்த அமைப்பு போராடி வருகிறது.

தாக்குதல்: ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் நாட்டின் ஒரு பகுதியில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. கப்பல்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் ஹவுதிகள் நடத்தும் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக தாக்குதல் நடத்தப்படுகிறது.

நேற்று ஹவுதி மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதலை அமெரிக்கா மேற்கொண்டு உள்ளது. அமெரிக்க செங்கடலில் மாறி மாறி நடத்தப்படும் தாக்குதல்கள் காரணமாக போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.நேற்று காலைதான் ஏமன் கடற்கரைக்கு அருகே உலவிக்கொண்டு இருந்த அமெரிக்க கப்பல் ஈரானிய ஆதரவு ஹவுதி போராளிகளால் தாக்குதல் முயற்சிக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது. ஹவுதி போராளிகளால் ஏவப்பட்ட ஏவுகணைகள் அமெரிக்க கப்பலை தாக்கி கடுமையான சேதங்களை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+