என் பாட்டிக்கு 'கிப்ட்' கொடுத்த மோடிக்கு தேங்க்ஸ்.. நவாஸ் மகள் மரியம் ஷெரீப்
இஸ்லாமாபாத்: எனது பாட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி கிப்ட் கொடுத்து அனுப்பியுள்ளார். இதற்காக அவருக்கு நான் நன்றி சொல்கிறேன் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் ஷெரீப் கூறியுள்ளார்.
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் மரியம் எழுதியுள்ளார். நவாஸ் ஷெரீப், மோடி பதவியேற்புக்கு அழைக்கப்பட்டது முதல் உற்சாகமாக அதுகுறித்து எழுதி வருகிறார் மரியம்.
இந்த நிலையில், தனது பாட்டிக்கு அதாவது நவாஸ் ஷெரீப்பின் தாயாருக்கு மோடி சில பரிசுகளை கொடுத்து அனுப்பியுள்ளது குறித்து பூரிப்புடன் டிவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் மரியம்.

அப்பாவைக் கவர்ந்த பரிசு
எனது பாட்டிக்கு பிரதமர் மோடி கொடுத்துள்ள பரிசுப் பொருட்கள் எனது தந்தையை வெகுவாக கவர்ந்து விட்டன. தனது தாயாருக்கு மோடி கொடுத்த ஷால் குறித்து அவர் பெருமிதம் அடைந்துள்ளார். அவரே மோடி கொடுத்த பரிசை தனது தாயாரிடம் நேரடியாக கொடுத்து சந்தோஷப்பட்டார் என்று கூறியுள்ளார்.

நன்றி மோடி
மேலும் அவர் கூறுகையில், எனது பாட்டிக்கு அழகான ஷால் கொடுத்து கெளரவித்த நரேந்திர மோடிக்கு எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் மரியம் தெரிவித்துள்ளார்.

என்னென்ன பரிசு..
நவாஸ் ஷெரீப் நேற்று தன்னைச் சந்தித்தபோது அவரிடம் அவரது தாயாருக்காக ஒரு அழகிய ஷால், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எழுதிய கவிதைத் தொகுப்பு ஆகியவற்றைப் பரிசாக அளித்தார் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

வாரம் ஒரு முறை தாயாருடன் சந்திப்பு
நவாஸ் ஷெரீப்பின் தாயார் இஸ்லாமாபாத்தில்தான் வசித்து வருகிறார். இருப்பினும் அவரை வாரம் ஒருமுறைதான் பார்ப்பாராம் ஷெரீப்.

மோடியின் தாயார் இனிப்பு ஊட்டியதைப் பார்த்து நெகிழ்ச்சி
இந்த நிலையில் மோடி தனது தாயாரைச் சந்தித்தபோது அவர் தனது மகனுக்கு இனிப்பு ஊட்டிய காட்சியை டிவியில் பார்த்து நெகிழ்ச்சி அடைந்தாராம் ஷெரீப்பின் தாயார். மேலும் கண்ணீரும் விட்டுள்ளார். ஷெரீப்பும் இதைப் பார்த்து நெகிழ்ச்சி அடைந்தாராம்.

மோடியிடம் பகிர்ந்த ஷெரீப்
இந்த விவரத்தை மோடியைச் சந்தித்தபோது பகிர்ந்து கொண்டார் ஷெரீப். இதையடுத்தே ஷெரீப்பின் தாயாருக்கும் அழகிய பரிசை மோடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications