கிம் ஜோங்கின் பரம எதிரி.. 40 வருடம் கழித்து மீண்டும் வரும் சித்தப்பா பியாங்.. வடகொரியாவில் டிவிஸ்ட்
வடகொரியாவில் அரசியல் பிரச்சனை நிலவி வரும் நிலையில் அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன்னின் சித்தப்பா கிம் பியாங் இல் மீண்டும் அந்நாட்டு அரசியலில் லைம் லைட்டிற்கு திரும்பி இருக்கிறார்.
பியாங்யாங்: வடகொரியாவில் அரசியல் பிரச்சனை நிலவி வரும் நிலையில் அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன்னின் சித்தப்பா கிம் பியாங் இல் மீண்டும் அந்நாட்டு அரசியலில் லைம் லைட்டிற்கு திரும்பி இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது.
Recommended Video
வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் உடல் நிலை குறித்து கடந்த 2 வாரமாகவே நிறைய செய்திகள், வதந்திகள் வெளியாகி வருகிறது. கிம் ஜோங் உன்னுக்கு கடந்த 12ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவரின் உடலின் மோசமானதாக கூறப்பட்டது.
வடகொரியாவின் இருக்கும் வோன்சோன் நகரத்தில் கிம் இருப்பதாக செய்திகள் வந்தது. அங்கு கிம் குடும்பத்திற்கு சொந்தமான ரிசார்ட் ஒன்று இருக்கிறது. அங்கு அவர் மிக மோசமான உடல்நிலையுடன் இருப்பதாக அமெரிக்கா செய்தி ஊடகமான சிஎன்என்உட்பட பல்வேறு செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தது.

வடகொரியாவின் அடுத்த அதிபர் யார்?
இந்த நிலையில் வடகொரியாவின் அடுத்த அதிபர் யார் என்று இப்போதே கேள்விகள் எழ தொடங்கி உள்ளது. இது தொடர்பாக இப்போதே நிறைய விவாதங்கள், சர்ச்சைகள் ஏழ தொடங்கி உள்ளது. இந்த அறியணைக்காக பலருக்கு இடையே போட்டிகள் நிலவி வருகிறது. கிம் ஜோங் உன்னின் தங்கை கிம் யோ ஜோங் அங்கு அதிபர் ஆக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ஆனால் புதிய திருப்பமாக கிம் ஜோங் உன்னின் சித்தப்பா கிம் பியாங் இல் மீண்டும் அந்நாட்டு அரசியலில் முக்கியத்துவம் பெற தொடங்கி இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது.

புது நபர் யார்?
இவர் அந்நாட்டு அதிபர் ஆக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். யார் இந்த புது கேரக்டர், திடீர் என்று எங்கிருந்து வந்தார் என்று கேள்விகள் எழலாம். அது ஒரு 40 வருட குடும்ப சண்டைக்கான வரலாறு. கிம் ஜோங் உன்னின் தாத்தா கிம் இல் சங்தான் அந்நாட்டை நிறுவியவர். வடகொரியாவின் தந்தை என்று அழைக்கப்படும் கிம் இல் சங்தான் இந்த கதையின் தொடக்கம். இவருக்கு அதிகாரபூர்வமாக நிறைய மனைவிகள், அதிகாரபூர்வமற்ற வகையில் நிறைய மனைவிகள் இருந்துள்ளனர்.

பெரிய சண்டை
இதில் கிம் இல் சங்கிற்கு பிறந்தவர்தான் கிம் ஜோங் சங். இந்த கிம் ஜோங் சங்தான் தற்போது இருக்கும் கிம் ஜோங் உன்னிற்கு அப்பா. கிம் ஜோன் உன்னின் தாத்தா கிம் இல் சங்கிற்கும் அவரின் செக்ரட்டரி பெண் ஒருவருக்கும் பிறந்த குழந்தைதான் கிம் பியாங் இல். அதாவது இந்த கிம் பியாங் இல் தற்போது இருக்கும் கிம் ஜோங் உன்னின் சித்தப்பா. இவர்தான் புதிதாக வந்திருக்கும் கேரக்டர். தாத்தா கிம் இல் சங் அதிபராக இருந்த போதே, அங்கு நிறைய சண்டைகள் வந்தது.

ஏலக்காரம்
தாத்தா கிம் இல் சங் அதிபராக இருந்த போதே கிம் ஜோங் உன்னின் அப்பா கிம் ஜோங் சங் மற்றும் சித்தப்பா கிம் பியாங் இல் இருவருக்கும் நிறைய சண்டை வந்தது. இதில் சித்தப்பா கிம் பியாங் இல் நிறைய பெண்கள் உடன் தொடர்பு கொண்டு நிறைய கெட்ட பெயர்களை பெற்றுக்கொண்டனர். அதேபோல் செக்ட்ராக்டரிக்கு பிறந்த மகன் என்ற ஏலக்காரமும் இவருக்கு எதிராக வைக்கப்பட்டது.

வெளியே சென்றார்
இது தொடர்பாக தாத்தா கிம் இல் சங்கிடம் கிம் ஜோங் உன்னின் அப்பா கிம் ஜோங் சங் தொடர்ந்து புகார் அளித்து வந்தார். நாளுக்கு நாள் இந்த அழுத்தம் அதிகரித்து. இதன் முடிவில் 1979ல் தாத்தா கிம் இல் சங் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்தார். அதன்படி சித்தப்பா கிம் பியாங்கை நாடு கடத்தி நாட்டை விட்டு வெளியே அனுப்பினார். இது தாத்தா கிம் இல் சங் இறந்த பின் பெரிய பிரச்சனை ஆனது. தாத்தா கிம் இல் சங் இறந்த பின் யார் அதிபர் ஆவது என்று பிரச்சனை வந்தது.

சண்டை முடிந்தது
தொடர்ந்து நீடித்த இந்த பிரச்சனையின் முடிவில் 1994ல் கிம் ஜோங் உன்னின் அப்பா கிம் ஜோங் சங் அதிபராக பதவி ஏற்றார். நாட்டிற்குள் அப்போதும் சித்தப்பா கிம் பியாங் இல் அனுமதிக்கப்படவில்லை. 2011 வரை கிம் ஜோங் உன்னின் அப்பா கிம் ஜோங் சங் அதிபராக இருந்தார். அதன்பின் 2011 உடனடியாக அப்பா இறந்ததும் கிம் ஜோங் உன் அதிபராக பதவி ஏற்றார். இத்தனை வருடங்கள் சித்தப்பா கிம் பியாங் இல் மட்டும் தனியாக நாட்டிற்கு வெளியே வசித்து வந்தார்.

வெளியுலக அரசியல்
ஆனால் இந்த 40 வருடங்கள் சித்தப்பா கிம் பியாங் இல் தனியாக இல்லை. 40 வருடங்கள் இவர் உருவாக்கிய அரசியல் காண்டாக்ட்தான் தற்போது இவரின் மீது கவனத்தை குவித்து இருக்கிறது. 40 வருடங்களில் பெரும்பாலான வருடம் இவர் சீனாவில் இருந்துள்ளார். அதன்பின் போலந்து, இங்கிலாந்து, ஹங்கேரி, பின்லாந்து, பல்கெரியா, செஸ் என்று பல நாடுகளுக்கு சுற்றி திரிந்து உள்ளார். ரஷ்யாவுடன் மிக நெருக்கமாக இருந்துள்ளார்.

அமெரிக்கா சென்றார்
அவ்வப்போது அமெரிக்காவிற்கும் சித்தப்பா கிம் பியாங் இல் சென்று வந்துள்ளார். இதனால் அவருக்கு உலகம் முழுக்க பெரிய அளவில் அரசியல் காண்டாக்ட் கிடைத்துள்ளது. கிம் ஜோங் உன் போல இல்லாமல் அவருக்கு அண்டை நாடுகளில் பெரிய அளவில் நட்பு கிடைத்துள்ளது. இன்னொரு பக்கம் தென் கொரியா கிம் ஜோங் உன்னை விட சித்தப்பா கிம் பியாங் இல் உடன்தான் நெருக்கமாக இருந்துள்ளது.

ராணுவம் கட்டுப்பாடு
அதோடு வடகொரியா ராணுவத்தின் மூத்த அதிகாரிகள், தளபதிகள் உடனும் சித்தப்பா கிம் பியாங் இல் நெருக்கமாக இருந்துள்ளார். இவர் பேச்சை சொன்னவுடன் கேட்க அங்கு ஆட்கள் இருக்கிறார்களாம். சித்தப்பா கிம் பியாங் இல்லிற்கும் கிம் ஜோங் உன்னிற்கும் உறவு பெரிதாக இல்லை. சித்தப்பா கிம் பியாங் இல்லை தொடக்கத்தில் இருந்தே கிம் ஜோங் உன் வெறுத்து வந்தார். முக்கியமாக சித்தப்பா கிம் பியாங் இல்லின் மச்சானுக்கு தூக்கு தண்டனை கூட வழங்கி பகீர் கிளப்பியவர்தான் கிம் ஜோங் உன். 2013ல்தான் இந்த பிரச்சனை நடந்தது .

சமாதானம் செய்தார்
இந்த நிலையில்தான் கடந்த வருடம் கிம் ஜோங் உன் உடன் சமாதானம் ஆகி சித்தப்பா கிம் பியாங் இல்மீண்டும் வடகொரியாவுக்கு வந்தார். ஆனால் வடகொரியாவுக்கு மீண்டும் வந்தாலும் அவர் வீட்டு சிறையில்தான் இருக்கிறார். வீட்டில் இருந்து இவர் பல விஷயங்களை கட்டுப்படுத்துகிறார் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில்தான் சித்தப்பா கிம் பியாங் இல் இந்த முறை அதிபராக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

தங்கை நிலை என்ன?
இவருக்கு 67 வயது ஆகிறது. நிறைய அரசியல் அனுபவம் இருப்பதாலும், ராணுவத்துடனும் சீனாவுடனும் நெருக்கமாக இருப்பதாலும் சித்தப்பா கிம் பியாங் இல் அதிபராக வாய்ப்புள்ளது என்கிறார்கள். அதேபோல் கிம் ஜோங் உன்னின் தங்கை கிம் யோ ஜோங் மிகவும் இளமையானவர். 32 வயதுதான் இவருக்கு ஆகிறது. கிம் ஜோங் உன் அருகிலேயே இருந்தாலும் அவர் பெண் என்பதால் ஆவதும் கடினம் என்கிறார்கள்.

டிவிஸ்ட்
ஆண் ஆதிக்கம் அதிபர் நிறைய உள்ள வடகொரியா அரசியலில் தங்கை கிம் யோ ஜோங் அதிபர் ஆவது கடினம். அங்கு இருக்கும் தலைகள் தங்கை கிம் யோ ஜோங்அதிபர் ஆக அனுமதிக்காது. இவர் அதிபர் ஆனால் பெரிய பிரளயம் வெடிக்கும். ராணுவ புரட்சி கூட வெடிக்கும் என்று பேசுகிறார்கள். இதனால் அவருக்கு பதில் சித்தப்பா கிம் பியாங் இல் அதிபர் ஆக அதிகம் வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். கிம் பியாங் இல்லின் வருகை வடகொரியா அரசியலில் பெரிய டிவிஸ்ட்டாக மாறியுள்ளது.
-
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம்












Click it and Unblock the Notifications