இந்தியாவை எந்த வல்லரசு நாடாலும் அசைக்க முடியாது - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஓபன் டாக்
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் சனிக்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் நிலையில் மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பொருளாதார தேக்க நிலைக்கு இம்ரான் கானின் மோசமான அணுகுமுறையே காரணம் என்ற குற்றச்சாட்டை முன் வைத்த எதிர்கட்சிகள், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். கடந்த ஞாயிறு அன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்தது.

நம்பிக்கையில்லா தீர்மானம் ரத்து
இதற்காக கடந்த ஞாயிறு அன்று பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது. அப்போது பேசிய பாகிஸ்தான் சட்ட அமைச்சர் பவாத் உசேன், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பதாக குற்றம்சாட்டினார். இதனை ஏற்ற பாகிஸ்தான் துணை சபாநாயகர், நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரத்து செய்தார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு
இதனை தொடர்ந்து பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் ஆரிஃப் அல்வி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்ததுடன் இம்ரான் கானே காபந்து பிரதமராக நீடிப்பார் என்றும் 90 நாட்களில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அறிவித்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்தனர்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் ரத்து செய்தது செல்லாது என தீர்ப்பளித்தது. மேலும் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பான குடியரசுத் தலைவரின் உத்தரவையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

ஏப்ரல் 9 ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம்
இது குறித்து கருத்து தெரிவித்த இம்ரான் கான் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்பதாக கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 9 ஆம் தேதி மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

இம்ரான் கானின் அரசு தப்புமா?
342 இடங்களை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 172 எம்.பிக்களின் ஆதரவு இம்ரான் கானுக்கு தேவை. ஆனால், கூட்டணி கட்சிகளும், தெஹ்ரிக் கட்சிகளின் எம்.பிக்களுமே இம்ரான் கானுக்கு எதிராக நின்றதால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவர் வெற்றிபெறுவதற்கான சாத்தியம் குறைவாகவே பார்க்கப்படுகிறது.

இம்ரான் கான் கருத்து
இந்த நிலையில் இம்ரான் கான் வெள்ளிக்கிழமை மாலை மக்களிடம் உரையாற்றியதாவது, "நான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் நான் வருத்தம் அடைந்து இருக்கிறேன். துணை சபாநாயகர் வெளிநாட்டு சதி தொடர்பாக விசாரித்த நிலையில் உச்சநீதிமன்றமும் விசாரணை நடத்தி இருக்க வேண்டும்.

குதிரை பேரம்
இளைஞர்களே பாகிஸ்தானின் எதிர்காலம். தங்கள் மனசாட்சியை விற்கும் தலைவர்கள், இளைஞர்களுக்கு எப்படி முன்னுதாரணமாக இருப்பார்கள். எல்லாம் குதிரை பேரம். எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஆடுகளை போல விற்கப்பட்டார்கள். எம்.பிக்கள் விற்கப்பட்ட விதமும் வாங்கப்பட்ட விதமும் வாழைப்பழ குடியரசுகளில் கூட காணாத ஒன்று.

நாம் அடிமைகளாக இருக்க வேண்டுமா?
ஊடகங்களுக்கு வெட்கமே இல்லை. அரசு கவிழ்வதை கொண்டாடுகிறார்கள். அமெரிக்க அதிகாரிகள் மக்களை சந்திப்பதை அறிந்தோம். அதன் பின்னர் முழு திட்டத்தையும் புரிந்து கொண்டோம். மக்கள் தங்களுக்கு என்ன தேவையோ அதை முடிவு செய்யட்டும், நாம் அடிமைகளாக இருக்க வேண்டுமா என்ன? நம் நாட்டின் இறையாண்மை உங்கள் கையில் இருக்கிறது. அதை நீங்கள் பாதுகாக்க வேண்டும்.

இந்தியாவை அசைக்க முடியாது
இந்தியா தங்களை நினைத்து பெருமைப்பட்டுக்கொள்கிறது. எந்த வல்லரசு நாடாலும் இந்தியாவில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது. நாம் ஒன்றும் டிஸ்யூ பேப்பர் இல்லை. பயன்படுத்திவிட்டு தூக்கி வீசுவதற்கு. வெளியே வாருங்கள். போராடுங்கள். விடுதலையை காப்பாற்றுங்கள். இந்த நாடகத்தை எதிர்த்து போராட வேண்டும்." எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்! -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
பாகிஸ்தான் ராணுவம் வெறியாட்டம்.. காபூல் மருத்துவமனையில் 400 பேர் பலி..தலிபான்கள் கடும் குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications