உலகிலேயே ரஷ்யாவிடம் மட்டும் தான் இருக்கு.. உக்ரைனை தாக்க புதின் எடுத்த பேராயுதம்.. அலறும் அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யா மீது உக்ரைன் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் வழங்கிய ஏவுகணைகளை வைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ரஷ்யாவும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு ரஷ்யா பயன்படுத்திய ஏவுகணையின் பெயர் ஒரெஷ்னிக். ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய இந்த ஏவுகணை உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை என்று விளாடிமிர் புதின் திடுக்கி வைக்கும் தகவலை தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 3வது ஆண்டை நெருங்க உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனல்ட் டிரம்ப் வென்ற நிலையில் இந்த போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை கையை மீறி சென்றுவிட்டது.

ukraine russia vladimir putin

அதாவது தற்போது உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் என்பது உக்கிரமடைந்துள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் தான் காரணம். அதாவது ரஷ்யாவை சமாளிக்க அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தான் உக்ரைனுக்கு உதவி வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் சார்பில் உக்ரைனுக்கு ஏவுகணைகள் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த ஏவுகணைகள் என்பது உக்ரைனின் பாதுகாப்புக்காக மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. மேலும் தங்களின் அனுமதியின்றி அதனை பயன்படுத்த தடையும் விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இந்த ஏவுகணைகளை ரஷ்யா மீது தாக்க இருநாடுகளும் அனுமதி வழங்கி உள்ளன. இதனால் உக்ரைனும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் வழங்கிய ஏவுகணைகளை ரஷ்யா மீது ஏவி தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடியாக உக்ரைன் மீது ரஷ்யாவும் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. உக்ரைனின் தாக்குதலுக்கு பதிலடியாக ரஷ்யா இந்த ஏவுகணை தாக்குதலை தொடங்கி உள்ளது. இதனால் ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. உக்ரைனில் உள்ள டினிப்ரோ நகரின் மீது நேற்று முன்தினம் ரஷ்யா புதிய வகை ஹைப்பர் சோனிக் ஏவுகணையை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலில் 2 பேர் காயமடைந்துள்ளனர். இந்த ஹைப்பர் சோனிக் ஏவுகணையின் பெயர் Oreshnik. இது ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

இதுபற்றி விளாடிமிர் புதின் கூறுகையில், ‛‛நான் நேற்று ஆயுதப்படை வீரர்கள், ரஷ்யா மக்களிடம் ஒன்றை கூறினேன். ரஷ்யாவை மிரட்டுவோர் மீது மீடியம் ரேஞ்ச் ஏவுகணை அமைப்பு மூலம் தாக்குதல் நடத்தப்படும் என்று கூறியிருந்தேன். இந்த ஏவுகணையின் பெயர் ஒரெஷ்னிக் (ஹேசல் மரம்) ஏவுகணை. இது அணு ஆயுதம் அற்ற பாலிஸ்டிக் ஏவுகணை வகையை சார்ந்தது.

இதற்கான சோதனை வெற்றிக்கரமாக நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையை நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்த ஏவுகணையை நாம் இருப்பு வைப்பதோடு தாக்குதலுக்கு தயாராக வைத்திருக்க வேண்டும். இன்னும் ஒன்றை நான் கூறி கொள்ள விரும்புகிறேன் ஒரெஷ்னிக் ஏவுகணை என்பது ரஷ்யாவின் பழைய தொழில்நுட்பத்தில் இருந்து நவீனப்படுத்தப்பட்ட ஏவுகணை மட்டுமில்ல. முந்தைய தலைமுறை ஏவுகணையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி தயாரித்துள்ளோம்.

தற்போது நமக்கான எதிரிகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இத்தகைய சூழலில் இதுபோன்ற ஆயுதங்கள் நமக்கு மிகவும் தேவையான ஒன்றாக அமைகிறது. நமக்கு தெரிந்து இதுபோன்ற ஏவுகணையை உலகில் வேறு எந்த நாடும் கொண்டிருக்கவில்லை. இந்த ஏவுகணையை இடைமறித்து தாக்கும் தொழில்நுட்பம் வேறு எங்கும் இல்லை. இதனால் ஏவுகணை அழிக்க முடியாது.ஆனால் விரைவில் அல்லது சிறிது காலத்துக்கு பிறகு அதற்கான தொழில்நுட்பம் வரலாம். அப்படியான சூழலிலும் ஏவுகணையில் செய்ய வேண்டிய மாற்றம் பற்றிய விபரம் நம்மிடம் உள்ளது. இதனால் தொடர்ந்து நாம் புதிய சிஸ்டம் பற்றிய சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

ரஷ்யாவை தாக்க உக்ரைனுக்கு ஏவுகணை கொடுத்த அமெரிக்கா மற்றும் பிரிட்டனை மிரட்டும் வகையில் இந்த செய்தியை விளாடிமிர் புதின் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த ஏவுகணை பற்றி அமெரிக்கா, பிரிட்டன் உள்பட நேட்டோ நாடுகள் ஆலோசனையை தொடங்கி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+