'யார் அந்த நபர்?' 6 மாதங்களுக்கு பின் கொரோனா பரவியது எப்படி.. ஒரே நாளில் கண்டறிந்த நியூசிலாந்து அரசு
வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டில் சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவருக்கு யார் மூலம் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதை அந்நாட்டு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் வைரஸ் பரவலை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும் என அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்,
உலகின் பல நாடுகளும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். வல்லரசு நாடுகள் கூட கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.
இருப்பினும், சில நாடுகள் மிகச் சிறப்பான நடவடிக்கை மூலம் கொரோனா பாதிப்பை வெற்றிகரமாகக் கட்டுக்குள் வைத்துள்ளன அதில் முதன்மையானது நியூசிலாந்து.

நியூசிலாந்து கொரோனா
குட்டி தீவு நாடான நியூசிலாந்து வைரஸ் பரவலைச் சிறப்பாகக் கட்டுக்குள் வைத்துள்ளது. நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னின் சிறப்பான நடவடிக்கை மூலம் வைரஸ் பரவல் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டு பொதுமக்கள் மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். இந்தச் சூழலில் சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு நபருக்கு மட்டும் அங்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக 3 நாட்களுக்கு அங்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

3 நாள் ஊரடங்கு
அந்த நபருக்கு டெல்டா கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தால் நிலைமையைச் சமாளிப்பது சிரமம் என்பதால் 3 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்திருந்தார். மேலும், அந்த நபருக்கு எப்படி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதைக் கண்டறியும் Contract tracing நடைமுறையும் தீவிரப்படுத்தப்பட்டது. ஆக்லாந்தைச் சேர்ந்த அந்த நபருக்கு ஆஸ்திரேலியா நாட்டில் பரவும் டெல்டா வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

எப்படி ஏற்பட்டது
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட Contract tracing முறையில் யார் மூலம் ஆக்லாந்து நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறுகையில், "ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து, கடந்த சில நாட்களுக்கு முன் வந்த ஒருவர் விடுதியில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவர் மூலமே இந்த ஆக்லாந்து நபருக்கு டெல்டா கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது Contract tracingஇல் தெரிய வந்துள்ளது.

எளிதாகக் கட்டுப்படுத்தலாம்
அந்த நபர் கடந்த சில நாட்களுக்கு முன் தான் நியூசிலாந்து வந்துள்ளார். இதன் மூலம் வைரஸ் பாதிப்பு இப்போது தான் நியூசிலாந்திற்குள் நுழைந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. வைரஸ் பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரிந்துள்ளதால், அந்தக் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்து வைரஸ் பரவுவதை நிறுத்த முடியும்.

தேவையான நடவடிக்கை
நியூசிலாந்தில் ஒரே நாளில் 11 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் 21 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. நிலைமை சீராவதற்கு முன் மேலும் மோசமாகும் என்பது எங்களுக்குத் தெரியும். அதை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதேநேரம் வைரஸ் நியூசிலாந்தில் நுழைந்து சில காலம் மட்டுமே ஆவதால், மிக மோசமான பாதிப்பு ஏற்படாது என்றே நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார்.

எப்படிப் பரவியது
விடுதியில் தனிமையிலிருந்த அந்த நபருக்கு சிட்னி நகரிலிருந்து வந்த 2 நாட்களில் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஒரு வாரம் கழித்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், தனிமையிலிருந்த அந்த நபர் மூலம் கொரோனா பரவல் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து நியூசிலாந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நபர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 1000 பேருக்கு கொரோனா சோதனை நடத்தவும் அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

நியூசிலாந்து
மற்ற நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், நியூசிலாந்து ஜீரோ கொரோனா பாலிசியை கொண்டுள்ளது. அதாவது கொரோனாவை முற்றிலுமாக ஒழித்த பிறகே தளர்வுகள் என்ற முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால்தான் 1.5 ஆண்டுகளில் வெறும் 21 பேர் மட்டுமே அங்கு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications